உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உப்புமா கம்பெனிகளால் பாழாய் போகும் பெண்கள்: அட்ஜஸ்ட்மென்ட் கேட்டால் சப்புனு அடியுங்க..: விஷால் ஆவேசம்

உப்புமா கம்பெனிகளால் பாழாய் போகும் பெண்கள்: அட்ஜஸ்ட்மென்ட் கேட்டால் சப்புனு அடியுங்க..: விஷால் ஆவேசம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''சில உப்புமா கம்பெனிகள் சினிமா வாய்ப்பு கேட்டு வரும் பெண்களை பயன்படுத்திக்கொண்டு தப்பித்துவிடுகின்றனர். யாராக இருந்தாலும் அட்ஜஸ்ட்மென்ட் என சொன்னால் செருப்பால் அடியுங்கள்'' என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.நடிகர் விஷால் தனது 47வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் விஷால் கூறியதாவது: 80 சதவீத பெண்கள் நடிக்க வாய்ப்புத்தேடி வந்து ஏமாற்றப்படுகிறார்கள். அவர்கள் வாய்ப்புத்தேடி செல்லும் நிறுவனங்கள் பற்றி ஆராய்ந்து செல்ல வேண்டும்; பெண்கள் சுதாரிப்புடன் இருக்க வேண்டும். கேரளாவின் ஹேமா கமிட்டி போலவே தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பிலும் 10 பேர் கொண்ட ஒரு கமிட்டி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்; விரைவில் அறிவிப்பு வெளியாகும். இது எங்களின் கடமை. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=rhrdo87v&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தவறான எண்ணத்தில் அழைக்கும் திரைத்துறையினர் யாராக இருந்தாலும் அட்ஜஸ்ட்மென்ட் என சொன்னால் செருப்பால் அடியுங்கள். தன்னை பயன்படுத்திக்கொள்ள நடிகைகள் அனுமதிக்கூடாது. சில உப்புமா கம்பெனிகள் கேமராவை எடுத்துக்கொண்டு வாய்ப்பு தருவதாக கூறி போட்டோஷூட் எடுத்து, பெண்ணை பயன்படுத்திவிட்டு தப்பித்து விடுகின்றனர். இது தமிழ் சினிமாவிலும் இருப்பதை ஒப்புக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

பேசும் தமிழன்
ஆக 29, 2024 21:33

ஶ்ரீரெட்டி....இவரை பார்த்து தான் ....அனகோண்டா என்று கூறினார் ....அப்போ எதால் அடிக்கணும் ????


Mr Krish Tamilnadu
ஆக 29, 2024 19:54

அத்தகைய நபர்களுக்கு, ஆண்கள் மட்டும் நடித்த படத்தை ஒருநாள் முழுக்க போட்டு காட்ட வேண்டும். பெண்களின் முக்கியத்துவம் அப்போது தான் புரியும்.


தாமரை மலர்கிறது
ஆக 29, 2024 19:49

அனகோண்டாவை அட்ஜஸ்ட் செய்த பெண்கள் அதிகம்.


Mani . V
ஆக 29, 2024 19:30

சுனா பானா எனக்கு உன்மேல்தான் சந்தேகமாக இருக்கிறது. ஆமா, இப்ப நீ எதுக்கு ஓவர் ஆக்டிங் கொடுக்கிற? அடுத்த பலி நீதாண்டி.


Mr Krish Tamilnadu
ஆக 29, 2024 19:12

நமது இயல், இசை, நாடகம் - மூன்றும் சேர்த்து சினிமாவாக மாறி உள்ளது. கலைத்துறையில் பக்குவ படாத மனதுடன் தான் பயணத்தை தொடங்குகின்றனர். கஷ்ட நஷ்டம், செய்வதில் உள்ள சிரமம் புரிந்தவன் திறமைக்கு மதிப்பு கொடுக்க ஆரம்பித்து விடுகிறான். கட் என்ற வார்த்தை கேட்ட பின் சீன் ல் இருந்து வெளி வரும் ஆண்ணை விட, சீன்க்கு வெளியில் உள்ள ஆண்கள் அந்த பெண்ணுக்கு தரும் மதிப்பு குறைவு தான். அங்கு தான் ஆரம்பிக்கிறது பிரச்சனை. பக்குவபடாத மனிதர்கள் மினி பஸ்ஸில் தற்காலிக நடத்துனர்கள் பெண்கள் பகுதியில் அங்குமிங்கும் நடப்பது போல் நடந்து கொள்ள ஆரம்பித்து விடுகிறார்கள். பெண்கள் பாதுகாப்பு, அவளின் ஆதங்கத்தை வெளிபடுத்தி பாதுகாக்க அவளுக்கு நம்பிக்கையான பாதுகாப்பு சங்கம் தேவைதான் படுகிறது. அவர்கள் சி.பி.ஜ. ரெய்டு போல், சூட்டிங் ஸ்பாட்களில் கலந்து கொண்டு பெண்களின் சிக்கலை தீர்க்க தான் வேண்டும்.


sundaran manogaran
ஆக 29, 2024 17:25

மனிதனில் பாலியல் வேட்கையை மூலதனமாகக் கொண்டதே இந்த திரைத்துறை.இதில் பாலியல் அத்துமீறல்கள் இருப்பதாகக்கூறுவது சாக்கடைக்குள் இருந்துகொண்டு நாறுகிறது என்று கூறுவதுபோல இருக்கிறது.ஊடகங்களுக்கு பொழுது போக ஒரு உப்பு சப்பு இல்லாத விஷயம் கிடைத்துள்ளது.அவ்வளவே.இதனால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை.


Sankara Subramaniam
ஆக 29, 2024 18:25

இளசுகள் விரைவில் பணம் சம்பாதிக்க ஆசையில் வலையில் சிக்குகிறார்கள் இளம் கன்று பயமறியாது. சுய கட்டுபாடு மிகவும் அவசியம். பொருப்பில்லாத பெற்றோர்கள் கட்டுபாடுல்லாத சமூகம். விளைவு?


Easwar Kamal
ஆக 29, 2024 17:23

மலையாள திரை உலகம் மாதிரி புரட்சி வந்தால் பல பேர் மாட்டலாம் இந்த ஆசாமி கூட இருக்கலாம். சுள்ளான் கதை ஊர் அறிஞ்ச விஷயம். மீதி எலாரும்ம் கொஞ்சம் அடக்கித்தான் வாசிக்கிறானுங்க.


Sck
ஆக 29, 2024 16:49

உங்களுக்கு தெரிந்தும், ஏன் விஷால் நடவடிக்கை எடுக்கல. கேரளாவில் உஷா "ர்" கமிட்டி சுட்டிக்காட்டிய பின்புதான் தமிழ் சினிமாவிலும் இருப்பதை நடிகர் சங்க தலைவனாக ஒப்பு கொள்கிறிர்களா? சபாஷ்.


Rajah
ஆக 29, 2024 16:20

பிரபல்யம் அடைந்தால் .......................................................


Anand
ஆக 29, 2024 16:11

நீதி, நேர்மை, நியாயம் என திருட்டு குடும்பம் பேசுவதை போல் உள்ளது இவனோட ஆவேசம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை