உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஏ.பி.ஆர்.ஓ., நியமனத்தில் முறைகேடு நடந்தால் கோர்ட்டை நாட அ.தி.மு.க.,வுக்கு அனுமதி

ஏ.பி.ஆர்.ஓ., நியமனத்தில் முறைகேடு நடந்தால் கோர்ட்டை நாட அ.தி.மு.க.,வுக்கு அனுமதி

சென்னை; தமிழக அரசின் செய்தி துறையில், ஏ.பி.ஆர்.ஓ., எனப்படும் உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் நியமனத்தில் முறைகேடு நடந்தால், அ.தி.மு.க., - எம்.பி., இன்பதுரை தரப்பு, நீதிமன்றத்தை நாட அனுமதி அளித்து, செ ன்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இடைக்கால தடை தமிழக அரசு, ஏ.பி.ஆர்.ஓ., நியமனம் தொடர்பான விதிகளில் திருத்தம் செய்து, 2022ல் அரசாணை வெளியிட்டது. இதை எதிர்த்து, சீனிவாச மாசிலாமணி என்பவர் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அரசாணைக்கு இடைக்கா ல தடை விதித்தது. இந்நிலையில், எதிர்வரும் சட்டசபை தேர்தலில் ஆதாயம் அடையும் நோக்கில், தி.மு.க., - ஐ.டி., பிரிவைச் சேர்ந்தவர்களை ஏ.பி.ஆர்.ஓ.,வாக நியமிக்க தமிழக அரசு முயற்சிப்பதாக கூறி, அ.தி.மு.க., வழக்கறிஞர் அணி செயலர் இன்பதுரை சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர்கள் ஜெயபிரகாஷ் நாராயணன், தமிழ செல்வன் ஆகியோர் , இடையீட்டு மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில், 'பொது அறிவிப்பு வெளியிடாமல், எழுத்து தேர்வு நடத்தாமல், பெயரளவில் விண்ணப்பங்களை வரவேற்று, தி.மு.க.,வைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப பிரிவினரை நியமிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 'இது, உயர் நீதிமன்ற உத்தரவுக்கு விரோதமானது. இந்த நியமனத்தை அனுமதித்தால், அரசு வேலையை எதிர்பார்த்து காத்திருக்கும் தகுதியான நபர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். 'வி திகளுக்கு முரணாக, சட்டவிரோதமாக ஏ.பி.ஆர்.ஓ., நியமனத்தை தடுக்கவும், சீனிவாச மாசிலாமணி தாக்கல் செய்த வழக்கில், தங்களையும் ஒரு தரப்பாக சேர்க்கவும் உத்தரவிட வேண்டும்' என, கோரியிருந்தனர். இந்த வழக்கு, நீதிபதி டி.வினோத்குமார் முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சீனிவாச மாசிலாமணி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'மனுவை திரும்ப பெற அனுமதிக்க வே ண் டும்' என்று, கோரினார். வாய்ப்பு இடையீட்டு மனுதாரரான இன்பதுரை தரப்பில், 'மனுவை திரும்ப பெ ற அனுமதித்தால், உதவி மக்கள் தொடர்பு அதிகாரிகள் நியமனத்தில் முறைகேடு நடக்க வாய்ப்பு உள்ளது' என, தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அவ்வாறு முறைகேடு நடந்தால், நீதிமன்றத்தை நாடலாம் என, இன்பதுரை தரப்புக்கு அனுமதி அளித்த நீதிபதி, மனுவை திரும்ப பெற அனுமதித்து, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இன் பதுரை தாக்கல் செய்த இடையீட்டு மனுவையும் முடித்து வைத் தார்.

ஏ.பி.ஆர்.ஓ., நேரடி நியமனம்?

ஏ.பி.ஆர்.ஓ., பதவிக்கு தகுதியான நபர்களை, டி.என்.பி.எஸ்.சி., வாயிலாக தேர்வு செய்ய வேண்டும் என்ற அரசாணைக்கு எதிராக வழக்கு தொடர்ந்து, அதற்கு தடை பெற்றவரே வழக்கை வாபஸ் பெற்றுள்ளார். இதனால், தமிழக அரசு மீண்டும் நேரடி நியமன முறையில் ஏ.பி.ஆர்.ஓ., பதவி களை நிரப்ப வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அவ்வாறு நிரப்பினால், அரசியல் செல்வாக்கு உள்ளவர்களின் சிபாரிசு பெற்றவர்களுக்கே வாய்ப்பு கிடைக்கும். இது, பட்டதாரி ஆசிரியர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக, அ.தி.மு.க., வழக்கறிஞர் அணி செயலரும், எம்.பி.,யு மான இன்பதுரை வெளியிட்ட அறிக்கை: ஏ.பி.ஆர்.ஓ., பதவிக்கு டி.என்.பி.எஸ்.சி., மூலமே, ஆட்களை தேர்வு செய்ய வேண்டும் என்ற அரசாணைக்கு எதிராக, தடையாணை பெற்றவர் வழியே வழக்கை வாபஸ் பெற்று, தி.மு.க., - ஐ.டி., பிரிவு நிர்வாகிகளை நியமனம் செய்ய, தி.மு.க., அரசு முயல்வதாக உயர் நீதிமன்றத்தில் அச்சம் தெரிவித்தோம். அரசு முறைகேடு செய்தால், நீதிமன்றத்தை அணுகலாம் என, நீதிபதி தெரிவித்துள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ