உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நீட் தேர்வு ரத்து பொய்யால் மாணவர் உயிரிழப்பு: தி.மு.க., மீது பாயும் இ.பி.எஸ்.

நீட் தேர்வு ரத்து பொய்யால் மாணவர் உயிரிழப்பு: தி.மு.க., மீது பாயும் இ.பி.எஸ்.

சென்னை: தி.மு.க.,வின் நீட் தேர்வு ரத்து நாடகத்திற்கு மாணவர்கள் பலியாக வேண்டாம் என்று அ.தி.மு.க., பொதுச் செயலாளர் இ.பி.எஸ்., கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை; சேலம் சூரமங்கலம் அருகே உள்ள நரசோதிப்பட்டி பகுதியைச் சேர்ந்த மாணவர் கௌதம், நீட் தேர்வு அச்சத்தால் தன் இன்னுயிரை மாய்த்துக் கொண்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.ஸ்டாலின் மாடல் தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து 24வது மாணவர் நீட் தேர்வால் உயிரிழப்பு. ஒரு பொய்யின் விளைவு என்ன என்பதை இப்போதாவது ஸ்டாலின் உணர்வாரா?அன்பிற்கினிய மாணவச் செல்வங்களே, தி.மு.க., ஆட்சி வந்தால் நீட் ஒழிந்துவிடும் என இந்த டம்மி அப்பாவும், அவர் மகனும் கூறிய அத்தனையும் பொய், பொய், பொய்.ஊழல் செய்யவும், கொள்ளையடித்த பணத்தைக் காப்பாற்றவும், ED ரெய்டுக்கு பயந்து 'தம்பி'யை தப்பிக்க வைக்கவுமே இவர்களுக்கு நேரம் சரியாக இருக்கிறது. (யார் அந்த தம்பி?)இவர்களா நீட் ரத்து செய்யப்போகிறார்கள்? அத்தனையும் நாடகம். தி.மு.க.,வின் நாடகத்திற்கு நீங்கள் பலியாக வேண்டாம்.ஒரு முறை, ஒரே ஒரு முறை, உங்கள் பெற்றோர்களைப் பற்றி சிந்தித்து பாருங்கள். அவர்களுக்கு நீங்கள் தான் உலகமே. அவர்களை விட்டுச் செல்ல ஒருபோதும் நினைக்காதீர்கள்.இந்த உலகில் எத்தனையோ வாய்ப்புகள் இருக்கின்றன. உங்களுக்காக பல்வேறு கதவுகள் திறந்து உள்ளன. அவைகளை கண்டறிந்து முன்னேறுங்கள். மனம் தளரவேண்டாம்.தம்பி கௌதமின் பெற்றோருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.ஸ்டாலின் அவர்களே, வெட்டியாக எடுக்கும் உங்கள் போட்டோ ஷூட்டை நீட் மாணவர்களுக்காக ஒருமுறை எடுத்து, அவர்களிடம் நீங்கள் சொன்ன பொய்க்காக பகிரங்க மன்னிப்பு கேளுங்கள்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

பாரத புதல்வன் தமிழக குன்றியம்
மே 20, 2025 18:17

நீட் தேர்வை கண்மூடித்தனமாக எதிர்க்கும் அரசியல் வியாதிகளுக்கு சொல்லிக்கொள்வது என்னவென்றால், பாரத நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களும் ஏற்று கொண்டு நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் NCERT பாடத்திட்டங்களை கற்கும் வகையில் அமைத்து அனைவரும் ,அரசு மருத்துவகல்லூரிகளில் சேர்க்கின்றனர். தமிழகத்தின் இந்த போலி அரசியல் வாதிகள் வார்த்தை ஜாலங்களை நம்பாமல் பல்வேறு பகுதிகளில் நீட் தேர்வில் படித்து அகில இந்திய அளவில் முதன்மை பெற்று வருகின்றனர், இந்த சுயநல கிருமிகள் நீட் தேர்வை ஒழிக்கும் தந்திரம் எங்களுக்கு தெரியும் என்ற தத்தியின் பேச்சை நம்பி ஏமாந்த மாணவர்கள் விபரீத முடிவை எடுக்க வேண்டிய நிலைக்குதள்ளிய பெருமை அவர்களையே சாரும். ஆரம்பத்தில் ஒரு லட்சத்திற்கும் குறைவாக எழுதிய மாணவர்கள் இன்று1,50,000 த்தை தாண்டி ஆர்வமுடன் எழுதி உள்ளார்கள்... ஒவொரு ஆண்டும் தேர்ச்சி விகிதம் அதிகரித்து வருகிறது, தமிழக அரசு வீண் குழப்பத்தை ஏற்படுத்தி, தேர்வுக்கு தேவையான பாடத்திட்டங்களை உருவாக்குவதை விட்டு, தேவையற்ற எதிர்மறை எண்ணங்களை விதைக்ககும் விஷயங்களை செய்து வருகிறது. 100 சதம் முறைகேடுகள் இல்லா தேர்வு தான் தனியார் மருத்துவகல்லூரிகள் அனைத்தும் அரசியல் வாதிகள் நடத்துவது...12 ம் வகுப்பில் மதிப்பெண்கள் முறைகேடு செய்து பணம் பெற்று அட்மிஷன் போட்டு, வசூல் செய்து வந்தார்கள்.தற்போது நீட் தேர்வால் எந்த ஊழலும் செய்ய முடிவதில்லை, அதிக மருத்துவ கல்லூரிகள் உள்ளது தமிழ்நாட்டில் மட்டுமே ஆகையால் இவர்கள் எதிராக ஓலமிடுகிறார்கள். நீட் தேர்வு மூலம் மாணவர்கள் சாதனை படைத்து எதிர்க்கும் தீய சக்திகள் முகத்தில் கரியை பூசி வெகு ஆண்டுகள் ஆகி விட்டது. இன்னும் உணராமல் இவர்கள் கூறுவது அவர்களின் தெளிவான சிந்தனை இல்லாத,சுயநல கிருமிகள் என்பதை உணரவேண்டும். கற்றது கை மண் அளவுகல்லாதது உலகளவு, என்ற அவ்வையார் வாக்கின் படி கற்பது குற்றம் ஆகாது, ஆகையால் இவர்களின் ஓலத்தை தவிர்த்து அணைவரும் அனைத்து தகுதி தேர்வு எழுதும் வகையில் படித்து முன்னேற வேண்டும். இல்லையெனில் இவர்கள் நடத்தும் சாராய கடையில் சுண்டல் விற்கும் நிலைக்கு தள்ளி விடுவார்கள். ஆகையால் மாணவ மாணவிகள் உஷாராக இருந்து இவர்களுக்கு கல்வி மூலமாகவும் வரும் தேர்தல் மூலமாகவும் விரட்டி விரட்டி துரத்த வேண்டும். இல்லையெனில் சமச்சீர் கல்வியால் நாடு30 ஆண்டுகள் பின்னோக்கி போய்விட்டது, இனி வரும் காலங்களில் எந்த ஒரு அகில அளவிலான IAS, IPS, IRS, IFS போன்ற தேர்வை எழுதி தேர்ச்சி பெற முடியாது. நீட் தேர்வை எழுதி, அரசு கல்லூரியில் படித்க ஆகும் செலவு ஆண்ட்டிற்கு30,000/- அதுவும்5 ஆண்டில் சம்பளத்துடன் படிப்பு, இதே தனியார் கல்லூரியில் 30, 00,000/ ஆண்டிற்கு ஆகும்.முன்னேற வேண்டுமெனில் படிக்க வேண்டும் உணர்ந்து கொள்ளுங்கள் மக்களே...


Kjp
மே 20, 2025 16:42

அரசியல்வாதிகள் எத்தனையோ வாக்குறுதிகள் கொடுப்பார்கள்.அவைகளை நிறைவேற்றாவிட்டால் மக்களின் உயிருக்கு ஒன்றும் ஆகப் போவதில்லை.நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்றும் ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்கு மட்டுமே தெரியும் என்று வாக்குறுதியை பின் விளைவுகளை அறியாமல் கொடுத்த காரணத்தால் பல உயிர்கள் பலி ஆகியிருக்கிறது.இனியும் நம்ப முடியாத காரணங்களை சொல்லாமல் நீட் தேர்வு ரத்து செய்ய எங்களால் முடியாது என்பதை பகிரங்கமாக அறிவித்து மாணவ மாணவியர்களை தற்கொலை செய்வதிலிருந்து காப்பாற்றுங்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை