உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆதார் தரவுகளை யாருடனும் பகிர முடியாது; ஐகோர்ட்டில் ஆணையம் திட்டவட்டம்

ஆதார் தரவுகளை யாருடனும் பகிர முடியாது; ஐகோர்ட்டில் ஆணையம் திட்டவட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'இறந்த நபரின் கைரேகையை, ஆதார் தரவுகளுடன் ஒப்பிட்டு பார்ப்பது சாத்தியமில்லை' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், இந்திய தனித்துவ அடையாள ஆணையம் பதிலளித்துள்ளது.இறந்து போன அடையாளம் தெரியாத நபர்களின் முகவரி உள்ளிட்ட விபரங்களை கண்டறிவதற்காக, அவர்களின், 'பயோமெட்ரிக்' விபரங்களை வழங்க, யு.ஐ.டி.ஏ.ஐ., எனப்படும், இந்திய தனித்துவ அடையாள ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், திண்டிவனம் டி.எஸ்.பி., சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், யு.ஐ.டி.ஏ.ஐ., பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார். அதன்படி, இந்த வழக்கில், யு.ஐ.டி.ஏ.ஐ., அமைப்பு சார்பில், அதன் பெங்களூரு மண்டல அலுவலக துணை இயக்குனர் ப்ரியா ஸ்ரீகுமார் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதன் விபரம்:

நிதி மற்றும் பிற மானியங்கள், பயன்கள், சேவைகள் போன்றவற்றை, உண்மையான பயனாளிகளை கண்டறிந்து வழங்குதல் சட்ட பிரிவுகளின்படி, 2016ல், இந்திய தனித்துவ அடையாள ஆணையம் உருவாக்கப்பட்டது. இது, ஒரு சட்டப்பூர்வ ஆணையம். இந்த ஆணையம் வாயிலாக, இந்தியாவில் வாழும் அனைத்து குடிமக்களுக்கும், 'ஆதார்' என பெயரிப்பட்ட, யு.ஐ.டி., எனும் ஒரு தனித்துவ அடையாளமாக, 12 எண்கள் வழங்கப்படுகின்றன. ஆதார் எண்ணை வைத்து, தனியொரு நபரின் நடவடிக்கையை கண்காணிப்பது நோக்கம் அல்ல. சேகரிக்கப்பட்ட அல்லது உருவாக்கப்பட்ட எந்தவொரு முக்கிய, 'பயோமெட்ரிக்' தகவலையும், எந்த காரணத்துக்காகவும் யாருடனும் பகிர்ந்து கொள்ளக்கூடாது; ஆதார் எண்கள் உருவாக்கம் மற்றும் அங்கீகாரம் தவிர, வேறு எந்த நோக்கத்திற்காகவும், அதைப் பயன்படுத்தக் கூடாது என, ஆதார் சட்டப்பிரிவு தெளிவாக கூறுகிறது.எனவே, தனிப்பட்ட நபரின் தகவல்கள் பகிரப்படாது. உச்ச நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்றம் உத்தரவிட்டால், அந்த நபரின் கருத்தை கேட்ட பின், விபரங்கள் பகிரப்படும். அதுவும், தேசிய பாதுகாப்பு நலன்களுக்காக மட்டுமே. மத்திய அரசின் செயலர் பதவிக்கு குறையாத ஒரு அதிகாரியால் அல்லது அரசின் உத்தரவு வாயிலாக சிறப்பு அங்கீகாரம் பெற்றிருந்தால் மட்டுமே விபரங்கள் பகிரப்படும்.தடயவியல் நோக்கங்களுக்கு ஏற்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, யு.ஐ.டி.ஏ.ஐ., கருவிழி 'ஸ்கேன்' கைரேகை தகவல்களை சேகரிப்பதில்லை. இறந்த போன ஒரு நபரின் கைரேகையை, 'ஆதார்' கைரேகை உடன் ஒப்பிட்டு, வழக்கில் மனுதாரர் கோரும் தகவல்களை வழங்குவது தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமற்றது; இயலாதது. யு.ஐ.டி.ஏ.ஐ., அமைப்பால் சட்டப்பூர்வ உத்தரவையும், தனியொருவரின் அடிப்படை உரிமையையும் மீறுவது இயலாதது என்பதால், மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இந்த மனு மீதான உத்தரவு, ஜூன் 12க்கு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

அப்பாவி
மே 21, 2025 16:49

உண்மையைக் கண்டறிய பகிர்வதில் தவறேதுமில்லை.


J.Isaac
மே 21, 2025 15:05

அநேக ஆணையங்களுக்கு நாணயம் கிடையாதுக்ஷ


Kanns
மே 21, 2025 09:57

False. They are being Given to All incl Advertisers and Cyber& CaseHungry Criminals. Aadhar NOT PROOF OF CITIZENSHIP Even as per Citizenship/Aadhar Acts & Courts BUT ILLEGALLY GIVEN BY VoteHungry& PowerMisusing RulingParty& Official Criminals to Billions of Foreign Infiltrators FOR ILLEGALLY GIVING-COMPELLING ALL CITIZEN SERVICES& Benefits 10% Basic Citizen Services 90% UnWanted VoteHungry Freebies/Concessions DENIED ILLEGALLY to NATIVE CITIZENS. BioMetric ModiMental Aadhar Spy-Master is AntiPeople & AntiNation for Spyings, Hackings, MegaLoots, FalseCases, Frauds etc etc incl EVM Frauds& Murder of Democracy BJP OPPOSED Earlier. Aadhar also DESTROYED Indians ECONOMY Not Providing Any Govt Livelihoods But Destroying Even Citizens Own Livelihood, Looting People With MutipleTaxes-Charges etc for Wasteful Extravagant Expenses While Promoting Black-Money FDI Benamis for Foreign Slavery. And NEVER-PUNISHING ANY Extensive PowerMisusing-Vested-Conspiring RulingParties, Case/News/Vote/Power Hungry Criminals Police,Judges, Media, Parties, Bureaucrats/Groups, FalseComplainant Gangs like women, unions/groups, SCs, advocates Etc. SHAMEFUL MALGOVERNANCE & INJUSTICE by RULING PARTY DICTATORS& their STOOGE COURTJUDGES-OFFICIALS.


J.Isaac
மே 21, 2025 12:18

உண்மை. இதற்கு ஊடகங்களும் உடந்தை. நடுத்தர ஏழை மக்களின் அறியாமையை வைத்து மதத்தின் மூலமாக அவர்களை உணர்ச்சிப்பட வைத்து பிரிவினை, கசப்பு உண்டாக்கி அரசின் திறமையின்மையை மறைக்க ஆளும் கட்சியினால் நடத்தப்படும் வஞ்சக செயல்


JAYACHANDRAN RAMAKRISHNAN
மே 21, 2025 13:20

இந்த நீண்ட நெடிய கருத்தின் மூலம் தாங்கள் தெரிவிக்க விரும்புவது என்னவென்றால் ஷரியத் சட்டம் மட்டுமே சரி. மற்றவை எல்லாம் வேஸ்ட்.. இது தானே நீங்கள் சொல்ல விரும்புவது.


GMM
மே 21, 2025 07:52

மாநில போலீசின் தவறான கோரிக்கை. பிறப்பு முதல் இறப்பு வரை ஒருவரின் முகவரி , தேவைபடும் அடையாள விவரங்கள் மாநில நிர்வாகம் பராமரிக்க வேண்டும். அங்குள்ள ஆவணங்கள் அடிப்படையில் மட்டும் போலீஸ் முடிவு எடுக்க வேண்டும். புலன் விசாரணை செய்ய ஆதார் தரவுகள் கொடுக்க கூடாது.


Sivakumar
மே 21, 2025 07:31

how Jio got access to aadhar database when it was launched?. the finger print was scanned and accepted.


அப்பாவி
மே 21, 2025 07:11

நீங்க என்ன பகிர்வது. ஆதார் கேட்கும் அனைத்து நிறுவனங்களிடமிருந்தும் அது திருடப்பட்டு பகிரப்படும்.


Minimole P C
மே 21, 2025 07:07

The commission argument/reply is correct.


ஜெய்ஹிந்த்புரம்
மே 21, 2025 06:56

தலைக்கு ரூ. 500 வெட்டினா எத்தனை பேரோட ஆதாரும் கிடைக்கும்.


JAYACHANDRAN RAMAKRISHNAN
மே 21, 2025 13:23

2026 தேர்தலில் வேலையை ஆரம்பித்து விட்டோம் என்று ஸ்டாலின் ஒரு மாதம் முன்பு கூறினார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை