உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உடல் வெப்பம் கூடினால் நிறம் மாறும் டி-சர்ட் கொசுக்கடியிலும் தப்பலாம்; திருப்பூரில் அறிமுகம்

உடல் வெப்பம் கூடினால் நிறம் மாறும் டி-சர்ட் கொசுக்கடியிலும் தப்பலாம்; திருப்பூரில் அறிமுகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பூர்: உடல் வெப்ப நிலை மாற்றத்தை வெளிப்படுத்தும், இயற்கையான சாயத்தில் பிரின்ட் செய்யப்பட்ட, 'டி-சர்ட்' திருப்பூரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.உலகளாவிய பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகத்தில், ஒவ்வொரு ஆண்டும், புதிய கண்டுபிடிப்புகளுடன் கூடிய ஆடைகளுக்கு வரவேற்பு கிடைக்கிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=6zn6l45l&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0'ஸ்டார்ட் அப் இந்தியா' திட்டத்தில், இத்தகைய கண்டுபிடிப்புகள் ஊக்குவிக்கப்படுகின்றன. அதன்படி, திருப்பூரை சேர்ந்த சொக்கலிங்கம், வெப்பநிலை மாற்றத்தை வெளிப்படுத்தும் டி-சர்ட் அறிமுகம் செய்து உள்ளார்.இதற்காக, செம்பருத்தி பூ, வெங்காய சருகு உள்ளிட்ட இயற்கையான பொருட்களை கொண்டு, புதிய 'இங்க்' தயாரித்து உள்ளார். அதைக்கொண்டு, 'பிரின்ட்' செய்து, வெப்பநிலை மாற்றத்தை கண்டறியும் 'டி-சர்ட்' வடிவமைக்கப்பட்டுள்ளது. உடல் வெப்பநிலை, 99 டிகிரி பாரன்ஹீட்டை அடையும் போது, 'டி-சர்ட்'டில் உள்ள பிரின்டிங் வண்ணம் மாற்றம் அடைகிறது. வெப்பநிலை குறைந்த பின், மீண்டும் பழைய வண்ணத்துக்கு மாறிவிடுகிறது. குழந்தைகள், முதியவர்கள் என, அனைவரும் அணியும் போது, காய்ச்சல் பாதிப்பு ஏற்படுவதையும், குறைவதையும் கண்டறிய முடியும் என்கிறார் சொக்கலிங்கம்.'டி-சர்ட்'டை வடிவமைத்த அவர் மேலும் கூறியதாவது:முதன்முறையாக, 'பிங்க்' மற்றும் நீல நிறத்தில் இங்க் தயாரித்து பரிசோதித்து பார்த்துள்ளோம். மதுரையில், செப்., 28, 29ம் தேதியில் நடந்த, 'ஸ்டார்ட் அப் இந்தியா' கண்காட்சியில் பங்கேற்றோம். திருப்பூர் 'நிப்ட்-டீ' அடல் இன்குபேஷன் மையம் தான் தேவையான வழிகாட்டுதலை வழங்கியது.பின்லாந்தில் நடக்க உள்ள கண்காட்சியில் பங்கேற்கவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பல வண்ணங்களில் இத்தகைய இங்க் தயாரிக்கும் முயற்சி நடந்து வருகிறது. கொசுவிரட்டியும் பயன்படுத்துவதால், இந்த 'டி-சர்ட்' அணிந்தால் கொசுக்கடியில் இருந்தும் தப்பலாம். இதேபோல், ஒவ்வொரு ஆண்டும், தலா மூன்று புதிய கண்டுபிடிப்புகளை அறிமுகம் செய்வதே என் நோக்கம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

jayvee
நவ 03, 2024 16:39

இவரை கார்பொரேட் அரசியல் வாதிகளிடமிருந்து காப்பாத்தணும் ..ஏனென்றால் ஜவுளி ஆயத்த மற்றும் பின்னலாடை நிறுவங்களின் பெருமளவு கட்டுப்பாடு திராவிட மற்றும் காங்கிரஸ் முதலாளிகளிடம் உள்ளன .. திமுகவும் அண்ணாதிமுகவும் வெளியில்தான் எதிரணி.. இந்த வியாபாரத்தில் முன்னாள் இந்நாள் எல்லோரும் அங்காளி பங்காளிகள்.. வரி ஏய்ப்பு .. நிலத்தடி மற்றும் ஆற்றறு நீர் மாசுபடுதல் கள்ளத்தன சாயப்பட்டறைகள் , திருட்டுத்தனமாக இங்கு வரும் பங்களாதேஷ், ரோஹிங்கிய மற்றும் பாக்கிஸ்தான் தொழிலாளிகளை குறைந்த சம்பளத்தில் வேலைக்கு வைத்து, அவர்களுக்கு உள்ளூவர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு என்று சகல வசதிகளும் கொடுத்து அவர்கள் தீவிரவாத கும்பலா அல்லது போதை பொருள் கும்பலா என்று தெரிந்தோ தெரியாமலேயோ வேலைக்கு வைத்துக்கொள்கின்றனர்


Ramesh Sargam
நவ 03, 2024 12:57

வாழ்த்துக்கள். எதற்கும் எச்சரிக்கையாக இருக்கவும். போலிகளை தயார் செய்ய ஒரு கூட்டமே காத்திருக்கிறது. அவர்களுக்கு உங்கள் பார்முலா தெரியாமல் பார்த்துக்கொள்ளவும். வாழ்த்துக்கள்.


நிக்கோல்தாம்சன்
நவ 03, 2024 12:32

தமிழகத்தில் உண்மையான சிறுபான்மையினரை காப்பாற்ற இந்த நிறம் மாறும் சர்ட் உபயோகம் ஆகுமா? கொசுக்கடியை விட மோசமான மதவாதிகள் கையில் தமிழகம் சிக்குண்டு இருக்கிறது என்பதினால் எனக்கு இப்படி ஒரு கவலை


தமிழ்வேள்
நவ 03, 2024 10:11

அய்யா சொக்கலிங்கம்,பிரிவினைவாதம் தேசத்துரோகம் ஆகிய எண்ணம் இருந்தால் தலை காட்டினால் உடனடியாக நிறம் மாறி காட்டிக்கொடுக்கும் சட்டை கண்டு பிடியுங்களேன்.. திராவிடம் மார்க்க பயல்களுக்கு கட்டாயமாக மாட்டி விட்டால் தேசம் கொஞ்சம் தப்பிக்கும்.. அப்படியே கடசிமாறி புத்தி வந்ததாலும் கலர் மாறும் சட்டை கண்டு பிடித்தால் அத்தனை கட்சியிலும் யூனிஃபார்ம் ஆகிவிடும்.. வியாபாரம் எங்கோ சென்று விடும்..


Ambalavanan Chockalingam
நவ 03, 2024 08:41

அனைவருக்கும் நன்றி.


NACHI
நவ 03, 2024 07:54

தெய்வமே நன்றி ....?????


Kasimani Baskaran
நவ 03, 2024 06:57

பயனுள்ள உத்தி. சொக்கலிங்கம் உண்மையில் நல்லதொரு பயனுள்ள சொக்கா தயாரித்துள்ளார். பாராட்டுகள்.


rama adhavan
நவ 03, 2024 06:47

புது முயற்சி. வெற்றி பெறட்டும். சட்டையின் விலை குறித்தும் அறிய ஆவல்.


Ambalavanan Chockalingam
நவ 03, 2024 08:48

Thanks for your comments. You can contact me on my mail.


Ms Mahadevan Mahadevan
நவ 03, 2024 05:38

வாழ்த்துக்கள். முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்


Ambalavanan Chockalingam
நவ 03, 2024 08:45

நன்றிகள் பல


Ganesh Kumar
நவ 03, 2024 03:16

வாழ்க வளர்க மோடியின் ஊக்குவிப்பால் பாரதம் உச்சத்தை நோக்கி மிக வேகமாக செல்கிறது எவ்வளவு இந்திய கண்டுபிடுப்புகள், சாதனைகள் திராவிட சிந்தனையை ஒழிப்போம், மக்களின் முன்னேற்றத்திற்கு உறுதுணை நிற்போம் மோடியையும், அண்ணாமலையையும், பாரத ஜனதா கட்சியையும் மட்டுமே ஆதரிப்போம் வாழ்க தமிழகம் வாழ்க பாரதம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை