மேலும் செய்திகள்
தினமும் ஒரு சாஸ்தா: தமிழக ஐயப்பன் கோயில்கள்-9
24-Nov-2024
ஐயப்பன் தன் மனைவியரான பூர்ணா, புஷ்கலாவுடன் உள்ள கோயில் பற்றிய தகவல்கள் இங்கு இடம் பெற்றுள்ளது.திருமணம் நடக்க...
துாத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் மணக்கரையில் பூர்ணா புஷ்கலாவுடன் காட்சி தருகிறார் புங்கமுடையார் சாஸ்தா. இவரை வணங்கினால் திருமணம் நடக்கும். வல்லநாடு மெயின் ரோட்டில் இருந்து ஸ்ரீவைகுண்டம் செல்லும் சாலையில் தாமிரபரணி நதிக்கரையில் உள்ளது கோயில். இங்கு விநாயகர், முருகனும் உள்ளனர். வளாகத்தில் விஷ்ணுவின் அம்சமாக 25 அடி உயரத்தில் பிரமாண்ட பூதத்தார் சாஸ்தா இருக்கிறார். 11 வாரங்கள் தொடர்ந்து புங்கமுடையார் சாஸ்தாவை வழிபட்டால் திருமணம் நடக்கும். அமாவாசை, பவுர்ணமி, மார்கழியில் சிறப்பு வழிபாடு நடக்கிறது. பிரகாரத்தில் கருப்பசாமி, சுடலை மாடசாமி, வீரபத்திரர், பட்டவராயர் ஆகிய காவல் தெய்வங்கள் உள்ளன. ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து 6 கி.மீ., நேரம்: காலை 10:30 - 3:30 மணி தொடர்புக்கு: 94432 31465, 99449 91944அருகிலுள்ள தலம்: வல்லநாடு திருமூலநாதர் கோயில் 10 கி.மீ.,நேரம்: காலை 7:00 - 12:00 மணி மாலை 5:00 - 8:00 மணி
24-Nov-2024