உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வீடு புகுந்து பள்ளி மாணவி கத்தியால் குத்திக்கொலை ராணிப்பேட்டையில் வாலிபர் வெறிச்செயல்

வீடு புகுந்து பள்ளி மாணவி கத்தியால் குத்திக்கொலை ராணிப்பேட்டையில் வாலிபர் வெறிச்செயல்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில், 10ம் வகுப்பு மாணவி ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அப்பகுதி மக்கள், கத்தியால் குத்திய வாலிபரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். சோளிங்கர் அருகே புலிவலம் என்ற கிராமத்தில் 10ம் வகுப்பு படிக்கும் 15 வயதான மாணவி ஒருவரை வாலிபர் ஒருவர் வீடு புகுந்து கத்தியால் குத்தி கொலை செய்தார். தடுக்க முயன்ற மற்றொரு மாணவிக்கு கத்திக்குத்து விழுந்தது.. மாணவிகள் கூக்குரலை கேட்ட அருகில் இருந்தவர்கள் கத்தியால் குத்திய வாலிபரையும் உடன் வந்த மற்றொருவரையும் பிடிக்க முயற்சித்தனர். அவர்களில் ஒருவர் மட்டுமே சிக்க, அவரை போலீசில் ஒப்படைத்தனர். கத்தியால் குத்தப்பட்டதில் சம்பவ இடத்திலேயே மாணவி உயிரிழந்தார்..தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்ததுடன், கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Appaaa
மே 29, 2025 18:20

எலக்சன் வந்தவுடனே நம் வாக்காளர்கள் இதெல்லாம் மறந்து மீண்டும் திமுகவுக்கு வாக்களிப்பார்கள் பிரியாணி செய்யும் மாயாஜாலம் . அரசியல் தலைவர் பிறந்தநாள் அன்று இறந்த நாளன்று தெருவுக்கு தெரு பிரியாணி போடுகிறார்கள் அதை வாங்காமல் இருந்தால் நன்று.


Padmasridharan
மே 29, 2025 08:22

இதற்கும் காரணம் குறிப்பிட்ட கட்சிதான், பெண்களுக்கு பாதுகாப்பில்லாமல் செய்துவிட்டதென்று மற்ற கட்சிகள் பேசிக்கிட்டே இருப்பாங்க. அந்த வாலிபர் போன்ற மற்றவர்கள் இப்படி இருப்பதற்கு காரணம் இந்திய பொருளாதாரத்தை வளர்க்க பெற்றோர் இருவரும் வேலைக்கு போவதும் communication gap, காதலை வெல்வேறு விதமாக காட்டும் சினிமாக்களும் media, ஒரு குற்றம் நடந்தால் அதை பணம் வாங்கி மறைத்து கொண்டிருக்கும் காவலர்களும் corruption காரணம் என்பதை எல்லா கட்சிகளும் அறியவேண்டும். மாதா, பிதா, குரு, தெய்வம் இவர்களுடைய பங்கு நிறைய குறைந்து இப்பொழுதெல்லாம் திரையில் பார்க்கும் நடிகர்கள் வசனம் சொல்லி நடிப்பதில்தான் கவனம் அதிகம். புகை பிடிப்பதும், மது அருந்துவதும் குடிகாரனுக்கு என்று ஒரு பாடல் பெரிய திரையில் காண்பித்து சிறு எழுத்துக்களால் புகை பிடிப்பதும் மது அருந்துவதும் உடலுக்கு கேடு என்று காண்பிப்பதும் காரணங்களாக இருக்கின்றன. உழைச்சு சம்பாதிக்கணும்ன்னு நினைக்கிறத விட அதிகாரத்தை பயன்படுத்தி எப்படி பண ஊழல் செய்யலாம்னு அரசு வேலை செய்பவர்களால் இது போன்ற குற்றவாளிகள் பெருகிக்கொண்டுதான் இருக்கின்றதே தவிர குறைக்க என்னும் ஆட்கள் மிகவும் குறைவே.


Manaimaran
மே 29, 2025 04:02

போலீசிடம் ஒப்படைப்பது வேஸ்ட் ஸ்பாட்டுலயே முடிச்சுடனும் கும்பலாக சேந்து


Nesan
மே 28, 2025 21:07

அரசியல்வாதிகளின் அடியாளாக காவல்துறை செயல்படும் வரை. இது போன்ற கொடூரம் தொடரும். தூத்துக்குடியில் ரௌடியும், காவல்துறை சேர்ந்து கொடுக்கும் அட்டூழியம் கொஞ்சம், நஞ்சம் இல்லை என்று சமூக வலைத்தளத்தில் மாரிதாஸ் வெளியிட்டு இருந்தார். இது முதல்வருக்கு தெரியாத?


HoneyBee
மே 28, 2025 20:41

எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சி...


vijai hindu
மே 29, 2025 00:39

இதெல்லாம் சகஜம் எலக்சன் வந்தவுடனே நம் வாக்காளர்கள் இதெல்லாம் மறந்து மீண்டும் திமுகவுக்கு வாக்களிப்பார்கள் பிரியாணி செய்யும் மாயாஜாலம் எப்ப அரசியல் தலைவர் பிறந்தநாள் அன்று இறந்த நாளன்று தெருவுக்கு தெரு பிரியாணி போடுகிறார்கள் அதை வாங்காமல் இருந்தால் நன்று ஆனால் சிலர் டூவீலர் போகிறவர்கள் தன் வேலையை மறந்து பிரியாணி வாங்க வரிசையில் நிற்கிறார்கள் இந்த அவலம் ஒழிய வேண்டும்


Sudha
மே 28, 2025 20:25

இனம் மதம் மொழியில் கடந்த அன்புச்செயல் போல் தோன்றுகிறது. ஏன் ஹெடிய இதே போல் எல்லா செய்திகளை கொடுக்கக்கூடாது? பெரியவர்கள் எல்லா ஜீவன்களையும் எல்லா செயல்களையும் சிவ சிவ என்று சொல்வார்களாம். அதாவது, இச்சிவத்தை அச்சிவம் சிவ , அச்சிவத்தை இச்சிவம் சிவ சிவா


Ramesh Sargam
மே 28, 2025 20:13

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிக சிறப்பாக இருக்கிறது. இது பொய் பேசும் நமது புலவர் ஸ்டாலின் எப்பொழுதும் கூறும் ஒரு பொய்.


தமிழ்வேள்
மே 28, 2025 20:10

ஹலால் மாமிச உணவுகளை முற்றிலும் தவிர்த்தால் மட்டுமே தற்போதைய வரைமுறை இல்லாத கொலைகளை குறைக்க இயலும்.ஹலால் கறியின் இயல்பே சிந்தனை திறனை குறைத்து கொலை வெறியை கூட்டுவது மட்டுமே...


Haja Kuthubdeen
மே 28, 2025 22:10

மிகப்பெரிய விஞ்சானி..கொலை செஞ்சவன் யாரு..எதுக்கு செஞ்சான்னு இனிதான் செய்திவரும்.


Anantharaman Srinivasan
மே 28, 2025 23:23

டாஸ்மார்க் தண்ணீ..?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை