உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காட்டு யானை தாக்கி ஒருவர் காயம்

காட்டு யானை தாக்கி ஒருவர் காயம்

கூடலூர்: கூடலூர் அருகே, காட்டு யானை தாக்கி பழங்குடி இனத்தைச் சேர்ந்த முதியவர் காயமடைந்தார்.நீலகிரி மாவட்டம், தேவர்சோலை அருகே உள்ள, கடிசனகொல்லி, பழங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் மடம்பன், 59. பழங்குடி இனத்தைச் சேர்ந்த இவர், அப்பகுதியில் உள்ள தனியார் எஸ்டேட்டில் தற்காலிக காவலராக பணியாற்றி வருகிறார்.சம்பவத்தன்று பணி முடிந்த பின், தேவர்சோலை அருகே உள்ள, தனியார் தேயிலை தோட்டம் வழியாக உள்ள குறுக்கு வழியில் வீடு நோக்கி நடந்து சென்றார்.அப்போது எதிரே வந்த காட்டு யானை அவரை தாக்கி, சென்றது. அவர் காயங்களுடன் உயிர் தப்பினார். அவரின் சத்தம் கேட்டு வந்த அப்பகுதியினர் அவரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.சம்பவம் தொடர்பாக வனத்துறை மற்றும் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்