உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அ.தி.மு.க., வலுவிழந்து வருகிறது; சொல்கிறார் திருமாவளவன்

அ.தி.மு.க., வலுவிழந்து வருகிறது; சொல்கிறார் திருமாவளவன்

சென்னை: 'ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க., போட்டியிடவில்லை என்பது அரசியல் ரீதியாக அ.தி.மு.க., வலுவிழந்து உள்ளதை காட்டுகிறது' என விடுதலை சிறுத்தைக் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.சென்னை விமான நிலையத்தில், திருமாவளவன் கூறியதாவது: வேங்கைவயலை தனித்தீவாக மாற்றி உள்ளனர் போலீசார். தி.மு.க.,வுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை கூறுவதில் அ.தி.மு.க., குறியாக இருக்கிறது. பா.ஜ., அரசு செய்யும் தவறுகளை அ.தி.மு.க., சுட்டிக்காட்டவில்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலிலும் கூட அ.தி.மு.க., போட்டியிடவில்லை. அரசியலுக்கு ரீதியாக எந்த அளவிற்கு வலுவிழந்து வருகிறார்கள் என்பதை உறுதி படுத்துகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=3ers46l5&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தி.மு.க., அரசை எதிர்ப்பதை மட்டுமே செயல் திட்டமாக கொண்டிருக்கும் அ.தி.மு.க., தேர்தல் களத்திலும் பலத்தை காட்டியிருக்க வேண்டும். வெற்றியோ, தோல்வியோ, இடைத்தேர்தலை சந்தித்து இருக்க வேண்டும். பா.ஜ.,வும், அ.தி.மு.க., வும் ஒருமித்த முடிவை எடுத்து இருக்கிறார்கள்.இதன் மூலம் அவர்கள் வரும் சட்டசபை தேர்தலில் கை கோர்க்க போகிறார்கள் என்று தான் தெரிகிறது. ஆதவ் ஆர்ஜூனா மீது நாங்கள் ஒழுங்கு நடவடிக்கையை எடுத்து இருந்தோம். அவர் கட்சியில் இருந்து வெளியேறினார். இப்போது அவர் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வியூக வகுப்பாளராக பணியாற்ற போவதாக ஊடகம் மூலம் தகவல் அறிந்தேன். அவருக்கு எனது வாழ்த்துகள். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பெண்களை காரில் துரத்திய சம்பவம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு திருமாவளவன் அளித்த பதில்: இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் ஒரு விளக்கம் அளித்துள்ளனர். சம்பந்தப்பட்டவர்களை கைது செய்வதற்கு தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அவ்வாறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் காரில் கட்சிக் கொடி கட்டப்பட்டிருப்பதாலேயே அவர்கள் தி.மு.க.,வினர் என்கிற முடிவுக்கு வந்து விட முடியாது; அதற்கு அந்த கட்சி பொறுப்பாக முடியாது. யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

V வைகுண்டேஸ்வரன், chennai
ஜன 31, 2025 08:54

அடுத்தவன் வலுவை பற்றி நீ பேசுற. நீ ரொம்ப வலுவாக இருந்தால் தனியா தேர்தலை சந்தி. பிளாஸ்டிக் சேர் வேண்டாமே


Laddoo
ஜன 30, 2025 23:25

இதுக்கு இப்போதுதான் இது தெரியுமா?


ராமகிருஷ்ணன்
ஜன 30, 2025 21:11

தமிழகத்தில் பணம் கொடுத்து ஓட்டுகளை விலைக்கு வாங்கி ஜெயிக்க ஆரம்பித்த பிறகு கட்சிகளின் நிஜமான ஓட்டு பலம் தெரியவில்லை. மக்களின் குணம் மாற வேண்டும். இடை தேர்தலில் திமுக பணம் கொடுக்காமல் இருந்தால் திமுகவினரின் ஒட்டு சதம் தெரியும். அதை நீங்கள் ஏன் பேசவில்லை


Perumal Pillai
ஜன 30, 2025 20:54

இவன் பேசுவதில் இது மட்டுமே உண்மை .


RAMAKRISHNAN NATESAN
ஜன 30, 2025 20:39

இதை திருமா சொல்வதே திமுகவுக்குத்தான் .... அப்படியெல்லாம் படிதாண்டிட மாட்டேன், கவலைப்படாதீங்க என்று உறுதி கூறுகிறார் ....


கூமூட்டை
ஜன 30, 2025 20:28

ஊசிப்போன குருமா மற்றும் சுண்டல் மாடல்


S.L.Narasimman
ஜன 30, 2025 20:16

நீர் இன்னும் விடியல் கொடுக்கின்ற ஓட்டை பழையசேரில் உட்கார்ந்து விடியலுக்கு சாமரம் வீசி அவகளுக்கு சால்ரா போட்டு பிழைப்பை ஓட்ட வேண்டியதுதான்.


Murugesan
ஜன 30, 2025 20:15

திமுககாகாரன் பிழைக்கிற ரவுடிகளின் தலைவர் சொன்னால் சரிதான்


தாமரை மலர்கிறது
ஜன 30, 2025 19:49

அதிமுக இடத்தை பிஜேபி நிரப்பிவிட்டது. எடுபிடிக்கெல்லாம் மக்கள் ஒட்டு போடமாட்டார்கள்.


பாலா
ஜன 30, 2025 19:42

ராயபக்சாவின் வீட்டில் சாப்பிட்டவரின் கொழுப்பு வலுப்பெற்றுள்ளது?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை