சில வரி செய்தி
ஏப்., 1 வருடாந்திர கணக்கு முடிவு காரணமாக, வங்கிகளுக்கு விடுமுறை. எனவே, தமிழக அரசின் கீழ் பணிபுரியும், 9.30 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்; 7.05 லட்சம் ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் ஆகியோரின் மார்ச் மாத சம்பளம், ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் ஆகியவை, ஏப்., 2ம் தேதி, அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.கோடை விடுமுறையை ஒட்டி, அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில், வழக்கமாக சென்னையில் இருந்து இயக்கப்படும் 2,200 பஸ்களோடு, தினமும் 300 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. ஏப்., மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். இறுதி நேர நெருக்கடியைத் தவிர்க்க, www.tnstc.in என்ற இணையதளம் அல்லது TNSTC மொபைல் போன் செயலி வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளலாம்.மாதத்தின் கடைசி வேலை நாளில், ரேஷன் கடைகளில் இருப்பு விபரம் சரிபார்க்கப்படும். அன்று பொருட்கள் வழங்கப்படாது. இம்மாத கடைசி வேலை நாள், வரும், 29ம் தேதி சனிக் கிழமை வருகிறது. மறுநாள் 30ம் தேதி தெலுங்கு வருட பிறப்பு, 31ல் ரம்ஜான் பண்டிகை வருகிறது. இரு நாட்களும் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை. எனவே, வரும் 29ம் தேதி ரேஷன் கடைகளில், வழக்கம்போல் உணவுப் பொருட்களை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.