வாசகர்கள் கருத்துகள் ( 58 )
தமிழக பாமர வாக்காளர்களுக்கு திமுக , அதிமுக என்ற இரண்டு முக்கிய கட்சிகளை தான் தெரியும். ஒற்றையா இரட்டையா என்றுதான் வோட்டுப் போடுவார்கள் கூட்டணி வைத்துவிட்டதால் பாஜவுக்கு கிடைக்கும் இடங்களை பார்த்த பிறகு கூட்டணி ஆட்சியா இல்லையா என்று பார்க்க வேண்டும் எருமை சந்தைக்கே வரவில்லை அதற்குள்ளேயே ‘நெய் பிறந்த வீட்டுக்குத்தான் முதலில்’ என்ற கதை போல இருக்கிறது
அதிமுக கடைசி வரை அமைதி காப்பதே அவர்களுக்கும் தமிழக மக்களுக்கு நன்மை பயக்கும். அதிமுக எதிர்கட்சியாக இருப்பதை விட பாஜகவுக்கு ஆட்சியில் பங்கு கொடுத்துவிட்டு ஆட்சி அமைத்தது மத்திய அரசிடம் சலுகைகளை பெற்று ஆட்சி செய்வதே நல்லது தமிழகத்தை வளர்ச்சி பாதையில் இட்டுச் செல் வழிவகுக்கும். இன்னும் வரகூடிய குறைந்து 5 தேர்தலில் பாஜக ஆட்சி தான் பாரதத்தில் என நடுநிலை அரசியல் வல்லுனர்களின் கூற்று.
கவனம் எடப்பாடியாரே, கவனம், ரியாலிட்டி புரிந்து கவனமாக, புத்திசாலித்தனமாக செயல்படுங்கள். அந்த மாமனிதன் எம்ஜிஆர் உருவாக்கிய கட்சி. இரும்புப்பெண்மணி ஜெயலலிதா கட்டிக்காத்த கட்சி. தமிழக மக்களின் மனதுக்கு நெருக்கமான இரட்டை இலை சின்னத்தை, அண்ணா உருவம் பொறித்த கொடியை கொண்ட கட்சி, அதை வீணாக்கிவிடாதீர்கள்.அமித்ஷாவின் மண்டகொழுப்பும், அண்ணாமலையின் வாய்கொழுப்பும் சேர்ந்துதான் 2024 பாராளுமன்ற தேர்தலுக்கு முன் அதிமுக பாஜக கூட்டணி உடைய காரணமாக இருந்தது. அதே போல அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு ரெண்டு மாதம் முன்பு பஞ்சர் ஒட்டிய கூட்டணி மீண்டும் புட்டுக்கும். எடப்பாடியார் அவர்களே கவனமாக முடிவெடுங்கள். அதிமுக தவெக விசிக புதிய தமிழகம் முடிந்தால் நாம் தமிழர் கட்சியை சேர்த்து கூட்டணி அமைத்தால் 150 - 175 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு உறுதி. திமுகவின் ஸ்லீப்பர் செல்லான தமிழக பாஜக, பாமக தேமுதிக நம்பகமான கட்சிகள் அல்ல. அதைவிடுத்து திமுகவுடன் கள்ளக்கூட்டணியில் இருக்கும் பாஜகவோடு கூட்டணி அமைத்து போட்டியிட்டால் இஸ்லாமியர்கள், கிருஸ்தவர்கள், க்ரிப்டோ-கிருஸ்தவர்கள், தலித்துகள் வாக்குகள் அரை சதவிகிதம் கூட உங்க கூட்டணிக்கு கிடைக்காது. பிறகு வழக்கம் போல மைனாரிட்டி மற்றும் தலித் வாக்குகள் 20 - 25 சதவிகிதம் பல்க்காக கட்டுமர கம்பெனி அள்ளிக்கிட்டு போயிடும். மீதமுள்ள 75 சதவிகித ஹிந்து வாக்குகள், அதில் 35 சதவிகித ஹிந்துக்கள் ஒட்டு போடவே வரமாட்டாய்ங்க. இப்போ தவறவிட்டால் இனி எப்போதும் கிடையாது எடப்பாடியாரே.
கூட்டணி ஆட்சி பற்றி பேசுவது ஏற்கனவே ஆட்சியில் பங்கு என்று பேசிவரும் டீம்கா அல்லக்கை கட்சிகளை நிச்சயமாக இன்னும் உசுப்பேத்தும்.
தமிழக மக்கள் கூட்டணி ஆட்சிக்காக எப்போதும் ஓட்டு போட்டதில்லை. மறுபடியும் திமுக வெற்றிக்கு அமித்ஷா வழி வகுத்து விட்டார். அவருக்கு இருப்பதாக சொல்லப்படும் சாணக்கியத்தனம் தமிழக மக்களிடம் எடுபடாது. ஏமாறுவது பிறவிக் குணம். திமுகவிற்கு பொற்காலம்.
அதிமுக தனித்து ஆட்சியமைத்தால், 2031ல் திமுக விடம் ஆட்சியை தாரை வாரத்து விடும். அந்த அளவுக்கு லஞ்சம், ஊழல், ரவுடியிஸம் தலைவிரித்தாடும். இந்து விரோத கோஷ்டிகள் தடையில்லாமல் இயங்கும்.
ஒரு நல்ல அடிமை வியாபாரி அடிமைகளை போட்டிக்கு தயார் செய்வதற்கு முன்னாடியே கையில் பிரம்பு இருக்கு என்பதற்காக போட்டு வெளுத்து வாங்கி அடிமையோட கையையும் காலையும் உடைத்து விட்டு போட்டிக்கு தயார் செய்யும் அடிமை வியாபாரியை உலகம் பார்த்ததுண்டா ??? இப்போ பார்க்கிறோம் அப்படிப்பட்ட அடிமை வியாபாரி பற்றி பொதுஜனம் என்ன மாதிரி எண்ணம் வைக்கும் ??
அமைதி காப்பது துணிவின்மையே காட்டும்.
அமித் ஷா நினைப்பவர் தான் முதலமைச்சர் இதில் மேலிடம் வருத்தம் என்ன வேண்டி உள்ளது அவர் ஒன்றும் ஜெயலலிதா கிடைக்காது
இப்படியே மெளன சாமியாராக இருந்தால், எதிர் முகாமினரின் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாக வேண்டியது தான். இது தொண்டர்களிடமும் ஒருவித மனச்சோர்வை ஏற்ப்படுத்தி விடும். கூட்டணி ஆட்சி என்பது தேர்தல் முடிந்த பின்னர் கட்சிகளுக்கு கிடைக்கும் இடங்களைப் பொறுத்து முடிவு செய்ய வேண்டிய விஷயம். இப்பொழுதே கூட்டணி ஆட்சி என்றால், அதிமுக தொண்டர்கள் பிஜேபிக்கு வேலை செய்ய மாட்டார்கள். தமிழ்நாட்டு மக்களும் எப்பொழுதுமே கூட்டணி ஆட்சியை விரும்ப மாட்டார்கள். 1980 தேர்தலில் முன்னதாகவே கூட்டணி ஆட்சி என்று அறிவித்து விட்டு திமுக-காங்கிரஸ் அணி தேர்தலை சந்தித்த போது மக்கள் அதனை நிராகரித்த முன்னுதாரணம் இருக்கிறது. பிஜேபி கொஞ்சம் எஜமான மனப்பான்மையிலிருந்து விடுபட்டு கள யதார்த்தத்தை உணர்ந்து பொது வெளியில் பேச வேண்டும். இல்லையெனில் இது இந்த கூட்டணியின் தோல்விக்கு வழி வகுக்கும். செல்வராஜ், மதுரை.