உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வருவாய்க்கு அதிகமாக ரூ.3.59 கோடி சொத்து குவிப்பு; மாநகராட்சி இன்ஜினியர், மனைவி மீது வழக்கு

வருவாய்க்கு அதிகமாக ரூ.3.59 கோடி சொத்து குவிப்பு; மாநகராட்சி இன்ஜினியர், மனைவி மீது வழக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சி இன்ஜினியர் மற்றும் அவரது மனைவி 6 ஆண்டுகளில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.3.59 கோடி சொத்து குவித்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.திருநெல்வேலி மாவட்டம் சாந்திநகர் 28வது தெருவை சேர்ந்தவர் லெனின்(54). இவர் திருநெல்வேலி மாநகராட்சியில் உதவி இன்ஜினியராக 1997ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3ம் தேதி முதல் பணியாற்றி வருகிறார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=5xti3qzr&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இவரது மனைவி சாந்தகுமாரி. இவர் திருநெல்வேலி தூய சவேரியார் கல்லூரியில் 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி முதல் உதவி பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். இருவரும் அரசு ஊழியர்கள் என்ற வரையறைக்குள் வருகின்றனர். இவர்களுக்கு பாபின் என்ற மகனும், பாபிலா பிளஸ்சி என்ற மகளும் உள்ளனர்.இவர்கள் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதா விசாரணை நடத்தியதில் லெனின் மற்றும் அவரது மனைவி சாந்தகுமாரி ஆகியோர் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை வாங்கி குவித்துள்ளனர் என்பது உறுதியானது.அவர்களது சொத்து மதிப்பு 2018ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதியில் ரூ.73 லட்சத்து 4 ஆயிரத்து 579 ஆக இருந்தது. 6 ஆண்டு கழித்து 2024ம் ஆண்டு ஜூன் 30ம் தேதியில் அவர்களது சொத்து மதிப்பு ரூ.5 கோடியே 74 லட்சத்து 95 ஆயிரத்து 83 ஆக உயர்ந்தது.6 ஆண்டுகளில் அவர்களது வருமானம் ரூ.2 கோடியே 41 லட்சத்து 65 ஆயிரத்து 355-ஆக இருக்க வேண்டும். செலவு 98 லட்சத்து 96 ஆயிரத்து 440 ஆக இருந்தது. இதன் அடிப்படையில் வருமானத்திற்கு அதிகமாக, ரூ.3 கோடியே 59 லட்சத்து 21 ஆயிரத்து 589 சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் மதிப்பிட்டு உள்ளனர். இதன்படி லெனின் மற்றும் சாந்தகுமாரி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

Bhagya
மே 03, 2025 08:04

இத விட ஸ்பெஷல் items எல்லாம் விட்டுடுவாங்க. இதையாவுது பார்த்தாங்க


Chandrasekaran Balasubramaniam
ஏப் 29, 2025 18:58

இந்திய அரசியல் வியாதிகளின் சொல் கேட்டால் இப்படித்தான். அவனுக தப்பிச்சுக்குவானுக நீங்க வாக்குமூலம்அப்புருவர் அளிக்காமல் இருந்தால்.அதிகாரிகளின் ஆசை அதனால் சிறை.


DURUVASAN THIRUMURUGAN
ஏப் 29, 2025 18:52

Petrorin sothukalai adamanam vaikum podu matra varisukalin permission thavai,


RajaGopal venkatasubba rao
ஏப் 29, 2025 13:17

100%உண்மை


SL Tech
ஏப் 28, 2025 21:41

வணக்கம் தங்களுக்கு இவர்கள் யார் என்று தெரியுமா இல்லை என்றால் இவர்களால் நீங்கள் பாதிக்கப்பட்டவர்களா விஷயம் என்னவென்று தெரியாமல் தரம் கெட்ட விமர்சனங்களை தவிர்க்க வேண்டும்


ராமகிருஷ்ணன்
ஏப் 28, 2025 16:21

விடியலின் ஆட்சியில் அரசு ஊழியர்கள் 90 சதவீதம் கோடீஸ்வரர்கள் தான். ஆனால் சம்பளம், இன்னும் பல சலுகைகள், பழைய ஓய்வூதியம் எல்லாம் வேனும் என்று அரசை மிரட்டுவார்கள். இந்த தம்பதியை கவனித்தால். லஞ்சம் வாங்கியது சற்று குறைவாக தான் உள்ளது


J.Isaac
ஏப் 28, 2025 17:25

இந்தியா முழுவதும் இதே கூத்து தானே


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஏப் 28, 2025 14:45

ஒரு மந்திரிக்கு 2 கோடி சொத்து சேர்த்ததாக வழக்கு நடந்து கொண்டு உள்ளது. அரசு ஊழியர் 3 கோடி 59 இலட்சம். மந்திரி பாவம். இது மந்திரிக்கு அழகா. அவரது பதவிக்கு அழகா. மாநகராட்சி கவுன்சிலர்கள் ஒவ்வொருவரும் வருடத்திற்கு 5 கோடி சம்பாதிப்பதாக கோவையில் பேசிக் கொள்வார்கள்.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 28, 2025 14:41

இவ்ளோ யோசிச்சு செஞ்சவன் இவன்கூட மூக்கும் முழியுமா சுமாரா இருக்கே .... அதை வெச்சு சம்பாதிரிச்சிருந்தா இந்த அசிங்கத்துக்கு அந்த அசிங்கம் பரவால்லியே ??


Barakat Ali
ஏப் 28, 2025 14:26

விடியல் தரப்போறேன்னு சொன்ன மாடல் சார் ஆட்சி வந்த பொறவு தம்பதிகள் பலமடங்கு சுருட்டியிருக்காங்களே ..... மக்கள் பணத்தை சுருட்டுற இந்த அசிங்கத்துக்குப் பேரு விடியலுங்களா ???? செபா வை காப்பாத்த முயற்சி செஞ்ச முதல் சார் இவங்களைக் கைவிட்டுருவாரா என்ன ????


Nellai tamilan
ஏப் 28, 2025 14:23

தசம பாகம் 10% பங்கு தந்தைக்கு பங்கு குடுத்து பாவ மன்னிப்பு கேட்டால் போதுமானது. இவர்கள் போட்ட பிச்சையில் தான் இந்த அரசு இயங்குகிறது என்று பால்டாயில் பாபுவே சொல்லி இருக்கிறார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை