உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்தது தவறு: சசிகலா

இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்தது தவறு: சசிகலா

சென்னை: சென்னை போயஸ் கார்டனில் இல்லத்தில் ஆதரவாளர்கள் மத்தியில் சசிகலா பேசியதாவது: அதிமுக தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. சில சுயநலவாதிகள் இந்த இயக்கத்தை எடுத்துச் சென்றனர். அரசியல் தொடர்பாக பல விஷயங்களை எம்.ஜி.ஆர்., என்னிடம் பேசி உள்ளார். அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும் எனக்கூறியுள்ளார். அதற்கு முன்னுரிமை அளித்தார்.2026 ல் தனிப்பெரும்பான்மையுடன் ஜெயலலிதா ஆட்சி அமையும். தமிழகம் முழுவதும் விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன். திமுக.,வின் கோரப்பிடியில் இருந்து தமிழகத்தை விடுவிக்க அ.தி.மு.க., ஆட்சி அமைக்க வேண்டும். எம்ஜிஆர் போல் தான் ஜெயலலிதாதிகழ்ந்தார். எம்ஜிஆர், ஜெயலலிதா ஜாதி பாகுபாடு பார்த்தது கிடையாது. அதிமுக தலைமை பதவிக்கு சாதாரண தொண்டனும் வர முடியும். அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்ற கருத்து வரவேற்கத்தக்கது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக., புறக்கணித்தது தற்போதைய சூழலில் சரியில்லை. பிரதான கட்சியான அதிமுக இடைத்தேர்தலில் போட்டியிடாதது தவறு. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Pv, முத்தூர்
ஜூன் 16, 2024 22:23

அதிமுக பற்றி பேச நீங்கள் யார்? நீங்கள் ஜெயலலிதாவுக்கு பணிப்பெண்ணாக இருந்தீர்கள். உங்கள் வேலை முடிந்தது. ஜெயலலிதாவிடம் இருந்து கொள்ளையடிப்பதை வைத்துபிழைத்துக்கெள்


கோவிந்தராஜ்
ஜூன் 16, 2024 18:15

அ.தி.முக. ஒன்றாகதான் உள்ளது . இடைதேர்தல புறக்கணித்தது சரியே நீங்க அமைதியா இருக்கும் சொத்தை வைத்து ஓய்வில் இருங்க அது வே கட்சிக்கு நல்லதுங்க


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ