உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஐ.பி.எஸ்., அதிகாரிக்கு கூடுதல் பொறுப்பு

ஐ.பி.எஸ்., அதிகாரிக்கு கூடுதல் பொறுப்பு

சென்னை:அசாம் மாநிலம் குவஹாத்தியில், என்.சி.பி., எனும் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவின், வடகிழக்கு மண்டல துணை இயக்குநர் ஜெனரலாக பணிபுரியும் தமிழக ஐ.பி.எஸ்., அதிகாரி சுதாகருக்கு, கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழக காவல் துறையின், 2003ம் ஆண்டு ஐ.பி.எஸ்., அதிகாரியான சுதாகர், சென்னை மாநகர போலீசில் போக்குவரத்து கூடுதல் கமிஷனராக பணிபுரிந்தார். கடந்த மார்ச்சில் மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டு, அசாம் மாநிலம் குவஹாத்தியில் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவின் வட கிழக்கு மண்டல துணை இயக்குநர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார். தற்போது சுதாகருக்கு, சென்னை அயப்பாக்கத்தை தலைமை இடமாக வைத்து செயல்படும், என்.சி.பி., தென் மண்டல துணை இயக்குநர் ஜெனரல் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டு உள்ளது. இப்பொறுப்பில் பணிபுரிந்து வரும் ஐ.ஆர்.எஸ்., அதிகாரி வெங்கடேஷ், டில்லியில் உள்ள என்.சி.பி., தலைமை இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை