உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தாய்ப்பாலை தானம் வழங்கி சாதனை; தாராள மனசு பெண்ணுக்கு குவியும் பாராட்டு!

தாய்ப்பாலை தானம் வழங்கி சாதனை; தாராள மனசு பெண்ணுக்கு குவியும் பாராட்டு!

திருச்சி: திருச்சியில் 2 குழந்தைகள் தாயான செல்வ பிருந்தா என்ற பெண் கடந்த 22 மாதங்களில் 300 லிட்டர் தாய்ப்பாலை மகாத்மா காந்தி அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்கி, இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் என இரண்டிலும் இடம் பிடித்துள்ளார்.திருச்சி காட்டூர் அம்மன்நகர் நகரை சேர்ந்தவர் செல்வபிருந்தா. பொறியியல் பட்டதாரி. இவரது கணவர் பிரவீன்குமார். இந்த, தம்பதிக்கு 2016ல் திருமணம் நடந்தது. ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை உள்ளது. பெண் குழந்தை பிறந்த பிறகு செல்வ பிருந்தாவுக்கு தாய் பால் சுரப்பு அதிகமாக இருந்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=i3f1yjdl&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தனது குழந்தையின் தேவையை தாண்டி மிக அதிகமாக இருப்பதை அவர் உணர்ந்தார்.2 குழந்தைகள் தாயான செல்வ பிருந்தா என்ற பெண் கடந்த 22 மாதங்களில் 300 லிட்டர் தாய்ப்பாலை மகாத்மா காந்தி அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்கி உள்ளார்.இதன் மூலமாக இவர் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் என இரண்டிலும் இடம் பிடித்துள்ளார். தாராள மனசு கொண்ட இந்த பெண்ணை பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ