உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அப்பா...அப்பா...என்ற கதறல் கேட்கவில்லையா: முதல்வருக்கு இ.பி.எஸ்., கேள்வி!

அப்பா...அப்பா...என்ற கதறல் கேட்கவில்லையா: முதல்வருக்கு இ.பி.எஸ்., கேள்வி!

வேலூர்: ''குழந்தைகள் தன்னை அப்பா என்று அழைப்பதாக கூறும் முதல்வர் ஸ்டாலினுக்கு, பாலியல் தொல்லைக்கு ஆளாகும் குழந்தைகளின் கதறல் கேட்கவில்லையா,'' என்று வேலுார் பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கேள்வி எழுப்பினார்.வேலூரில் நடந்த அ.தி.மு.க., இளைஞர்கள், இளம்பெண்கள் பாசறை கூட்டத்தில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., பேசியதாவது: சில பேருக்கு இன்று தூக்கம் வராது. ஏனென்றால், கோட்டையில் இருப்பவர்களை வீட்டுக்கு அனுப்பும் கூட்டம் தான் இது. வேலூர் கோட்டையில் நம்முடைய இளைஞர் பாசறை சிப்பாய்கள் செயின்ட் ஜார்ஜ் கோட்டையை நோக்கி புறப்பட்டு விட்டார்கள். இ.பி.எஸ்., உடைய அறிக்கை பா.ஜ., தலைவரின் அறிக்கையை போன்று இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். அ.தி.மு.க., யாரையும் நம்பி கிடையாது. மக்களை நம்பித்தான் இருக்கிறது. தி.மு.க., அதன் கூட்டணியை நம்பி இருக்கிறது. எங்களை நாடித்தான் மற்றவர்கள் வருவார்கள். மற்றவர்களை நாடிச் செல்லும் நிலை எப்போதும் கிடையாது. இளைஞர்கள் என்னை 'அப்பா' என்று அழைப்பதாக முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். குழந்தைகள் மற்றும் பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாகும் போது, 'அப்பா, அப்பா' என்று கதறும் சத்தம் முதல்வர் ஸ்டாலினுக்கு கேட்கவில்லையா? இதுக்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?ஜன., முதல் பிப்.,14ம் தேதி வரையில் சுமார் 107 போக்சோ வழக்குகள் தமிழகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 56 பெண்கள் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகியிருப்பதாக வழக்குகள் பதிவாகியுள்ளன. எதிர்க்கட்சியாக இருந்த போது, பிரதமர் மோடியின் வருகைக்கு கருப்பு பலூன் பறக்கவிட்டு, கோ பேக் மோடி என்று சொன்ன ஸ்டாலின், தற்போது வெல்கம் மோடி என்கிறார். ஊழல் குற்றச்சாட்டுகள் நிறைந்த காரணத்தினால் பயத்தில் வெள்ளைக்குடை பிடிக்கிறார். ஸ்டாலினுக்கு வெள்ளைக்குடை வேந்தன் என்று பெயர் சூட்டினால் பொருத்தமாக இருக்கும். தி.மு.க., அங்கம் வகிப்பதனாலேயே இண்டி கூட்டணி சின்னாபின்னமாகி விட்டது. ஒருபக்கம் இண்டி கூட்டணியில் இருந்து கொண்டு, மறுபக்கம் பா.ஜ., மத்திய அமைச்சரை அழைத்து வந்து கருணாநிதிக்கான நிகழ்ச்சியில் பங்கேற்க வைக்கிறார். இரட்டை வேடம் போடும் கட்சி தி.மு.க.,. அதிகாரத்திற்கு வருவதற்காக, கொள்கையை விட்டுக் கொடுக்கும் கட்சி தி.மு.க., தான். 2026 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமையும். பா.ஜ., காங்கிரஸ் என தி.மு.க., மாறி மாறி கூட்டணி வைத்தது. நம்மை பற்றி பேச ஸ்டாலினுக்கு அருகதை இல்லை. தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் கடைபிடிக்கப்படும். ஏழைகள் பாதிக்கப்படுவதை எண்ணிப் பார்த்து 100 நாள் வேலைத் திட்டத்திற்கான நிதியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று ஸ்டாலின் கையை விரித்து விட்டார். ஊர் ஊராக சென்று, நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறி, மக்களை ஏமாற்றி, ஆட்சியை பிடித்தார்கள். தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு, விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி உயர்ந்துள்ளது. தி.மு.க., ஆட்சியில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது, இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

sankar
பிப் 18, 2025 18:09

யாரோ எழுதிய ஸ்கிரிப்ட பேசுகிறார், நீங்க வேற


பேசும் தமிழன்
பிப் 17, 2025 09:01

இவர் இத்தனை நாட்களாக அமைதியாக கோமாவில் இருப்பது போல் தானே இருந்தார்.. இப்போது என்ன புதிதாக நாடகம் பங்காளி கட்சியை குறை கூறிக்கொண்டு? ஓ... சரி சரி தேர்தல் வருகிறது அல்லவா. அதனால் தான் இந்த மாதிரி எல்லாம் பேச வைக்கிறது. எல்லாம் தேர்தல் படுத்தும் பாடு. இத்தனை நாட்களாக எதிர்கட்சி வேலையை பிஜெபி கட்சி அண்ணாமலை அவர்கள் தானே??


orange தமிழன்
பிப் 17, 2025 07:40

ஆண்டவா.....இந்த இரு திராவிட கட்சிகளுக்கு மாற்றாக ஏதாவது ஒரு நல்ல கட்சியை மக்களுக்கு காட்டு......எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்....ஒரு விஷயத்தை தவிர அதிமுகவில் யாரும் கடவுளை நிந்திபவர்கள் கிடையாது குறிப்பாக ஹிந்துகள் கும்பிடும் கடவுள்களை.....


D.Ambujavalli
பிப் 17, 2025 06:45

பொள்ளாச்சியில் அண்ணா என்று கதறியவர்களும் பெண்கள் தானே அது காதில் விழுந்ததா? ஒரே குட்டை, ஒரே மட்டை இதில் பேச்சேன்னா,?


நிக்கோல்தாம்சன்
பிப் 17, 2025 05:44

எப்படியோ கட்சி கொடி கட்டி டோல் கேட் க்ராஸ் பண்ணுகிறவர்களை எல்லாம் இந்த பெண்கள் வீடியோ பிடித்து போட்டு மாமாவிற்கு கால் பண்ணு என்று தான் கூறுகிறார்கள் , வயதான பெண்களோ போஸ்டர் கூட விடாமல் காலில் இருப்பதால் அடிக்கிறார்கள் அதுவே பெரிய அக்ஷீவ்மெண்ட் தான் தலைவரே ,ஞானசேகரங்கள் சாருக்கு போன் போட்டு கூட்டிக்கொடுக்கிறார்கள் , கேட்டால் பிரியாணி கொடுப்பதற்காக கால் பண்ணுவார்களாம் , அயலக தலைவர்களோ மெத்து மெத்து என்று கடத்துவார்களாம் அதிலும் மருமகளை வைத்து படம் எடுப்பார்கள் இதெல்லாம் இபிஸ் அவர்கள் கண்ணுக்கு தெரியவே தெரியாது


Senthoora
பிப் 17, 2025 04:26

எங்களுக்கு அம்மா, அம்மா என்று கூண்பாண்டிகள் கதறுவது கேட்குது.


ஜெய்ஹிந்த்புரம்
பிப் 17, 2025 01:06

பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாகும் போது, அப்பா, அப்பா என்று கதறும் சத்தம் முதல்வர் ஸ்டாலினுக்கு கேட்கவில்லையா? - பொள்ளாச்சியில் நூற்றுக்கணக்கான பெண்கள் அண்ணா அண்ணா என்று கதறியது வீடியோவில் வந்தது. அதை இந்த தவழும் தலைவர் பார்த்தாராமா ?


Bala
பிப் 17, 2025 00:38

கொள்ளுத்தாத்தா ஆகும் வயசாகிவிட்டது


தாமரை மலர்கிறது
பிப் 17, 2025 00:11

உதயநிதி அப்பா அப்பா என்று கத்தினால் தான் ஸ்டாலின் திரும்பி பார்ப்பார். உதயநிதியை பிடித்து திஹாரில் போடுங்கள். எப்படி ஸ்டாலின் கதறுவார் என்று பார்த்து ரசிக்கலாம்.


Anantharaman Srinivasan
பிப் 16, 2025 23:11

சம்பந்தமில்லாமல் அப்பா அப்பா என்று ஒருவரை அழைத்தால் அதற்கு வேறு அர்த்தமும் உண்டு.


SIVA
பிப் 17, 2025 08:59

தந்தை பெரியார் என்று சொல்கின்றார்கள் அதற்கு என்ன அர்த்தம் , உங்களுக்கு வந்தா ரத்தம் அடுத்தவனுக்கு வந்தா தக்காளி சட்னி .....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை