உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பெண்கள் பாதுகாப்பை துறந்து விளம்பர மோகத்தில் தி.மு.க., அரசு; இ.பி.எஸ். குற்றச்சாட்டு

பெண்கள் பாதுகாப்பை துறந்து விளம்பர மோகத்தில் தி.மு.க., அரசு; இ.பி.எஸ். குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை; பெண்கள் பாதுகாப்பை முற்றிலுமாக துறந்துவிட்டு, விளம்பர மோகத்தில் தி.மு.க., அரசு இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்., குற்றம்சாட்டி உள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை; https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=qgp8meaz&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கோவை அருகே 17 வயது சிறுமி 7 பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. சிறுமிகளுக்கே பாதுகாப்பற்ற மாநிலமாக தமிழ்நாடு ஸ்டாலின் மாடல் தி.மு.க., ஆட்சியில் மாறி வருவது மிகுந்த வேதனைக்குரியது.குற்றம் நடந்த பின் கைது செய்துவிட்டோம் என்று சொல்லும் முதல்வர், குற்றத்தை தடுக்க என்ன செய்தார் என்பதை ஏன் சொல்ல மறுக்கிறார்?தனக்கு தானே 'அப்பா' என்று புகழாரம் சூட்டிக் கொள்பவருக்கு, இந்த மாணவி மகள் போன்றவர் இல்லையா? இவரின் பாதுகாப்பு பறிபோனதற்கு யார் பொறுப்பு?பெண்கள் பாதுகாப்பை முற்றிலுமாக துறந்துவிட்டு, விளம்பர மோகத்தில் இருக்கும் தி.மு.க., அரசுக்கு எனது கடும் கண்டனம். கோவை மாணவி பாலியல் வழக்கில் கைதானோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

ராஜ்
பிப் 19, 2025 08:08

எந்த ஆட்சியிலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை அண்ணா திமுக ஆட்சியில் தான் பொள்ளாச்சி சம்பவம் நடந்தது அண்ணா திமுக ஆட்சியில் தான் பேருந்தில் பெண்கள் உயிருடன் கொளுத்தப்பட்டனர் மந்திரி ஜெயக்குமார் உதவி கேட்டு வந்த பெண்ணிடம் செய்த லீலை பிறகு அவருக்கு பிறந்த ஆண் குழந்தை எல்லோரும் அறிவார் எனவே வாயை மூடிக்கொண்டு சும்மா இருங்கள்.


பேசும் தமிழன்
பிப் 19, 2025 08:54

ஏம்பா நீ என்ன தான் சொல்ல வார.. உன் அம்மா அல்லது சகோதரியிடம் யாராவது தவறாக நடந்து கொண்டால்.. அமைதியாக போய் விடுவீர்கள்... அப்படி தானே ???


பேசும் தமிழன்
பிப் 19, 2025 08:07

பங்காளி கட்சி அல்லவா.... தோழமை சுட்டுதல்.... அது தான் இப்படி மென்மையாக நடந்து கொள்கிறார்.


orange தமிழன்
பிப் 19, 2025 06:42

பழனிசாமி அவர்களே, தயவு செய்து வலுவான கூட்டணி அமைத்து இவர்களை விரட்டுங்கள்......ஆனால் ஒன்று பாஜகவின் உதவி இல்லாமல் இது நடக்காது......


Ramesh Sargam
பிப் 18, 2025 22:30

முதல்வர் வீட்டு பெண்கள், திமுக அமைச்சர்கள் வீட்டு பெண்கள் மிக மிக பாதுகாப்பாக உள்ளனர். அப்படி இருக்கையில், பொதுமக்கள் பாதுகாப்பில் அவர்கள் கவனம் செலுத்துவார்களா?


T.sthivinayagam
பிப் 18, 2025 19:09

ஈபிஸ் ஐயா அவர்களே பாலியல் வன்கொடுமை அதிமுக ஆட்சி காலத்தில் நிறைய நடந்து உள்ளது ஆனால் உங்கள் கட்சி விஐபிகள் சினிமா பாணியில் பஞ்சாயத்தை பண்ணி அதில் ஒருத்தருக்கு கல்யாணம் பண்ணி வைத்து விட்டார்கள் இப்போது கட்ட பஞ்சாயத்து இல்லாமல் போலிசில் புகார் அளிப்பது உங்களுக்கு ம் உங்கள் கூட்டனி கட்சிக்கும் பிடிக்கவில்லையா


மோகனசுந்தரம் லண்டன்
பிப் 18, 2025 18:37

தமிழகத்தில் இவ்வளவு பெரிய அநியாயங்களுக்கு முக்கிய காரணம் நீர் தான். உம்முடைய அறிவில்லாத செயல்தான் இன்று அநியாய அக்கிரம அலங்கோல ஆட்சி நடக்கிறது. அதற்கு முக்கிய காரணம் உம்முடைய அறிவில்லாத தனம் தான்.


Venkatesan Ramasamay
பிப் 18, 2025 18:11

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே...இருட்டுனில் நீதி மறையட்டுமே... தன்னாலே வெளிவரும் தயங்காதே.. ஒரு த .வெ . க. தலைவன் இருக்கிறான் மயங்காதே....


பேசும் தமிழன்
பிப் 19, 2025 08:11

அட நீ வேற கமெடி பண்ணி கொண்டு.... அந்த ஆள் வேற மொழி படிக்க வேண்டாம் என்று சொல்லி விட்டு... தன் மகனை வேற மொழியில் படிக்க வைக்கிறார்.... போதாத குறைக்கு காசு வாங்கி கொண்டு மாற்று மொழி சொல்லி கொடுக்கும் பள்ளி வேறு நடத்துவதாக செய்தி வருகிறது.


M Ramachandran
பிப் 18, 2025 18:07

மறை முக மாக ஸ்டாலினுக்கு ஜிங்ச்சா போடும் எதிர்க்கட்சியை கூழை கும்புடு போடுபவர் இவருக்கு ஜால்ரா ஜிங்கிச்சா அடிப்பவர் ஜெயக்குமார்


M Ramachandran
பிப் 18, 2025 17:44

சொரத்தில்லா வாயசைப்பு. டில்லியில் ராவுளு இங்கு எல பாடி துப்பில்லா எதிர் கட்சி தலைவர்


Venkateswaran Rajaram
பிப் 18, 2025 17:38

இரண்டு திருட்டு திராவிடங்களும் மக்களை இளிச்சவாயர்களாக்கி கொள்ளையடிக்கும் கூட்டுக் களவாணி கொள்ளை கூட்ட கும்பல்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை