உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அ.தி.மு.க., நிர்வாகிகள் நீக்கம்..

அ.தி.மு.க., நிர்வாகிகள் நீக்கம்..

சென்னை: திண்டுக்கல், திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க., நிர்வாகிகளை நீக்கி, அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.அவரது அறிக்கை:அ.தி.மு.க.,வின் கொள்கை, கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சி கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்டதாலும், திண்டுக்கல் மேற்கு மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை தலைவர் ஆனந்தகுமார்.திருவாரூர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி இணை செயலர் ஆனந்தபாபு ஆகியோர், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகின்றனர்.அ.தி.மு.க.,வினர் அவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை