உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முஸ்லிம்களுக்கு ஒரு நீதி எங்களுக்கு ஒரு நீதியா? சீர் மரபினர் நலச்சங்கம் கேள்வி

முஸ்லிம்களுக்கு ஒரு நீதி எங்களுக்கு ஒரு நீதியா? சீர் மரபினர் நலச்சங்கம் கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:'மதம் மாறிய முஸ்லிம்கள், தங்கள் விருப்பம் போல, ஏழு முஸ்லிம்கள் பிரிவில் எதில் வேண்டுமானாலும் ஜாதி சான்றிதழ் பெற்றுக் கொள்ளலாம்' என, அரசாணை வழங்கிய தமிழக அரசு, சீர் மரபினர் பழங்குடியினர் என சான்று வழங்காமல், 68 திராவிட சமூக மக்களை மட்டும் தவிக்க விடுவது ஏன் என, தமிழ்நாடு சீர்மரபினர் நலச்சங்கம் கேள்வி எழுப்பி உள்ளது.இதுகுறித்து, சங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் துரைமணி மற்றும் நிர்வாகிகள், முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதம்:சீர்மரபு பழங்குடிகள், சீர் மரபினர் என்ற இரட்டைச் சான்றிதழ் முறையை ஒழித்து, 1979ம் ஆண்டுக்கு முன் வழங்கியது போல், 'டி.என்.டி.,' எனப்படும், சீர்மரபு பழங்குடிகள் சான்றிதழ் வழங்க கோரி, தமிழ்நாடு சீர் மரபினர் நலச்சங்கம், பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது.சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது, தற்போதுள்ள, டி.என்.டி., - டி.என்.சி., என்ற இரட்டை சான்று இழிவை சரி செய்து, டி.என்.டி., என்ற ஒற்றைச் சான்று வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தீர்கள்; தற்போது மவுனம் காக்கிறீர்கள். கடந்த 2018ல் ஐ.ஏ.எஸ்., அதிகாரி அதுல்ய மிஸ்ரா தலைமையிலான குழு, டி.என்.டி., பெயர் மாற்றத்திற்கு சட்டத்தை திருத்த வேண்டிய அவசியம் இல்லை. இட ஒதுக்கீடு நீதிமன்ற வழக்கிற்கும், இந்த கோரிக்கைக்கும் சம்பந்தம் இல்லை. அரசாணை வழியே பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம் என்று பரிந்துரை செய்தது. ஆனாலும், மாற்றம் செய்யப்படவில்லை. அதேநேரம் சட்டத்தை திருத்தாமல், முஸ்லிம்களுக்கு மட்டும் பிற்படுத்தப்பட்டோர் முஸ்லிம் என்ற புதுப்பெயரை, அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளதுடன், வழக்கு நிலுவையில் இருக்கும் போது, மதம் மாறிய முஸ்லிம்கள், தங்கள் விருப்பம் போல ஏழு முஸ்லிம்கள் பிரிவில் எதில் வேண்டுமானாலும், ஜாதிச் சான்று வாங்கிக் கொள்ளலாம் என, அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.ஆனால், 68 திராவிட சமூக மக்களை மட்டும் தவிக்க விட்டுள்ளீர்கள். முதல்வருக்கு திராவிடர்கள் மீது உண்மையான பற்று இருந்தால், அம்மக்களுக்கு கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். கடந்த, 2019ல் வெளியிட்ட அரசாணையை திருத்தி, ஒரே டி.என்.டி., சான்றிதழ் வழங்க அரசாணை வெளியிடுங்கள்.இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை