உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கள்ளச்சாராயம் குடித்து சிகிச்சை பெறுபவர்களை சந்தித்தார் நடிகர் விஜய்

கள்ளச்சாராயம் குடித்து சிகிச்சை பெறுபவர்களை சந்தித்தார் நடிகர் விஜய்

கள்ளக்குறிச்சி: கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக நடிகர் விஜய் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு வருகை தந்தார்.தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் கட்சியை துவக்கி உள்ள நடிகர் விஜய் வரும் 2026-ல் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் களம் இறங்குவதாக தெரிவித்துள்ளார். இதனிடையே கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 42 ஆக உள்ள நிலையில் 100க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை , புதுச்சேரி ஜிப்மர், சேலம் அரசுமருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு வந்த நடிகர் விஜய் அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்தும் கேட்டறிந்தார். முன்னதாக கள்ளச்சாராயத்தால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புக்கு அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது என அறிக்கை வெளியிட்டிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

theruvasagan
ஜூன் 21, 2024 11:15

குடிப்பதே சமுதாயக் கேடு. அதிலும் தங்கள் ஆரோக்கியத்தையும் தங்கள் குடும்பத்தின் எதிர்காலத்தையும் எள்ளளவு கூட நினைத்துப் பார்க்காமல் கொழுப்பெடுத்து விஷ சரக்கு குடித்து வீணாகிப் போகிறவனுகளுக்கு பரிதாபம் பார்ப்பவன் அனுதாப்படுகிறவன் எவனும் நல்லதை நினைப்பவன் நல்லதை செய்பவனாக இருக்கவே முடியாது.


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 21, 2024 08:21

இறந்தவர்கள் 80% பட்டியலினம்.அடங்கா சிறுத்தை திம்மவாலுனு ஆங்கே காணோமே ஏன்.?


Venkat.
ஜூன் 21, 2024 07:10

எல்லாம் ஓட்டு பிச்சைக்காக.


மோகனசுந்தரம்
ஜூன் 21, 2024 06:08

இவன் வேற நடுநடுவுல வந்து விளையாட்டு காட்டிக் கொண்டிருக்கிறான்.


Santhakumar Srinivasalu
ஜூன் 20, 2024 21:52

இவரும் இறந்தவர்களுக்கு தலைக்கு 2 லட்சம் கொடுப்பார்!


Rpalnivelu
ஜூன் 20, 2024 20:46

வீணாபோன விஜய் இங்கு ஏன்? ஏன்? ஏன்?


sankaranarayanan
ஜூன் 20, 2024 20:26

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்கள் என்று கேட்கும்போதே தெரியம் இது நடந்ததும் கூட அந்த பெயரில்லா நடக்க வேண்டும்


S. Narayanan
ஜூன் 20, 2024 20:13

விஜய் நிவாரணம் கிடைக்கும் என்று இன்னும் ஆயிரம் மூதேவிகள் குடிக்கும்.


ஆரூர் ரங்
ஜூன் 20, 2024 20:13

குடிப்பவர்கள் உங்கள் படங்களைப் பார்க்க வேண்டாம் எனக் கூறுங்கள் பார்ப்போம். உங்க படங்களைப் பார்த்து குடிப்பவர்கள் அதிகமா? அல்லது குடிப்பதை நிறுத்தியவர் உண்டா? ஊருக்கு உபதேசம் செய்வது எளிது.


S. Narayanan
ஜூன் 20, 2024 20:11

நாட்டுக்கு தியாகம் செய்து உயிர் வந்தவர்கள். இவர்களை பாராட்ட ஒரு நடிகர் மற்றும் அரசியல்வாதி. நாடு எங்கே போகிறது.


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி