உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சவுக்கு சங்கர் வீட்டின் மீது தாக்குதல் நடத்திய கும்பல்!

சவுக்கு சங்கர் வீட்டின் மீது தாக்குதல் நடத்திய கும்பல்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: துப்புரவு தொழிலாளிகள் என்று கூறிக் கொண்டு 50 பேர் கொண்ட கும்பல் நானும் என் தாயாரும் குடியிருக்கும் வீட்டின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது என யூடியூபர் சவுக்கு சங்கர் குற்றம் சாட்டியுள்ளார்.அவரது அறிக்கை: இன்று (மார்ச் 24) காலை 9.30 மணி முதல், துப்புரவு தொழிலாளிகள் என்று கூறிக் கொண்டு 50 பேர் கொண்ட கும்பல் நானும் என் தாயாரும் குடியிருக்கும் வீட்டின் மீது சராமரியாக தாக்குதல் நடத்தி வருகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=zelul6id&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நான் வெளியே கிளம்பிய 5 நிமிடத்தில் வந்த இந்த கும்பல், வீட்டின் கதவை உடைத்து, உள்ளே நுழைந்து, படுக்கையறை, சமையலறை, சமையல் பொருட்கள் என அத்தனை பொருட்களின் மீதும் சாக்கடையையும் மலத்தையும் கொட்டினர். என்ன நடந்தது என்று என் தாயாருக்கு போன் செய்தபோது அந்த போனை வாங்கி வீடியோ காலில் வந்து கொலை மிரட்டல் விடுத்தனர். காவல் கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாக தகவல் தெரிவித்தேன். ஒரே ஒரு உதவி ஆய்வாளரும் ஒரு காவலரும் மட்டும் வந்தனர். 9.30 மணி முதல் இதுவரை வரை போராட்டம் நடத்தியவர்கள் அந்த இடத்தை விட்டு அகலவில்லை. அந்த இடத்திற்கு சென்ற ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். யாருடைய தூண்டுதலில் இந்தத் தாக்குதல் நடைபெறுகிறது என்பதை சொல்ல வேண்டியதில்லை. இவ்வாறு சவுக்கு சங்கர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 42 )

Saravan R
மார் 26, 2025 23:08

Edhu மிகவும் கொடுமை , இதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை காவல் துறை எடுக்க வேண்டும் .


Raj
மார் 26, 2025 06:48

தமிழக போலீஸ் - போலிஸ். இது மட்டுமல்ல மற்ற துறைகளும் மோசம். பாக்கெட்ல காசு பிச்சை போடாம எந்த வேலையும் நடக்காது


Ethiraj
மார் 26, 2025 05:46

Police status and reputation is lowest due to political interference. Antisocial elements are becoming heros


Murugan Murugan
மார் 25, 2025 16:26

அதிகாரவர்க்கம் அரசாங்கத்தின் உச்சம்.நியாயமற்ற செயல். வழக்கில் சந்திக்கணும். வயது முதிர்ந்த தாயை அவமானப்படுத்த எப்படிடா மனம் வந்தது. தர்மம் தோற்றதால் வரலாறு கிடையாது ஆட்சி மாறும்.காலமும் வரும்.


Raghavendran G
மார் 25, 2025 16:06

தமிழக மக்கள் காசுக்கு விலை போனவர்கள்


venkatapathy
மார் 25, 2025 13:14

நேற்று ஒருவன் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து விட்டதாக கையில் கட்டுடன் வந்தாலே தப்பிக்கவா ?


Shanmugam N. P
மார் 25, 2025 12:52

திராவிட அயோக்கியர்களை அப்புறப்படுத்தவேண்டும்


HoneyBee
மார் 25, 2025 12:10

அப்பா தூக்கத்தில் இருந்து எழுந்துக்கலயா... உங்க துரு பிடித்த இரும்புக்கரம் எங்க போச்சு. நைனா நைனா கொஞ்சம் அடிமை மக்களையும் பாருங்க


Ram Moorthy
மார் 25, 2025 06:17

பணம் என்றால் ...கொலைகார கும்பல் தான் தாக்குதல் நடத்தி உள்ளது


Ramesh
மார் 24, 2025 21:57

யார் மீது யார் தாக்குதல் நடத்தினால் என்ன. எனக்கு 2000 இவர் தருவாரா. அப்புறம் நான் ஏன் இவரை பற்றி கவலைபட வேண்டும். நாங்கள் திமுகவிற்கு தான் ஓட்டு போடுவோம். கிடைக்கிற பணத்தை விட்டு விட நாங்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை