உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரயிலில் தனியாக செல்லும் பெண்ணுக்கு கூடுதல் பாதுகாப்பு: ரயில்வே எஸ்.பி.,

ரயிலில் தனியாக செல்லும் பெண்ணுக்கு கூடுதல் பாதுகாப்பு: ரயில்வே எஸ்.பி.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''ரயிலில் தனியாக செல்லும் பெண்களுக்கு, கூடுதல் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, ரயில்வே போலீஸ் எஸ்.பி., ஈஸ்வரன் தெரிவித்தார்.கோவையில் இருந்து திருப்பதி சென்ற, 'இன்டர்சிட்டி' ரயிலில், பெண்களுக்கான பெட்டியில், ஆந்திர மாநிலம் சித்துார் மாவட்டத்தை சேர்ந்த பெண் பயணி. கடந்த 6ம் தேதி பயணித்தார். இந்த ரயில், வேலுார் மாவட்டம் குடியாத்தம் -- கே.வி.குப்பம் இடையே சென்ற போது, ஹேமராஜ், 30, என்ற வாலிபர், அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தோடு, அவரை ரயில் இருந்து கீழே தள்ளி விட்டுள்ளார்.இந்நிலையில், ரயில்வே போலீஸ் எஸ்.பி., ஈஸ்வரன் நேற்று, சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் ஆய்வு செய்தார். பின், அவர் கூறியதாவது:பெண் பயணியரிடம் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக, ரயில் நிலையங்களில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முக்கிய ரயில் நிலையங்களில் தலா ஒரு பெண் காவலரும், ஆண் காவலரும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர். ரயிலில் பெண்களுக்கான பெட்டியில், பெண் பயணி தனியாக பயணிப்பதாக இருந்தால், அவசர உதவிக்கு, 1512, 99625 00500 ஆகிய எண்கள் வாயிலாக தகவல் கொடுக்கலாம்.அந்த பயணியின் பாதுகாப்புக்காக, ஒரு பெண் காவலர் உடன் பயணிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பெண் பயணியின் பாதுகாப்புக்காக, தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரயில்வே சார்பில், அனைத்து ரயில் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிகள் நடந்து வருகின்றன. படிப்படியாக இந்த பணிகள் முடியும் போது, பயணியருக்கான பாதுகாப்பு மேம்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Rathnam Mm
பிப் 09, 2025 10:38

The lady to be treated at Railway Hospital to her full recovery, it is best help for her.


ராமராவ்
பிப் 09, 2025 10:24

குடியாத்தத்தில் குற்றம் நடந்தால் செண்ட்ரலில் ஆய்வு செய்யும் காமெடி போலீஸ். பிடிபட்டவனுக்கு மாவுக்கட்டு போட்டு காப்பாத்தும் சிரிப்பு போலீஸ். துணைக்கு நம்ம சட்டங்களும், நீதிமன்றங்களும். ஹேமராஜுக்கு ஒரு நல்ல பெண்ணைக் கட்டி வெச்சு வரதட்சணையும் குடுக்குமாறு மகிளா கோர்ட்டை கேட்டுக் கொள்கிறோம்


அப்பாவி
பிப் 09, 2025 10:20

ஒரு பெசல் ஆணியும் வேண்டாம். புடிபட்ட ஹேமராஜை தூக்கில் போடுங்க. இதுதான் மக்கள் குடுக்கும் தீர்ப்பு.


Sudha
பிப் 09, 2025 08:23

அதாவது 2125ல் இது போன்ற நிகழ்ச்சி இருக்காது


Kasimani Baskaran
பிப் 09, 2025 06:28

ஒவ்வொரு பெட்டியின் வாசல் பகுதி மற்றும் கழிவறைக்கு அருகில் உள்ள பகுதியையும் கண்காணிப்பு காமிரா மூலம் கண்காணிக்க வேண்டும். ஆபத்து இருக்கிறது என்றால் அதற்க்கு தகுந்தது போல கண்காணிப்பு நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டும்.


D.Ambujavalli
பிப் 09, 2025 06:09

எப்போதும், குதிரை திருட்டுப்போனபின்தான் லாயத்தை இரட்டைப்பூட்டுப் போட்டு பூட்டுவார்கள் இல்லாத துறையும் இதே azhakuthaan


சமீபத்திய செய்தி