மேலும் செய்திகள்
இந்தியாவின் சுதேசி சமூக வலைதளம் அரட்டையில் இணையுங்கள் வாசகர்களே!
4 hour(s) ago | 5
கவர்னருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு
7 hour(s) ago | 5
விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜ முயற்சி: சீமான்
8 hour(s) ago | 21
சென்னை, : பெரம்பூர் ரயில் நிலையம் அருகே, தண்டவாளத்தில் இரும்பு துண்டு வைத்து, ரயிலை கவிழ்க்க சதி செய்தவர்களை, ரயில்வே போலீசார் தேடி வருகின்றனர்.சென்னை பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்கில் இருந்து சென்ட்ரல் நோக்கி, நேற்று அதிகாலை 4:00 மணி அளவில் புறப்பட்ட மின்சார ரயில், அதிகாலை 4:22 மணிக்கு பெரம்பூர் கேரேஜ் ஒர்க்ஸ் நிலையத்தை அடைந்தது. அப்போது, ரயில் தண்டவாளத்தில் ஒன்றரை அடி நீள இரும்பு துண்டு இருப்பதை ரயில் ஓட்டுனர் பார்த்தார். உடனடியாக, ரயிலை நிறுத்த முடியாது என்பதால், லேசான வேகத்தில் இயக்கினார். இரும்பு துண்டு மீது ரயில் ஏறியதில், அது இரண்டாக உடைந்தது. பின், ரயிலை நிறுத்தி உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.இதையடுத்து, ரயில்வே போலீசார் விரைந்து சென்று, இரும்பு துண்டை கைப்பற்றினர். இந்த சம்பவம் தொடர்பாக, போலீசாரிடம் ரயில் ஓட்டுனர் விவரித்தார். பின், அந்த ரயில் அதிகாலை 4:52 மணிக்கு சென்ட்ரல் சென்றது. இதுகுறித்து, பெரம்பூர் ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து, தண்டவாளத்தில் இரும்பு துண்டு வைத்து ரயிலை கவிழ்க்க திட்டமிட்டவர்களை தேடி வருகின்றனர்.
4 hour(s) ago | 5
7 hour(s) ago | 5
8 hour(s) ago | 21