உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  எஸ்.ஐ.ஆர் பணிகளுக்கு கூடுதலாக 15 நாட்கள் வழங்க வேண்டும்: கிருஷ்ணசாமி கோரிக்கை

 எஸ்.ஐ.ஆர் பணிகளுக்கு கூடுதலாக 15 நாட்கள் வழங்க வேண்டும்: கிருஷ்ணசாமி கோரிக்கை

ராஜபாளையம்: போலி வாக்காளர்கள் நீக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. இதை அனைவரும் வரவேற்று ஆதரிக்க வேண்டும். ஒரு மாத அவகாசம் மட்டுமே இருப்பதால் நடைமுறை சிக்கல்கள் உள்ளன. எஸ்.ஐ.ஆர் பணிகளுக்கு கூடுதலாக 15 நாட்கள் வழங்க வேண்டும் என விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார். அவர் கூறியது: புதிய தமிழகம் கட்சியின் 7வது மாநில மாநாடு ஜன. 7ல் மதுரையில் நடைபெறுகிறது. இங்கு சுந்தர்ராஜபுரம், சோலைசேரி பகுதிகளில் கிராமத்தினரிடையே பிரச்னை ஏற்பட்டு கோயில்களை மூடி வைத்துள்ளனர். கோயில்களை திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். 20 ஆண்டுகளுக்கு பின் தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர் நடக்கிறது. போலி வாக்காளர்கள் நீக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. ஒரு மாத அவகாசம் மட்டுமே இருப்பதால் நடைமுறை சிக்கல்கள் உள்ளன. கூடுதலாக 15 நாட்கள் வழங்க வேண்டும். அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சியினரிடம் பூர்த்தி செய்த இப் படிவங்களை தராமல் நேரடியாக அதிகாரிகளிடம் வழங்க வேண்டும். தேசிய அளவிலான பாடத்திட்டம் தரமாக இருக்கும்போது போட்டியாக தமிழகத்தில் பாடத்திட்டம் மாற்றப்படும், எனக் கூறுவது அவசியமற்றது. மதுரை மாநாட்டில் அரசியல் யூகங்களுக்கு வழி வகுக்காத வகையில் எந்த சாயமும் இல்லாமல் மாநாடு நடைபெறும். மாநாட்டிற்கு பின்னரே அரசியல் மற்றும் கூட்ட நிலைப்பாடு குறித்து அறிவிக்கப்படும். ஆட்சி அமைந்த உடன் இரண்டு லட்சம் அரசு ஊழியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என தி.மு.க., தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டிருந்தது. அது குறித்து நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ