மேலும் செய்திகள்
போக்சோ வழக்கில் தலைமறைவு வாலிபர் கைது
25-Sep-2025
பனமரத்துப்பட்டி:முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை விமர்சித்த விவகாரத்தில், சேலம் அ.தி.மு.க., பிரமுகர் வக்கீல் மணிகண்டனுக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அ.தி.மு.க.,வைச் சேர்ந்த வக்கீல் மணிகண்டன், பழனிசாமி ஆதரவாளர். இவர், 'டிவி' நிகழ்ச்சியில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை விமர்சித்து பேசினார். இதையடுத்து, ஈரோடு மாவட்டம், கோபியைச் சேர்ந்த செங்கோட்டையன் ஆதரவாளர் சத்தியசீலன், ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக, மணிகண்டனுக்கு கடந்த செப்., 30ல் ஈரோடு போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால், ஆஜராக வரும் போது தன் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறி, விசாரணைக்கு மணிகண்டன் ஆஜராகவில்லை. இந்நிலையில், வரும் 14ல், தகுந்த ஆவணங்களுடன் ஈரோடு கூடுதல் எஸ்.பி.,யிடம் நேரில் ஆஜராக வேண்டும் என, இரண்டாம் முறையாக மணிகண்டனுக்கு ஈரோடு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். அதற்கு பதிலளித்த மணிகண்டன், பாதுகாப்பு வழங்கினால் ஆஜராவதாகவும், இல்லாவிட்டால், கேள்வி பட்டியலை அனுப்பினால், எழுத்துப்பூர்வமாக பதிலளிப்பதாகவும், நேற்று ஈரோடு கூடுதல் எஸ்.பி.,க்கு தபால் மூலம் கடிதம் அனுப்பியுள்ளார்.
25-Sep-2025