உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஏழைகளை பற்றி நடிகர்கள் சிந்திப்பதில்லை: அரசியலுக்கு வருவேன்: நடிகை அம்பிகா

ஏழைகளை பற்றி நடிகர்கள் சிந்திப்பதில்லை: அரசியலுக்கு வருவேன்: நடிகை அம்பிகா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''நான் அரசியலுக்கு வருவேன்; குறை கூற முடியாத அரசியல்வாதியாக இருப்பேன்,'' என, நடிகை அம்பிகா கூறினார். சென்னை கண்ணகி நகரில், மின்சாரம் தாக்கி பலியான துாய்மை பெண் பணியாளர் வரலட்சுமியின் குடும்பத்தினரை, நடிகை அம்பிகா நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். பின் அவர் அளித்த பேட்டி: தினமும் நான் பயப்படுவது மின்வாரியத்தை நினைத்து தான். ஒரு முறை ஷூட்டிங் முடித்து வீடு திரும்பும்போது, சென்னை ராமாபுரத்தில் மின்கம்பி அறுந்து கிடந்தது. மின்வாரிய அதிகாரியிடம் தகவல் தெரிவித்து, மின் இணைப்பை துண்டிக்க கூறியபோது, அவர், 'என் ஏரியா இல்லை' என அலட்சியமாக பதில் கூறினார். அடுத்த நிலை அதிகாரியிடம் கூறி, விபரீதத்தை தடுக்கும் உணர்வு அந்த அதிகாரிக்கு இல்லை. எனக்கு பவர் கிடைத்தால், மேஜிக் போல், சேதமடையும் மின் கம்பிகள் இருக்கும் இடத்தில் மின் இணைப்பை துண்டித்து விடுவேன். மின் வாரியத்தின் அலட்சியத்தால் தான், துாய்மை பணியாளர் வரலட்சுமி பலியானார். மனிதாபிமானம் அடிப்படையில் தான், அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற வந்தேன். இதர நடிகர் - நடிகையர் இங்கு வராதது வருத்தம் தான். போஸ்டர் ஒட்டவும், டிக்கெட் எடுக்கவும் மட்டுமே, இந்த மக்கள், நடிகர்களுக்கு தேவையாக உள்ளனர். அதனாலேயே, இந்த மக்களின் சுக, துக்கங்களில் பங்கெடுப்பதில்லை. 'ஏசி' அறையில் இருக்கும் நடிகர்களுக்கு, ஏழைகளின் கஷ்டங்கள் புரியாது. 'தாங்கள் படும் துன்பங்களை துடைக்காவிட்டாலும், ஆறுதலாக இருக்காத நடிகர்களின் படங்களை பார்க்க மாட்டோம்' என ஏழைகள் முடிவெடுத்தால், நடிகர்கள் பாடு திண்டாட்டமாகி விடும். இவ்வளவு துாரம் பேசுகிறீர்களே... நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா என கேட்டால், கண்டிப்பாக வருவேன். ஆனால், மக்கள் குறை கூற முடியாத அரசியல்வாதியாக இருப்பேன். இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

Naga Subramanian
ஆக 29, 2025 07:01

உங்களுக்கு பெர்பெக்டான இடம் திமுகதான் மேடம் அங்குதான் ஏழைகளின் சிரிப்பில் உலகம் வென்றவர்கள் அநேகமானவர்கள் இருக்கிறார்கள்.


joe
ஆக 28, 2025 13:05

தமிழ் நாட்டில் அரசியல் என்பது ரவுடிகளின் கைகளில் உள்ளது .மக்களும் விழிப்புணர்வுடன் இல்லை .விஜய் இப்போது அவரின் நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறார் .ஏனென்றால் உண்மையான சமூக நோக்கத்தோடு மக்களை அணுகினாலும் ஊழல்வாதிகளின் போக்கிலேயே தமிழக மக்கள் சென்று கொண்டிருக்கிறார்கள் .I J K போன்ற ஒரு சில கட்சிகளும் மறைமுகமாக மக்களிடம் மூட நம்பிக்கைகளை வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள் .இதுதாண் அரசியல் என்கிற அளவில் தமிழக மக்கள் அடிமைகளாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் .கடவுளே வந்தாலும் தமிழர்களை திருத்தமுடியாது .நீங்கள் உங்கள் நேரத்தை வீணடிக்கவேண்டாம் .


baala
ஆக 28, 2025 10:53

aam neengal வந்து எல்லாவற்றையும் அப்படியே சரி செய்து விடுவீர்கள். இவ்வளவு நாளாக எங்கே sentreergal.


vbs manian
ஆக 28, 2025 09:27

நூறு கோடி சம்பளம் வாங்கும் திரை உலகில் இவர் பேச்சு நம்பமுடியவில்லை. வாழ்த்துக்கள்.


Minimole P C
ஆக 28, 2025 08:25

Actress Ambika is an Indian citizen. She has every right to become a politician. Let us welcome her. The minimum service to the people that she can do is expose all womanizers like Kamal, Unithi, vijay, vadivel etc in the film industry as they get undue importance for which they can never qualify. TN and film fans may get rid of them.


S.V.Srinivasan
ஆக 28, 2025 07:59

வாங்கம்மா வாங்க. தமிழக அரசியலா அல்லது கேரளா அரசியலா. 99% தமிழக அரசியலாதான் இருக்கும். ஏன்னா இங்க இருக்கிறவங்கதான் இளிச்ச வாயர்கள். வாங்க வந்து நீங்களும் கும்மி அடிங்க.


சுந்தரம் விஸ்வநாதன்
ஆக 28, 2025 07:52

நீங்க அக்கா தங்கச்சி திரை உலகத்துல மின்னினபோது ஏழைகளுக்காக எப்போதாவது வருத்தப்பட்டு பாவம் சுமந்திருக்கீங்களா ? நாவுக்கரசருக்கு ரொம்ப வேண்டியவங்களா இருந்தபோதே நீங்க அரசியலுக்கு வந்திருந்தா 2027 குடியரசுத்தலைவர் பதவிக்கு உங்க பேரும் சேர்ந்திருக்கும்.


VSMani
ஆக 28, 2025 10:49

அக்கா தங்கச்சி திரை உலகத்துல மின்னினபோது ஹீரோக்கள் தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள் லைட் பாய் போன்றவர்களை திருப்த்திப்படுத்தவும், MGR, நாவுக்கரசர் மனம் விரும்பியவண்ணம் அவர்களை திருப்திப்படுத்தி சென்னையில் பல கோடி ரூபாய்க்கு கார்டன்கள் வாங்கவும், அரசு சிமெண்ட்லே பங்களாக்கள் கட்டவும் பிசியாக இருந்ததாலும், சமீப காலங்களில் வடிவேலுவின் பசிக்கு விருந்து அளித்ததில் பிசியாக இருந்ததாலும் ஏழைகளை நினைக்க நேரமில்லை. இப்போது வடிவேலுவின் வேல் தளர்ந்ததாலும், சினிமா வாய்ப்புகள் குறைந்ததாலும் நடிகைக்கு இப்போது ஏழைகளை நினைக்க நேரமிருக்கிறது.


Gopal
ஆக 28, 2025 07:45

அப்போ திமுகவில் அடைக்கலம்.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 28, 2025 07:28

முன்னேற்றக் கழகம் ன்னு ஆரம்பியுங்க அண்ணி..... நீங்க தலீவரு .... வடிவேலு அண்ணண் பொருளாளர் .....


சாமானியன்
ஆக 28, 2025 07:24

விமர்சனங்கட்கு மனம் தளராமல் இருந்தால் நல்ல தூக்கம் வரும். என்ன பணம் கொஞ்சம் செலவாகும். இது அம்பிகாவின் மனச்சாட்சி ஒத்துக்கொண்டால் கண்டிப்பாக அரசியலுக்கு வரலாம். ஏழைகள் குளிக்க மாட்டார்கள். நாகரிகமாக இருக்க மாட்டார்கள். சண்டை போடுவார்கள். கெட்ட வார்த்தைகளில் அவர்கட்கு அவரே திட்டிக்கொள்வார்கள். இதெல்லாம் சம்மதமா அம்மணி ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை