உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாற்றுதிறனாளிகளுக்கான வசதிகள் கோவில் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

மாற்றுதிறனாளிகளுக்கான வசதிகள் கோவில் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'கோவில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டது குறித்த விபர அறிக்கையை, வரும், 21ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். 'இல்லையெனில், சம்பந்தப்பட்ட கோவில் செயல் அலுவலர்கள் மற்றும் இணை ஆணையர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என, ஹிந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் முரளீதரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.சீராய்வு கூட்டம்அறநிலையத்துறையின் மண்டல இணை ஆணையர்களுக்கும், கோவில் செயல் அலுவலர்களுக்கும் அவர் அனுப்பியுள்ள கடிதம்: மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில், 2020ம் ஆண்டு, 200 சுற்றுலா தலங்களில், மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அறிக்கை அளிக்கப்பட்டு உள்ளது.அதில், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, 74 ஹிந்து கோவில்களில், மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டது.கோவில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளை, கோவில் நிதியில் மேற்கொள்ளவும், பணியை கடந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் முடிக்கவும் உத்தரவிடப்பட்டது.தேவையான வசதிகள் செய்யப்பட்ட விபர அறிக்கை, முதுநிலை அல்லாத கோவில்கள், மண்டல இணை ஆணையர் வழியாகவும், முதுநிலை கோவில்கள் நேரடியாகவும், கமிஷனர் அலுவலகத்திற்கு அனுப்ப அறிவுறுத்தப்பட்டது.ஆனால், அறிக்கைகள் இதுவரை வரவில்லை. இந்த செயல்பாடு ஏற்புடையதல்ல; கண்டனத்துக்கு உரியது. எனவே, 74 கோவில்களில் எடுக்கப்பட்டுள்ள, மறு சீரமைப்புகள் தொடர்பாக, தலைமை செயலர் தலைமையில், சீராய்வு கூட்டம் நடக்க உள்ளது.ஒழுங்கு நடவடிக்கைஎனவே, மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்ட விபர அறிக்கையை, வரும் 21ம் தேதி கமிஷனர் அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்கவும். இது மிகவும் அவசரம். தவறினால், தொடர்புடைய கோவில் செயல் அலுவலர்கள் மற்றும் இப்பணியை கண்காணிக்க தவறிய, இணை ஆணையர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

தத்வமசி
மார் 18, 2024 12:12

வசதிகளை செய்து கொடுப்பதற்கு புராதன கோவில்களின் சிற்பங்கள், படிக்கட்டுக்கள், அலங்கார வளைவுகள் என்று இந்த விலை மதிப்பில்லாத சொத்துக்களை அழிக்காதீர்கள். அறநிலையத்துறை என்பது கோவில் பணத்தினை ஆட்டைய போடுவதற்கு மட்டுமல்ல. அங்குள்ள சிப்பந்திகளுக்கும் அரசு சம்பளம் வழங்க வேண்டும் அல்லது அதற்கு இணையான சம்பளம், படிகள் வழங்க வேண்டும். அங்கு காலம்காலமாக பணியாற்றும் பணியாளர்களுக்கு என்ன சம்பளம் கொடுக்கிறீர்கள்? அதே கோவிலுக்குள் அமர்ந்து கொண்டு கணக்கெழுதும் அறநிலையத்துறை அலுவலர்களுக்கு கோவில் உண்டியல் பணத்தில் எவ்வளவு சம்பளம் தருகிறீர்கள்? என்பதையும் பொது மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். கோவில் உண்டியல பணத்தில் உண்டு கொழுத்திருக்கும் அறநிலையத்துறைக்கு இது காதில் விழுமா ?


Raa
மார் 18, 2024 10:59

ஐயா அறநிலையத்துறை கமிஷனர் அவர்களே, உங்கள் துறை சம்பந்தமான ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் உங்கள் ஆணையை சரியாக செயல்படுத்துவது கூட நீங்கள் பொது பத்திரிக்கையில் செய்தி கொடுத்துதான் பண்ணுவீர்களா? துறை லெவல் கன்றோல் உள்ளுக்குள்ளேயே இருக்கணுமே?


duruvasar
மார் 18, 2024 07:50

உடல் ஊனமுற்று உழைக்க முடியாமல் கோவில் பணத்தை திருடி வாழ்வதை ஒரு கொள்கையாகவே கொண்டுள்ள ஒருகூட்டத்திற்க்கு இன்னும் என்ன வசதி செய்துதரவேண்டும் ?


ramesh
மார் 18, 2024 19:58

உங்களுக்கு நெஞ்சில் ஈரம் என்பதே கிடையாதா டுருவாசர் .ஒரு மாற்று திறனாளிக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் மட்டுமே ஊனத்தின் வலி தெரியும் .மாற்று திறனாளிகளை இவ்வளவு கேவல படுத்தி எழுதாதீர்கள் .நீங்கள் எந்த கோவிலுக்கும் பொய் சாமி கும்பிட்டு எந்த புண்ணியமும் இல்லை


மேலும் செய்திகள்