உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அ.தி.மு.க., பொதுக்கூட்டம்: பழனிசாமி அறிவிப்பு

அ.தி.மு.க., பொதுக்கூட்டம்: பழனிசாமி அறிவிப்பு

சென்னை: 'அ.தி.மு.க., சார்பில், எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம், அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் நடத்தப்படும்' என, அக்கட்சி பொதுச்செயலர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

அ.தி.மு.க., நிறுவனர் எம்.ஜி.ஆரின் 108வது பிறந்த நாளையொட்டி, நாளை மறுதினம் முதல் 22ம் தேதி வரை, பிப்., 12 முதல் 14ம் தேதி வரை, அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் பொதுக்கூட்டம் நடக்கும். கட்சி அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் பிற மாநிலங்களிலும் பொதுக்கூட்டம் நடக்கும்.ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல், பிப்., 5ல் நடக்க உள்ளதால், அந்த மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டசபை தொகுதிகளில், எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம், பிப்., 12, 13, 14ம் தேதிகளில் நடக்கும். கூட்டத்தில், கட்சியினர் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.கூட்டம் நடக்கும் இடம், அதில் பங்கேற்க உள்ள சிறப்பு பேச்சாளர்கள் விபரத்தை, கட்சி தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நாளை மறுதினம், செங்கல்பட்டு மாவட்டம், சோழிங்கநல்லுார் சட்டசபை தொகுதியில் நடக்கும் பொதுக் கூட்டத்தில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பங்கேற்று பேச உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி