உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சூரியனார்கோவில் ஆதினம் சாவியை கையகப்படுத்தியது சட்டமீறல்

சூரியனார்கோவில் ஆதினம் சாவியை கையகப்படுத்தியது சட்டமீறல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருச்சி: சூரியனார்கோவில் ஆதினத்தின் சாவி மற்றும்சொத்துக்களை அறநிலையத் துறை கையகப்படுத்தியது சட்டமீறல் என்று விஸ்வ ஹிந்து பரிஷத் தெரிவித்துள்ளது.இது குறித்து அகில பாரத இணை செயலாளர் நாகராஜன் வெளியிட்ட அறிக்கை: தஞ்சாவூர் மாவட்டம், ஆடுதுறை அருகே, சூரியனார் கோவில் ஆதினம் 28வது குருமகா சன்னிதானம் மகாலிங்க சுவாமிகள் பதிவு திருமணம் செய்து கொண்டதாக அறிவித்துள்ளார். இதையடுத்து, அவர், ஆதினமாக நீடிப்பது சரியா, தவறா என்று பல்வேறு தரப்பிலும், பலவிதமான கருத்துக்களை கூறி வருகின்றனர். சமூக வலைதளங்களிலும்தகவல்கள் வெளியாகின்றன. இந்த சூழலை பயன்படுத்தி, மக்கள் என்ற போர்வையில் ஆதினத்திற்கு எதிர்ப்பும், ஆதரவும் தெரிவித்து, நேரடியாககளத்தில் இறங்கி, சட்ட விரோதமாக செயல்பட்டுள்ளனர், என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன.மடத்தின் சாவியை மக்கள் எடுப்பது, பின்னர் மகாலிங்க சுவாமிகள் அந்த சாவியை அறநிலையத்துறையிடம் ஒப்படைத்தார்கள் என்றும் செய்திகள் வந்துள்ளன.சூரியனார் கோவில் ஆதின விஷயத்தில் ஹிந்து அறநிலையத்துறை தலையிடுவதை, விஷ்வ ஹிந்து பரிசத் வன்மையாக கண்டிக்கிறது. மேலும், ஆதினம், மடம் யார் நிர்வாகம் செய்ய வேண்டும், என்ற அதிகாரம் படைத்தவர்கள் பாரம்பரிய ஆதினங்கள் தான்; அரசு அல்ல.எனவே, அரசு அதிகாரிகள் சாவியை மற்றும் சொத்துக்களை கையகப்படுத்தியது சட்ட மீறல் தான். இது போன்ற செயல்களை, தமிழக அரசும், ஹிந்து சமய அறநிலையத்துறையும் சட்டத்தை மதிக்காமல் செயல்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது.சூரியனார் கோவில் ஆதினம் மடத்தை யார் நிர்வகிக்க வேண்டும்? என்று திருவாவடுதுறை ஆதினம், தருமபுர ஆதினம்,மதுரை ஆதினம் போன்ற பாரம்பரிய குரு மகா சன்னிதானங்களே தீர்மானிக்க அதிகாரம் படைத்தவர்கள்.குரு மகா சன்னிதானங்கள்ஆலோசனைப்படி, தமிழக அரசும், ஹிந்து சமய அறநிலையத்துறையும் செயல்பட வேண்டும்,என்று விஸ்வ ஹிந்து பரிஷத் அறிவுறுத்துகிறது, என்று விஷ்வ ஹிந்து பரிஷத் இணை செயலாளர் நாகராஜன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 32 )

sundarsvpr
நவ 15, 2024 17:31

மதம் மாறிய பிரபல அரசியல்வாதிகள் திரைத்துறையினர் மதம் மாறியதை அவர்கள் வெளியில் சொல்ல வெட்கப்படுகிறார்கள். இப்படி பட்டவரகள் நாட்டில் நடமாடும்போது துறவறம் பூண்ட ஆதினம் திருமணம் செய்துகொண்டதை மறைக்கவில்லை. ஆதின சட்ட திட்டத்திற்கு உட்பட்டு சாவியை கொடுத்தாரா என்பது தெரியவில்லை. இது சட்ட மீறல் என்றால் அறநிலைத்துறை அமைச்சர் நீதிமன்றம் முன் நிறுத்தப்படவேண்டும்.


சங்கரநாராயணன்
நவ 15, 2024 13:09

ஆதீனங்கள் வரும் வருவாயில் ஆலயங்களுக்கு தொண்டு செய்வது,அவர்கள் பணி, தி மு க மாதிரி அரசியல் கட்சிகள் மக்கள் வரிப்பணத்தைக் கொள்ளை அடித்து அதில் அவர்கள் குடும்பம் மட்டுமே உல்லாசமாக வாழ்வது, இந்த உண்மையை அறிய 50 ஆண்டுகளில் ஆட்சியில் இருந்த குடும்பங்களின் சொத்துகள் பலமடங்கு உயர்ந்திருப்பதையும்,கோவில் சொத்துகள் அரசியல் கட்சியினரால் ஆக்கிரமித்து கொள்ளையடித்திருப்பதையும் ஆய்வு செய்து உறுதிப்படுத்திக் கொள்ளலாம்


sankar
நவ 15, 2024 11:35

ஆதீன சொத்துக்கள் - இனி வட்டம், கூட்டம், மாவட்டங்களுக்கு பிரித்து வழங்கப்படும்


Bhaskaran
நவ 15, 2024 09:34

இனி மடத்தின் கீழ்வரும் கோவில்களின் சாமி பட்டினி தான் .மடத்தின் வருவாயில் அதிகாரிகளுக்கு ஏ.சி கார் கண்டிப்பாக உண்டு.


எஸ் எஸ்
நவ 14, 2024 14:38

ஆதீனத்தை துறந்த பின் அறநிலையத்துறையிடம் ஒப்படைக்கும் அதிகாரம் இவருக்கு ஏது?


SUBRAMANIAN P
நவ 14, 2024 13:48

மஹாபாபி, இவங்களையெல்லாம் எப்படி தேர்ந்தெடுக்கிறார்கள்.. எல்லாம் பணம்..


Balaji Radhakrishnan
நவ 14, 2024 13:15

கண்டனம் மட்டும் பத்தாது அறநிலை துறை மீது சட்ட நடவடிக்க எடுக்க வேண்டும்.


வைகுண்டேஸ்வரன்
நவ 14, 2024 12:20

அடேய் இருநூரு ன்னா யாரு? எந்த கட்சியாவது, நெட்டில் போஸ்ட் போடறவனை யெல்லாம் தேடி தேடி பணம் குடுக்கும் அளவு அறிவுகெட்ட பொருளாளர், தலைவர் வெச்சிருக்குமா? சமூக ஊடகத்தில் போஸ்ட் போட்டா கட்சி வளர்ந்து விடுமா? அதனால, போஸ்ட் போடறவனுக்கேல்லாம் பணம் குடுப்பாங்களா? தக்காளி யோசிக்கவே மாட்டாங்க போல. பிஜேபி க்கு எதிராக யாராவது போஸ்ட் போட்டா, அதுக்கு விளக்கம் எழுதம போஸ்ட் போட்டவனை இருநுரு ன்னு எழுதி சுய சந்தோஷம் அடைவது பரிதாபம்.


RAJASEKAR, PARAMAKUDI
நவ 14, 2024 16:14

அறிவாலய அடிமை... ரொம்ப பொங்காத அடங்கி கெட..


வைகுண்டேஸ்வரன்
நவ 14, 2024 12:13

இங்கே கோவையில் பல கோவில் சுவர்களில் எச் ராஜா கண்டுபிடித்த ஜோசப் விஜயின் மாநாடு போஸ்டர், கோட்ட பட போஸ்டர் லாம் ஒட்டியிருக்கிறார்களே. ஊர்க் காரர்கள் படித்தவர்கள் என்றால், யாராவது ஏதாவது கிளப்பி விட்டாலும் கண்டுக்க மாட்டாங்க.


வைகுண்டேஸ்வரன்
நவ 14, 2024 12:10

அறம் தவறும் துறையா? சங்கர மடத்தைச் சொல்கிறீர்களா? அவிங்க இந்த கோவிலுக்கெல்லாம் வர மாட்டாங்க. பணம் புரளும் கோவில்கள் தான் அவர்களுக்கு இலக்கு. இது ஏதோ சின்ன கிராமத்து கோவில் தானே? தமிழ்நாடு அரசு தான் இது போன்ற கோவில்களுக்குப் பாதுகாப்பு.


sankar
நவ 14, 2024 13:26

இருநூறு தம்பி - அது கோவிலே இல்லை - தொண்டு செய்யும் பொருட்டு முன்னோர்கள் துவக்கிய மடம், புரிச்சுக்கோடா அம்பி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை