உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அ.தி.மு.க., ஒன்றிணைய வேண்டும்: சசிகலா

அ.தி.மு.க., ஒன்றிணைய வேண்டும்: சசிகலா

காஞ்சிபுரம்:அ.தி.மு.க.வின் மறைந்த இருபெரும் தலைவர்களுக்கு உண்மையாக இருக்க முயலுங்கள். தி.மு.க.வை வீழ்த்த அ.தி.மு.க.வினர் ஒன்றுபட வேண்டும் என தொண்டர்களுக்கு சசிகலா குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார்.தொண்டர்களுக்கு சசிகலாவின் குறுஞ்செய்தியில் கூறியதாவது:அ.தி.மு.க.வின் மறைந்த இரு பெரும் தலைவர்களுக்கு உண்மையாக இருக்க முயலுங்கள். தி.மு.க.வை வீழ்த்த அ.தி.மு.க.வினர் ஒன்றுபட வேண்டும். பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க.வையும் விரைவில் நான் ஒன்று சேர்ப்பேன். கட்சி பிளவுபட்டிருப்பதால் அ.தி.மு.க. தொண்டர்கள் எல்லோரும் வருத்தத்தில் உள்ளனர். செவிடன் காதில் ஊதிய சங்கு போல தொடர்ந்து போக முடியாது. எல்லோரும் ஒன்று சேர்வதே நம் தலைவர்களுக்கும் மக்களுக்கும் நாம் செலுத்தும் பெரிய நன்றிக்கடன் என சசிகலா குறுஞ்செய்தியில் தெரிவித்து உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை