நடிகர் ரவிகுமார் காலமானார்
சென்னை:நடிகர் ரவிகுமார், 75, சென்னையில் காலமானார். சென்னையில் பிறந்த இவர், மலையாளத்தில், 1968ம் ஆண்டு நடிகராக அறிமுகமானார். பின், தமிழில் கே.பாலச்சந்தர் இயக்கிய, அவர்கள் படத்தில் நடித்தார். தொடர்ந்து, பகலில் ஓர் இரவு, யூத், ரமணா, சிவாஜி உள்ளிட்ட, 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துஉள்ளார். பகலில் ஓர் இரவு படத்தில், 'இளமை எனும் பூங்காற்று…' என்ற பாடல் இவரை பிரபலமாக்கியது. 'செல்வி, சித்தி' போன்ற சின்னத்திரை தொடரிலும் நடித்துஉள்ளார். புற்றுநோய் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த இவர், நேற்று காலை சென்னை வளசரவாக்கத்தில் காலமானார்.