உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திட்டமிட்டு காரில் மோதிய வாலிபர்; ராமநாதபுரத்தில் 12 பேர் காயம்

திட்டமிட்டு காரில் மோதிய வாலிபர்; ராமநாதபுரத்தில் 12 பேர் காயம்

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் சாலையோரத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது வாலிபர் காரை விட்டு மோதியதில் 12 பேர் காயமடைந்தனர். ஒருவர் உயிரிழந்தார்.ராமநாதபுரம் மாவட்டம் தெற்கு தரவை அம்மன் கோவில் பகுதியில் இன்று மாலை சாலையோரத்தில் 12 பேர் பேசிக் கொண்டு இருந்தனர். அப்போது, பொன்னையாபுரத்தை சேர்ந்த மனோகரன் மகன் ராம்பிரபு(28) என்பவர் ஓட்டி வந்த கார், அவர்கள் மீது மோதியது. இதில் 12 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=9250rnca&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதில் நான்கு பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் அம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்த பழனிக்குமார் (37), வள்ளி மாடன் வலசை சேர்ந்த சிவா (30),ரித்திக்குமார்(20),பிரசாந்த் (25) ஆகியோர் மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்தில் சாத்தையா என்ற நபர் உயிரிழந்தார். காரை ஏற்றி கொலை முயற்சியில் ஈடுபட்ட வாலிபர் ராமநாத பிரபு, 28, கைது செய்யப்பட்டுள்ளார். 12 பேர் மீதும் முன்விரோதம் காரணமாக ராம்பிரபு காரை ஏற்றியதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து ராம்பிரபுவிடம் கேணிக்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி