உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பன்னீருக்கு அ.தி.மு.க., பதிலடி

பன்னீருக்கு அ.தி.மு.க., பதிலடி

மதுரை:'நான்கரை ஆண்டுகள் துணை முதல்வராக இருந்தபோது, பழனிசாமியின் ஆளுமை பற்றி பன்னீருக்கு தெரியவில்லையா' என அ.தி.மு.க., கேள்வி எழுப்பியுள்ளது. முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை மீண்டும் சேர்ப்பதில்லை என்பதில் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி உறுதியாக உள்ளார். எனவே, 'பழனிசாமி தலைமைப் பண்பு இல்லாதவர்; ஆளுமை இல்லாதவர்; இனியும் தோல்விகளையே சந்திப்பார்' என மிகக் கடுமையாக பன்னீர் செல்வம் விமர்சித்தார். அவருக்கு பதிலளிக்கும் விதமாக, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சரும் சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவருமான உதயகுமார் கூறியதாவது: அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியின் ஆளுமை பற்றி அறிந்தே, அவரை முதல்வர் வேட்பாளராக பன்னீர்செல்வம் முன்மொழிந்தார். அவருடன், நான்கரை ஆண்டுகள் துணை முதல்வராக இருந்தபோது, அவரது ஆளுமை பற்றி தெரியாதா? பழனிசாமியின் பிரசார பயணம் வெற்றி பெற்றதால், காழ்ப்புணர்ச்சியோடு பன்னீர்செல்வம் விமர்சிக்கிறார்; விரக்தியில் பொறாமைப்படுகிறார். லோக்சபா தேர்தலில், ஒரு நிமிடம் பன்னீர் செல்வம் யோசித்து இருந்தால் அ.தி.மு.க.,வை எதிர்த்து போட்டியிட்டு இருக்க மாட்டார். இந்த அளவுக்கு சோதனைகள், தடைகள், சத்திய சோதனைகளை, அ.தி.மு.க., எதிர்கொள்ள வேண்டிய அவசியம் இருந்திருக்காது. பன்னீர்செல்வத்தின் கருத்துகள் அனுதாபத்தை தேடும் விதமாகவும், பிரச்னைகளை திசை திருப்பும் விதமாகவும் உள்ளது. தடம் புரண்டு சென்ற அவரது கருத்துகளை பெரிதாக எடுத்துக் கொள்ள தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

S.jayaram
ஆக 16, 2025 19:41

முதலில் நீங்கள் தொண்டர்களை மதியுங்கள்.உங்களுக்காக வேலை பார்ப்பவர்கள் அவர்கள்தான்,அவர்களுக்கு பதவி ஆசை பணத்தாசை இருக்காது.நமது கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என்று தான் விரும்புவார்கள்.ஆனால் உங்கள் தலைமையோ ஜெயாவை முன்னிறுத்தியே பேசுகிறார் எம்ஜிஆரின் தொண்டர்கள் இல்லாமல் அதிமுக இல்லை.அவர்கள்தான் கட்சியை,கிளைகளை கிராமம் வரையில் எடுத்துச் சென்றனர்.அவர்களுக்கு ஜாதி, மதம் எதுவும் தெரியாது ஆனால் ஜெயாவின் தொண்டர்கள் அப்படி நினைத்து செயல்படுகின்றனர். எம்ஜிஆர் ஆட்சியின் போது 11 மந்திரிகளை ஒரே சமயத்தில் நீக்கினார். அப்போது எந்த தொண்டனும் என் ஜாதிக்காரனை ஏன் நீக்கினீர்கள் என்று கேட்கவில்லை. ஆனால் இப்போ ஒரு பன்னீர்செல்வத்தை நீக்கியவுடன் சாதியப்பிரச்சினை எழுகிறது ஏன்? காரணம் அவர்களுக்கு கட்சி முக்கியமல்ல.எனவே இனிமேலாவது எம்ஜிஆரின் தொண்டர்களை அரவணைத்து செல்லுங்கள்.


peermohammednurullaraja peermohammednurullaraja
ஆக 16, 2025 18:19

எந்த பன்னீருக்கு தலையில் தெளிக்கும் பன்னீருக்கா.


S.L.Narasimman
ஆக 16, 2025 07:22

தீமுகாவின் பீ டீம் பன்னீரு கட்சிக்கு துரோகம் செய்தமையால் அதிமுக தொண்டர்கள் முதல் அனைவரும் வெறுப்பதால் பேசாமல் விடியலை சந்தித்த கையோடு குடும்ப சேவை செய்ய தீமுகாவுடன் ஐக்கியமாகி விடலாம்.


புதிய வீடியோ