உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குழந்தை கடத்த வந்ததாக வடமாநிலத்தவர் சிறைபிடிப்பு

குழந்தை கடத்த வந்ததாக வடமாநிலத்தவர் சிறைபிடிப்பு

புதுக்கோட்டை,:புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே வாரியப்பட்டி கிராமத்தில் குழந்தை கடத்த வந்ததாக, வட மாநிலத்தவர்கள் இருவரை கிராம மக்கள் சிறைபிடித்தனர். விசாரணையில், இருவரும் புதுக்கோட்டை கிராம பகுதிகளில் பழைய பொருட்கள் சேகரித்து விற்பனை செய்வோர் என தெரிய வந்ததால், இருவரையும் திருமயம் போலீசார் விடுவித்தனர்.இதனிடையே, திருமயம் அருகே உள்ள அரண்மனைப்பட்டி, கானடுகாத்தான் சுற்றுவட்டார பகுதிகளில் பைக்கில் வந்த இரண்டு நபர்கள் குழந்தையை கடத்த முற்பட்டு, பின், விட்டு சென்றதாக ஒரு ஆடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதன் எதிரொலியாக, குப்பை சேகரிக்க வந்த வட மாநிலத்தவர்களை சிறை பிடித்திருக்கலாம் என, போலீசார் தெரிவித்தனர்.இதற்கிடையே, தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் அப்பர் தெருவை சேர்ந்த ஜகபர் சாதிக், 38, தன் 'பேஸ்புக்' பதிவில், மல்லிப்பட்டினத்தில், 9 வயது பெண் குழந்தையை சிலர் கடத்த முயன்றதாகவும், அந்த சிறுமி, தன்னை சிலர் துரத்தியதாகவும், தப்பி வந்து விட்டதாகவும் அழுது கொண்டே கூறுவது போல வீடியோ ஒன்றை வெளியிட்டார்.இது, சமூக வலைதளங்களில் பரவி அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இரண்டாம்புளிக்காடு வி.ஏ.ஓ., சரவணக்குமார் விசாரித்ததில், சிறுமியை அவ்வாறு பேச வைத்து, வீடியோ பதிவு செய்து ஜகபர் சாதிக் பதிவிட்டது தெரிய வந்தது.சைபர் கிரைம் போலீசார் நேற்று முன்தினம், ஜகபர் சாதிக்கை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை