உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டூ - வீலர் மீது கவிழ்ந்த டிரெய்லர் இளம்பெண் உடல் நசுங்கி இறப்பு

டூ - வீலர் மீது கவிழ்ந்த டிரெய்லர் இளம்பெண் உடல் நசுங்கி இறப்பு

நாமக்கல் : மஹாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து, திருச்சி பாரத் பெல் நிறுவனத்திற்கு, இரும்பு பிளேட் லோடு ஏற்றிக்கொண்டு டிரெய்லர் லாரி, நாமக்கல் வழியாக சென்றது. லாரியை, நாமக்கல் அடுத்த கொசவம்பட்டியை சேர்ந்த வரதராஜ் ஓட்டினார்.நாமக்கல் நகருக்குள் டிரெய்லர் லாரி செல்ல முடியாது என்பதால், கரூர் வழியாக புறவழிச்சாலையில் லாரி சென்று கொண்டிருந்தது.நாமக்கல், நல்லிபாளையத்தை சேர்ந்த பூபதி மனைவி சுதா, 43. இவரது மகள் சினேகா, 22. இவர், பெங்களூருவில் உள்ள ஐ.டி., நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். நேற்று காலை, 8:00 மணிக்கு, தாய், மகள் இருவரும், 'டி.வி.எஸ்., சுசூகி அக்சஸ்' டூ - வீலரில், கீரம்பூர் எட்டிக்கை அம்மன் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர்.வள்ளிபுரம் புறவழிச்சாலையில், சாலையோரம் நிறுத்தியிருந்த கன்டெய்னர் லாரியை கடக்க முயன்ற போது, பின்னால் வந்த டிரெய்லர் லாரி, டூ - வீலர் மீது மோதாமல் இருப்பதற்காக வலதுபுறமாக டிரைவர் திருப்பியுள்ளார். பின், மீண்டும் இடதுபுறம் திருப்பிய போது, மீடியன் மீது லாரி மோதி சாலையில் கவிழ்ந்தது.இதில், டூ - வீலரில் சென்று கொண்டிருந்த தாய், மகள் இருவரும், லாரிக்கு அடியில் சிக்கினர். சினேகா சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயமடைந்த சுதா, நாமக்கல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Varadarajan Nagarajan
ஜூலை 19, 2025 08:22

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இடதுபுறம் ஒதுக்கப்பட்டுள்ள லேனில் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் செல்லவேண்டும். அதுவே அவர்களுக்கு பாதுகாப்பானது மற்றும் முறையானது. ஆனால் பல இடங்களில் இருசக்கர வாகனஓட்டிகள் நான்கு சக்கர வாகனங்கள் செல்லும் லேனில் நடுவில் ஓட்டுகின்றனர். இதனால் அவர்களுக்கு மட்டுமல்லாது மற்ற வாகனம் ஓட்டிகளுக்கு ஆபத்தை உண்டாக்குகின்றன. திருச்சி - சென்னை தேசிய நெடுசாலையில் விழுப்புரம் மற்றும் திண்டிவனம் பகுதிகளில் இதுபோன்ற அதிகம் பார்க்கலாம். பின்வரும் நான்கு சக்கர வாக்கங்கள் ஒலி எழுப்பினால் அவர்கள் வழிகொடுக்க மறுப்பதுமட்டுமல்லாமல் திரும்பி முறைப்பதும் நடைமுறை. சாலைகளில் தான்மட்டும்தான் செல்லவேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் மற்றவர்களும் பாதுகாப்பாக செல்ல போதிய விழிப்புணர்வு மட்டுமல்லாது விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இருந்தால் பயணங்கள் பாதுகாப்பாக இருக்கும்


VENKATASUBRAMANIAN
ஜூலை 19, 2025 08:17

இப்போதெல்லாம் கிளீனர் வண்டியை ஓட்டுகிறார்கள். அவர்களுக்கு சாலை விதிகளை எதுவுமே தெரியாது. மேலும் இரண்டு சக்கர வாகனங்களில் செல்லுவோர் அவசரப்படாமல் செல்ல வேண்டும்.


Kasimani Baskaran
ஜூலை 19, 2025 08:08

லைசன்ஸ் இல்லாமல் ஒட்டக்கூடிய வாகனங்களை பயன்படுத்துவோர் சாலையில் இருக்கும் ஆபத்துக்களை அறிந்து வாகனம் ஓட்டுவது நல்லது. பொதுவாக இது போன்ற பெரிய அளவிலான கட்டுமான அல்லது இரும்பு கம்பிகள் போன்றவற்றை எடுத்துச்செல்லும் பொழுது பாதுகாப்புக்கு முன்னாலும் பின்னாலும் வாகனம் எச்சரிக்கை சமிக்கைகள் கொடுத்துக்கொண்டே செல்லும். திராவிட தமிழகத்தில் இது நடைமுறையில் அமலில் இல்லை போலும்...


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஜூலை 19, 2025 07:35

செய்தியின் சாரத்தில் நான் புரிந்துகொண்டது: தாயும் மகளும் பேசிக்கொண்டே, பின்னால் வரும் வாகனத்தை ரியர் வியூ கண்ணாடியில் கவனிக்காமல் கவனம் இன்றி திடீரென வலதுபுறம் திரும்பியது போல தெரிகிறது. லாரி ஓட்டுநர் இந்த திடீர் நிகழ்வை எதிர்பார்த்திருக்க மாட்டார். லேன் டிசிப்ளின் இல்லாததே விபத்துக்கான காரணம் என்று தோன்றுகிறது.


ரங்ஸ்
ஜூலை 19, 2025 07:27

வேகம் குறைத்து விவேகமாக ஓட்ட வேண்டும். பெரும்பாலும் அலட்சியமாக ஓட்டுகின்றனர்.


m.arunachalam
ஜூலை 19, 2025 09:04

இன்றைய நிலையில் காவல்துறையில் வேலை செய்பவர்கள் மற்றும் கனரக வாகனம் ஓட்டுபவர்களின் நிலைமை மிக மிக சிரமமானது . மக்களின் தான்தோன்றித்தனமான செயல்களால் தீர்வு காண முடியாத சூழ்நிலை . தெளிதல் நலம் .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை