உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆக.,16ல் அதிமுக செயற்குழு கூட்டம்: என்னென்ன தீர்மானங்களை நிறைவேற்ற திட்டம்?

ஆக.,16ல் அதிமுக செயற்குழு கூட்டம்: என்னென்ன தீர்மானங்களை நிறைவேற்ற திட்டம்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஆகஸ்ட் 16ல் நடக்க உள்ள அதிமுக செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்கள் பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.அதிமுக.,வின் அவசர செயற்குழுக் கூட்டம் ஆக.,16ம் தேதி நடைபெறும் என்று அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் அறிவித்துள்ளார். அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் சுமார் 300 செயற்குழு உறுப்பினர்கள் வரை கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்கள் பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.அதாவது, தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள், போதைப்பொருள் புழக்கம் உள்ளிட்ட பிரச்னைகளை மையப்படுத்தி, திமுக அரசை கண்டித்து பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்ற அதிமுக திட்டமிட்டுள்ளது. அதேபோல், அதிமுக கட்சி ரீதியாக உள்ள மாவட்டங்களை மேலும் பிரிக்கவும், இரு தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் என விதிமுறை நடைமுறைப்படுத்தவும் தீர்மானிக்கப்பட இருக்கிறது.மேலும், 2026 தேர்தலுக்காக ஆலோசனை குழு அமைத்தல், கட்சியில் இளைஞர்களை அதிகளவில் சேர்த்தல், உட்கட்சி தேர்தலை நடத்துவது, சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன் போன்ற துரோகம் செய்தவர்களை கட்சியில் சேர்ப்பதில்லை, டிசம்பரில் பொதுக்குழு கூட்டம் போன்ற தீர்மானங்களும் நிறைவேற்றப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Vijay D Ratnam
ஆக 12, 2024 22:49

எடப்பாடியாரே, டெல்லிக்காரனின் டார்கெட் விக் மண்டையனோ, அவிக தற்குறி மவனோ கிடையாது. நீங்க. ஒங்கள ஒழிச்சாத்தான் அவிங்க இங்கே தலைதூக்க முடியும் கட்டுமர கம்பெனி குடும்பத்துக்கும் டெல்லியில் நம்பர் டூ இடத்தில் இருக்கும் குண்டு அண்ணாத்தேக்கும் இருக்கும் அண்டர்க்ரவுண்ட் டீலிங்ஸ், ஷேரிங்ஸ், கமிஷன்ஸ் குறித்தெல்லாம் பேசமாட்டீங்களா. அன்றாடங்காய்ச்சியாக வாழ்க்கைய தொடங்கி பிழைப்புக்காக திருட்டு ரயிலேறி பட்டினத்துக்கு அரசியலுக்கு வந்த தீயசக்திக்கு எடுபிடியாக இருந்த மறுமவன்ட மவன், தீய சக்தியின் மவ, திஹார்ல கூடவிருந்த அவிக ஸ்டெப்னி பாவா, அல்லக்கையாக இருந்து இன்றைக்கு மல்டி மில்லியனர்களாக இருக்கும் சாராய.பாலு, சாராய ரட்சகன் சொத்து வருமானம் குறித்து ஃபைல்ஸ் போட்டுட்டு டீலிங்ஸ் முடிந்து கமுக்கமா இருக்கும் டெல்லிகாரங்க குறித்தெல்லாம் செயற்குழு கூட்டத்தில பேசமாட்டீங்களா. அர்விந்த் கெஜ்ரிவால் மாதிரி சின்னப்பசங்களை தூக்கி உள்ள வச்சான்களே. இந்த கட்டுமர அல்லக்கைகளை தொட்டு பார்க்க சொல்லுங்க பாப்போம். டவுசரை உருவிட்டு ஓட விட்ருவாய்ங்கல்ல.


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை