உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்திற்கு கூடுதல் நிதி

உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்திற்கு கூடுதல் நிதி

சென்னை : 'உங்களை தேடி, உங்கள் ஊரில்' திட்டத்தின் கீழ் முகாம் நடத்த, தாலுகா ஒன்றுக்கு வழங்கப்பட்ட, 20,000 ரூபாயை, 50,000 ரூபாயாக உயர்த்தி வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.சென்னை தவிர்த்து மற்ற மாவட்டங்களில், 'உங்களைத் தேடி, உங்கள் ஊரில்' திட்டத்தின் கீழ், ஒவ்வொரு வாரமும் மூன்றாவது புதன்கிழமை, ஏதேனும் ஒரு கிராமத்தில் முகாம் நடத்தப்படுகிறது. இதற்கு தாலுகா ஒன்றுக்கு, 20,000 ரூபாய் வழங்க, தமிழக அரசு 88.80 லட்சம் ரூபாய் ஒதுக்கியது. கடந்த பிப்., 2, 6ம் தேதிகளில், தலைமை செயலர் நடத்திய ஆய்வு கூட்டத்தில், மாவட்ட கலெக்டர்கள், '20,000 ரூபாய் போதுமானதாக இல்லை; அதை 50,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்' என்று கோரிக்கை வைத்தனர்.அதை ஏற்ற அரசு, உயர்த்தி வழங்கி உள்ளது. இதற்காக கூடுதலாக 99.90 லட்சம் ரூபாயை, தமிழக அரசு ஒதுக்கி உள்ளது. இதற்கான அரசாணையை, வருவாய் துறை செயலர் ராஜாராமன் வெளியிட்டு உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

R.RAMACHANDRAN
மார் 17, 2024 07:18

இந்த தொகையை ஊழல் பேர்வழிகள் எடுத்துக்கொண்டு திட்டம் அமல்படுத்தும் செலவினை யார் தலைமீதாவது கட்டுவார்கள். அவர்கள் மக்களிடம் வசூலித்துக்கொள்வர்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை