உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஷார்ஜா நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு; பயணிகள் 150 பேர் அவதி

ஷார்ஜா நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு; பயணிகள் 150 பேர் அவதி

திருச்சி: திருச்சியில் இருந்து ஷார்ஜா நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.திருச்சி விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 4.40 மணிக்கு ஷார்ஜா நோக்கி புறப்பட ஏர் இந்தியா விமானம் தயாரானது. அப்போது விமானத்தை விமானி சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். கடைசி நேரத்தில் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=a6p51m0a&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதை அடுத்து விமானம் ஓடுபாதையில் அவசரமாக நிறுத்தப்பட்டது. விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு சரி செய்யும் பணியில் நிபுணர்கள் ஈடுபட்டு உள்ளனர்.150க்கும் மேற்பட்ட பயணிகள் விமானத்துக்குள்ளேயே அமர வைக்கப்பட்டுள்ளனர். இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.சமீப காலமாக விமானத்தில் அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவது பயணியர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

nisar ahmad
செப் 03, 2025 10:20

கேவலமான மோடியின் ஆட்சியில் சொந்தமா ஒரு விமானத்தை வைத்து நல்ல சர்வீஸ் தர வக்கில்லை நேர்மையான முறையில் ஜெயித்து வந்திருந்தால் தானே ஓட்டுத்திருடண் திருடி ஆட்சிக்கு வந்ததால் எல்லாவற்றையும் விற்று தின்கிறது.


Ramesh Sargam
செப் 03, 2025 09:53

இப்பொழுதுள்ள முக்கால்வாசி ஏர் இந்தியா விமானங்கள் எல்லாம் பறக்க தகுதியற்றவை ஆகிவிட்டன. எல்லாவற்றையும் ஸ்க்ரேப் செய்துவிட்டு, ஏர் இந்தியா விமான நிறுவனம் புதிய விமானங்களை வாங்கி பயணிகளின் பயணத்தை சிறப்பாக்கவேண்டும் என்பது எனது பணிவான வேண்டுகோள்.


முக்கிய வீடியோ