உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அப்போ இனித்தது... இப்போ கசக்குதா? தி.மு.க.,வுக்கு இ.பி.எஸ்., கேள்வி

அப்போ இனித்தது... இப்போ கசக்குதா? தி.மு.க.,வுக்கு இ.பி.எஸ்., கேள்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'இது எங்களுடைய கட்சி. நாங்கள் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம். தி.மு.க.,வை தோற்கடிக்க வேண்டும் என்ற ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி அமைப்போம்' என்று சட்டசபையில் இருந்து வெளியே வந்த அ.தி.மு.க.,பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., தெரிவித்துள்ளார். அவர் பேசியதாவது; சட்டசபையில் அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு குறித்து விவாதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட உறையூர் பகுதியில் கழிவுநீர் குடிநீரோடு கலந்து வந்த காரணத்தினால், அப்பகுதியில் இருக்கும் மக்கள் அதனை குடித்துள்ளனர். இதனால், 4 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தேன். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=2qq8677v&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=015 நாட்களாக இந்த கழிவுநீர் கலந்த குடிநீரைத் தான் அந்த மக்கள் குடித்து வந்துள்ளனர். இதுபற்றி மாநகராட்சி அதிகாரிகளிடமும் கூறியுள்ளனர். அதிகாரிகள் கண்டுகொள்ளாத காரணத்தினால், 4 பேர் உயிரிழந்தனர். பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குடிநீரில் கழிவுநீர் கலக்கவில்லை என்று அமைச்சர் கூறினார். மாநகராட்சிக்கு அருகில் நடந்த சித்திரை திருவிழாவில் வழங்கப்பட்ட உணவு, குளிர்பானம், மோர் உள்ளிட்டவற்றை சாப்பிட்டதன் காரணமாகவே இந்த நிகழ்வு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார். சித்திரை திருவிழாவில் உறையூர் பகுதி மக்கள் மட்டும் தான் கலந்து கொண்டார்களா? பல்வேறு இடங்களில் இருந்தும் இந்த விழாவில் பங்கேற்றனர். அவர்களுக்கு எல்லாம் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதை இந்த அரசு மறைத்து தவறான செய்தியை வெளியிட்டுள்ளது. இதேபோல, கடந்த 2024ம் ஆண்டு சென்னை பல்லாவரத்தை அடுத்த மலைமேடு பகுதியில் குடிநீருடன் கழிவு நீர் கலந்ததை குடித்ததில், 3 பேர் உயிரிழந்தனர். அப்போதும், அந்தப் பகுதி அமைச்சர் இதே கருத்தை தான் சொன்னார். வேண்டுமென்றே இந்த அரசாங்கம் ஆட்சியில் நடந்த சம்பவங்களை மறைப்பதை கொள்கையாக வைத்துள்ளது. இது கண்டிக்கத்தக்கது. எங்களைப் பொறுத்தவரையில் கழிவுநீர் குடிநீரோடு கலந்து வந்ததை குடித்ததால் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. குடிநீரில் கழிவு நீர் கலப்பதை தடுக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நீட் தேர்வை கொண்டு வந்ததே தி.மு.க.,வும், காங்கிரசும் தான். அதனை தடுத்து நிறுத்த முயற்சித்தது அ.தி.மு.க., எங்கள் ஆட்சியில் வேறு வழியில்லாமல் கொண்டு வரப்பட்டது. 2010ல் நீட் தேர்வை கொண்டு வரும் போதே ரத்து செய்திருக்கலாம். இதனை செய்திருந்ததால், இத்தனை உயிர்களை இழந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இதற்கு முழு முழு காரணம், தி.மு.க., தான். எப்போது பார்த்தாலும், தி.மு.க., மற்றும் அவர்களின் கூட்டணி கட்சியினர், அ.தி.மு.க., பா.ஜ.,வுடன் கூட்டணி என்று அறிக்கை விடுகிறார்கள். இன்று முதல்வரே துடிதுடிக்க பேசுகிறார். நாங்கள் கூட்டணி வைத்தால், நீங்கள் ஏன் பதறுகிறீர்கள். ஏன் கோபப்படுகிறீர்கள். நீங்க ஏன் பயப்படுகிறீர்கள். இது எங்களுடைய கட்சி. நாங்கள் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம். 2026 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., பலம் வாய்ந்த கூட்டணியை அமைப்போம். முதல்வருக்கு பயம் வந்து விட்டது. முதல்வர் பதற்றப்படுவதை சட்டசபையில் பார்த்தேன். தி.மு.க.,வை தோற்கடிக்க வேண்டும் என்ற ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணி அமைப்போம். ஊழலை விட மதவாதம் என்பது கொடுமையானது அல்ல என்று 1999ல் பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்த கருணாநிதி பேசியுள்ளார். பா.ஜ.,வுடன் தி.மு.க., இணைந்து பணியாற்றிய போது இனித்தது. இப்போது கசக்குதா? 1999ல் தி.மு.க., பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்து வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியில் இருந்த போது, தி.மு.க.,வை சேர்ந்த அமைச்சர் ஒருவர் நோய் வாய்பட்டார். அவரை ஒரு வருடம் இலாகா இல்லாத அமைச்சராக வைத்திருந்தது. அப்போது, பா.ஜ., கட்சி நல்ல கட்சியாக தெரிந்தது. இப்போது, கூட்டணி வைத்தால் ஏன் வைக்கிறீர்கள்? என்கின்றனர், இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

N Annamalai
ஏப் 21, 2025 21:31

வெற்றி கண்ணில் தெரிகிறது .ஆனால் அவர்களிடம் பணம் உள்ளது .அது தான் உறுத்தல் .பணப்பட்டுவாடாவை தடுத்தால் வெற்றி நிச்சயம் .மாதம் ஆயிரம் ரூபாய் கொடுத்தது அவர்கள் கொடுத்த முன்பணம் அதுவும் EPS அவர்கள் கவனத்திற்கு


தாமரை மலர்கிறது
ஏப் 21, 2025 21:11

முதல்வர் பதவி வேணும்போது, பிஜேபி நல்ல கட்சி என்று திராவிட கட்சிகள் ஒரே மாதிரி சிந்திக்கின்றன . பதவி கிடைத்தபிறகு, ஏறிய ஏணியை உதைத்து தள்ளிவிடலாம் என்று யாரேனும் நினைத்தால், அமித் ஷா காலை வெட்டி விடுவார்.


Anantharaman Srinivasan
ஏப் 21, 2025 19:56

மத்தியில் ஆட்சியில் இருந்த போது, தி.மு.க.,வை சேர்ந்த அமைச்சர் ஒருவர் நோய் வாய்பட்ட அமைச்சர் முரசொலி மாறன் என்று சொல்ல இபிஸ்க்கு தயக்கம் ஏன்..?. அவரை ஒரு வருடம் இலாகா இல்லாத அமைச்சராக வைத்திருந்து வைத்திய செலவாக பல கோடி ரூபாயை பாஜக அரசு கொடுத்தது.


SIVA
ஏப் 21, 2025 17:44

அதிமுக பிஜேபி கூட்டணி இந்த முறை 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெரும் , அதை இன்னும் அதிகமாக்க திமுக போராடுகின்றது .....


Bala
ஏப் 21, 2025 16:20

வரும் 2026 சட்டசபை தேர்தலில் திமுக நோட்டாவிற்கு கீழ்தான். தமிழக மக்கள் முடிவு செய்து விட்டனர். திமுக ஆட்சியின் அவலங்களை பார்க்கும்போது அதிமுக பாஜக எவ்வளவோ மேல் என்ற முடிவுக்கு தமிழக மக்கள் வந்துவிட்டனர். திமுக மற்றும் திமுக கொத்தடிமை காட்சி ஊடகங்களின் அலறல்கள் வரும் நாட்களில் இன்னும் மிக அதிகமாக இருக்கும்


முருகன்
ஏப் 21, 2025 16:54

உன் கருத்து மக்கள் கருத்து ஆகாது


Narayanan
ஏப் 21, 2025 15:35

தேர்தல் நெருங்கும்போதுதான் எடப்பாடிக்கும் ஆவேசம் வருகிறதோ . ? எதிர்கட்சி சரியாக செயல்பட்டு இருந்தால் திமுக ஆட்சியால் விளைந்திருக்கும் கொடுமைகள் ஒடுக்கப்பட்டிருக்கும்.தனது எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கும் . கட்சி பொதுசெயலாளர் பதவிக்கும் பங்கம் வராமல் இருக்க இதுவரை ஸ்டாலினுடன் ஆட்டம் போட்டுவிட்டு இப்போ கசந்த உறவாகப்பேசுகிறார் ?


Anbilkathiravan
ஏப் 21, 2025 15:33

தெரிக்க விடுங்கள் ஈ பி எஸ் அவர்கேள ....... அடுத்து நீங்கள் தான் .


Sundar R
ஏப் 21, 2025 15:14

பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிற்கு சொத்துக்களை வைத்திருக்கும் கருணாநிதி குடும்பத்தினர் இன்னும் தேர்தலில் நின்று, தமிழக மக்களின் பாக்கெட்டில் இருந்து கொள்ளையடித்து இன்னும் பல கார்ப்பரேட் கம்பெனிகளை நடத்துவதற்காக பரமஏழை வேட்பாளர்களுடன் போட்டி போட்டு தேர்தலில் நிற்பது ஆச்சரியமாகவும், நல்ல தமாஷாகவும் இருக்கிறது. சாதாரண திமுக காரன் கூட பண்ணையார்களாகவும், மிராசுதாரர்களாகவும் எல்லா ஊர்களிலும் இருக்கிறார்கள். அவர்கள், தங்கள் பாக்கெட்டில் கற்றை கற்றையாக பணம் வைத்துக்கொண்டு தமிழக மக்களிடம் பிச்சை எடுப்பது எங்கும் காணக்கிடைக்காத காட்சி. ஊர் பேர் தெரியாத பிற கட்சிகள் கூட்டணி வைத்தால் கூட தாங்கள் அயோக்கியர்கள் என்பது மக்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கிற காரணத்தால் திமுகவினர் எல்லார் வீட்டு வாசலிலும் அலறுகிறார்கள்.


ராமகிருஷ்ணன்
ஏப் 21, 2025 14:59

வர உள்ள தேர்தலுக்கு திமுக எல்லா விதமான கள்ள ஓட்டு, பணத்துக்காக ஓட்டு, குவாட்டர், பிரியாணி ஓட்டு, திருட்டு ஓட்டு என்று வெறிபிடித்து ஓட்டு வாங்க முயற்சி செய்வார்கள். எடப்பாடி எப்படியாவது திமுகவின் தில்லாலங்கடி ஓட்டுகளை தடுக்க வேண்டும். அப்பத்தான் திமுகவினை வாஸ் அவுட் செய்ய முடியும்.


V RAMASWAMY
ஏப் 21, 2025 14:59

பொய், , பித்தலாட்டம், களவு, சூது, ஊழல், கொள்ளை, கொலை, திருட்டு, கற்பழிப்புக்கள், அரசு அலுவலகங்களில் மெத்தனம், லஞ்சம், இந்து, அந்தணர் அவமானம், கோயில் சொத்துக்கள் சூறையாடல், தேவையற்ற சிலவுகள், இலவசங்கள் அவற்றில் ஊழல்கள், இன்ன பிற இவற்றிற்கெல்லாம் எப்பொழுது முடிவு கடவுளே?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை