சில வரிகள்...
தமிழக அரசு பாடத்திட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள், இன்று துவங்கி, வரும் 14ம் தேதி வரை நடக்க உள்ளன. பிளஸ் 1 வகுப்புகளுக்கு, வரும் 15 முதல் 21ம் தேதி வரை, 10ம் வகுப்புக்கு, 22 முதல் 28ம் தேதி வரை, செய்முறை தேர்வுகள் நடக்க உள்ளன. எழுத்து தேர்வுகள், பிளஸ் 2க்கு மார்ச் 3 முதல் 25 வரை, பிளஸ் 1க்கு, மார்ச் 5 முதல் 27 வரை, 10ம் வகுப்புக்கு, 28 முதல் ஏப்., 15ம் தேதி வரை நடக்க உள்ளன. மாணவர்களின் கற்றல் அடைவு திறனை சோதிப்பதற்காக, ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்பட்ட தேர்வில், 32,838 பள்ளிகளில் இருந்து, 39.98 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில், 32.02 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். இது, 80.4 சதவீதம். சென்னையில் இருந்து, 366 பள்ளிகளை சேர்ந்த 6,618 மாணவர்கள் பங்கேற்றனர். மொத்தம், 10,641 மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில், 62.2 சதவீதத்தினர் மட்டுமே பங்கேற்றனர்.