உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., நிர்வாகி மீது கமிஷன் குற்றச்சாட்டு; போஸ்டரால் வெடித்த திடீர் சர்ச்சை

தி.மு.க., நிர்வாகி மீது கமிஷன் குற்றச்சாட்டு; போஸ்டரால் வெடித்த திடீர் சர்ச்சை

தர்மபுரி: கிராம பஞ்சாயத்து பணிகளை செய்த ஒப்பந்ததாரர்கள் கொடுத்த கமிஷனை, கட்சியின் கிளை நிர்வாகிகளுக்கு பிரித்து கொடுக்கவில்லை என, தி.மு.க., ஒன்றிய செயலரை கண்டித்து, தர்மபுரியில், தி.மு.க.,வினர் போஸ்டர் ஒட்டியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. வெள்ளாளப்பட்டி ஊராட்சி தி.மு.க., என்ற பெயரில் ஒட்டப்பட்ட, அந்த போஸ்டரில் கூறப்பட்டுள்ளதாவது:தர்மபுரி மேற்கு மாவட்ட, தி.மு.க.,வில் வடக்கு ஒன்றிய செயலர் மாதுவை வன்மையாக கண்டிக்கிறோம். தர்மபுரி ஒன்றியம், வெள்ளாளப்பட்டி பஞ்சாயத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில், 2024 -25 நிதியாண்டில், 75 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது மிக்க மகிழ்ச்சி. அந்த நிதியினை முறையாக, ஒன்றிய செயலர் வாயிலாக டெண்டர் விட்டு, அங்கு உள்ள கிளை நிர்வாகிகளுக்கு டெண்டர் எடுக்கும் ஒப்பந்ததாரர்கள், கமிஷன் பணத்தை வாங்கி, கிளைக் கழக நிர்வாகிகளுக்கு கொடுக்க வேண்டும் என்று தலைமை கழகம் சொன்னதாக, ஒன்றிய செயலர் தெரிவித்தார். ஆனால், மொத்த கமிஷன், 5 லட்சம் ரூபாயை மாது எடுத்துக்கொண்டார்.இந்த தொகையை கிளை கழக நிர்வாகிகளுக்கு பிரித்து கொடுக்க வேண்டும். அதேபோல், கடந்த, 4 ஆண்டுகளில் லட்சக்கணக்கில் பணம் வசூல் செய்துள்ளார். அவர் மீது, கட்சித்தலைமை நடவடிக்கை எடுக்குமா? இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இது குறித்து, தி.மு.க., ஒன்றிய செயலர் மாது கூறியதாவது:

கிராம பஞ்சாயத்தில் நடக்கும் பணிகளுக்கு, ஆன்லைன் டெண்டர் முறை அறிமுகப்படுத்தப்பட்டதால், அனைத்து கட்சிகளை சேர்ந்தவர்களும் ஆன்லைனில் டெண்டர் போட்டு ஒப்பந்தம் பெறுகின்றனர். அரசு நிர்ணயிக்கும் தொகையை விட, 10 முதல், 20 சதவீதம் வரை குறைவாக டெண்டர் போட்டு, அ.தி.மு.க.,- பா.ம.க.,வினர் எடுத்துச் செல்கின்றனர். அவர்களிடம் எப்படி கமிஷன் கேட்க முடியும். அவர்களிடம் கமிஷன் வாங்கி கொடுக்க வேண்டுமென, என்னை தி.மு.க.,வினர் வலியுறுத்துகின்றனர். நான் யாரிடமும், பத்து பைசா கூட கமிஷனாக வாங்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

raja
ஜூலை 03, 2025 06:56

ஓ... இப்படி எல்லாம் கமிஷன் வாங்கித்தான் திருட்டு திராவிட மாடல் என்று பெருமை பேசுகிறானா. ஓங்கோல் கோவால் புர கேடுகெட்ட இழிபிறவி...


அப்பாவி
ஜூலை 03, 2025 06:23

திருட்டு திராவிடனுங்க. ஆட்டை போட்டது தப்பில்லை. அதை சரியாப் பிரிச்சு குடுக்காததுதான் தப்புன்னு போஸ்டர். தலைமை என்ன செய்யும் பாவம்?


சமீபத்திய செய்தி