உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பேச்சுவார்த்தையில் உடன்பாடு: டாக்டர்கள் போராட்டம் வாபஸ்

பேச்சுவார்த்தையில் உடன்பாடு: டாக்டர்கள் போராட்டம் வாபஸ்

சென்னை: சென்னையில் அரசு டாக்டர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, அறிவிக்கப்பட்ட வேலை நிறுத்த போராட்டத்தை டாக்டர்கள் சங்கம் திரும்ப பெற்றுக் கொண்டது. அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த டாக்டர் பாலாஜியை கத்தியால் குத்தினர். இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தாய்க்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை எனக்கூறி டாக்டரை 4 பேர் தாக்கியது தெரிய வந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=zv5hmgt8&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0'அரசு டாக்டர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளேன்' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.இந்நிலையில், அரசு டாக்டர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, அரசு டாக்டர்கள் சங்கம் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது. இந்த சம்பவத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என டாக்டர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து, அரசு டாக்டர்கள் சங்கத்தினருடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், துறை செயலர் சுப்ரியா சாகு, சென்னை போலீஸ் கமிஷனர் அருண், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் ஆசிர்வாதம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் டாக்டர்களின் பாதுகாப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது.அப்போது, மருத்துவமனைகளில் பாதுகாப்பு, ரோந்து பணி உள்ளிட்ட கோரிக்கைகள் ஏற்கப்பட்டதைத் தொடர்ந்து போராட்டத்தை டாக்டர்கள் சங்கத்தினர் வாபஸ் பெற்றுக் கொண்டதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
நவ 13, 2024 21:52

இர்ஃபான் விவகாரம் போல இதனையும் பிசு பிசுக்க செய்து விடுவார்கள் திராவிட மாடலில். முதலில் சிங்கம் போல சீறுவார்கள் பின்னர் பூனை குட்டி போல அடங்கி போவார்கள் திராவிட மாடல்.


S.Martin Manoj
நவ 13, 2024 19:17

இது எதேச்சயாக நடந்த ஒரு நிகழ்வு ,


Bahurudeen Ali Ahamed
நவ 13, 2024 18:49

என்ன இதுக்கு வேலை நிறுத்தம் அறிவிக்கிறார்கள் இவர்கள், அந்த ஒருவன் செய்த தவறுக்காக மற்ற நோயாளிகள் என்ன செய்வார்கள், மருத்துவர்கள் நீங்கள் சேவை நோக்கத்திலா பணிபுரிகிறீர்கள் சில நல்ல மருத்துவர்களைத்தவிர மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் பெற்றுக்கொண்டு அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் எரிந்து விழுகிறீர்கள், தயவுசெய்து இந்த போக்கை மாற்றிக்கொள்ளுங்கள், அந்த நபர் மருத்துவரை கத்தியால் குத்தியது மிகப்பெரிய தவறு, அதற்காக அந்த நபர் கைது செய்யப்பட்டிருக்கார், அந்த நபருக்கு சரியான தண்டனை கிடைக்க வேண்டும் என்று கோரிக்கை வையுங்கள் அதுதான் சரியானதாக இருக்கும்


Ramanujadasan
நவ 13, 2024 18:00

அது தானே ? இப்படி எரநூறு ரூபா கூலிகள் வந்து மாறடிக்க இது மாதிரி சம்பவம் என்ன பிஜேபி ஆளும் மாநிலத்திலா நடந்தது ? உலகமே வியக்கும் அரசு புரியும் திராவிட மாடல் முதல்வரின் அரசல்லவா இங்கே ?


Balamurugan
நவ 13, 2024 17:29

நீங்க அரசியல் பண்ணும்போது நல்லா இருந்துச்சா? இல்லே மறந்து போச்சா?


வைகுண்டேஸ்வரன்
நவ 13, 2024 16:46

எவ்வளவு மடத்தனமான பதிவுகள். எவனோ திடீர்னு ஒரு டாக்டரைக் குத்திட்டான் னா திராவிட அரசு அது இது ன்னு எழுதறாங்க?? புரியல. குத்தினவன் இந்து. குத்துப்பட்ட டாக்டர் இந்து. ஒவ்வொரு ஆஸ்பத்திரி யிலுமா போலீஸ் போட்டு, மெட்டல் டிடக்டர் வெச்சு ஒவ்வொரு விசிட்டரையும் சோதனை போடவா முடியும்? தாக்கியவனையும் , கூட வந்தவனையும் கைது செய்தாயிற்று. பாதிக்கப்பட்ட டாக்டருக்கு சிகிச்சை தரப்படுகிறது. துணை முதல்வர் நேரில் சென்று பணிகளை துரிதப் படுத்தியிருக்கிறார். எந்த அரசாங்கமும் இதைத்தான் செய்யும். ஏன் இப்படி குற்ற அரசியல் பண்றீங்க??


MURALIDHARAN .N
நவ 13, 2024 17:21

Acute shortage of doctors is the main reason. This government has not filled the doctor vacancy.more than 4000 doctor post are vacant in government hospitals. So overburdened doctors may not be able to give proper care. So it is the duty of elected government to fill the doctor post in all government hospitals.


வாய்மையே வெல்லும்
நவ 13, 2024 16:41

சப்பான் ல இறுக்கிக்குற குச்சிஐசு கில்பானுக்கு காட்டுற தமிழக அரசின் உங்க நிழலுலகத்துக்கு காட்டும் கரிசனம் பார்த்து தமிழக மக்களே சிரிப்பாக சிரிக்கிறார்கள். சட்டத்தை விட்டத்தில் வைக்கும் அரசு கேலிக்கூத்து , எல்லாம் வோட்டு பிச்சை செய்யும் அடிவருடி வேலை ..


krishnan
நவ 13, 2024 16:08

CISF செக்யூரிட்டி வேண்டும். இது govt ஹாஸ்பிடல் தானே .. ஓசில தானே இருக்கும்


K. Suriyanarayanan
நவ 13, 2024 15:55

திராவிட மாடல் அப்படித்தான், வாழ்க டமில் வளர்க கொத்தடிமை கூட்டம்


rasaa
நவ 13, 2024 15:04

என்ன சொல்கின்றது?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை