உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பத்திரப்பதிவுக்கு நாளை கூடுதல் டோக்கன்கள்

பத்திரப்பதிவுக்கு நாளை கூடுதல் டோக்கன்கள்

சென்னை:கார்த்திகை மாத சுபமுகூர்த்த நாள் என்பதால், நாளை, பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன்கள் வழங்க பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது. வளர்பிறை சுபமுகூர்த்த நாட்களில், பத்திரங்கள் பதிவு செய்ய அதிகமானோர் விரும்புகின்றனர். நாளை, கார்த்திகை மாத சுபமுகூர்த்த தினம் என்பதால், சார் - பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது. 100 டோக்கன்கள் வழங்கப்படும் அலுவலகத்தில், 300 டோக்கன்கள் வரை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !