உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசு வேலை, இலவச பட்டா அஜித்குமார் தம்பி அதிருப்தி

அரசு வேலை, இலவச பட்டா அஜித்குமார் தம்பி அதிருப்தி

திருப்புவனம் : மடப்புரம் கோவில் காவலாளியின் தம்பி, அரசு வழங்கிய பணி, இலவச பட்டா குறித்து அதிருப்தி தெரிவித்தார்.சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரத்தில் போலீஸ் விசாரணையின் போது இறந்த பத்ரகாளியம்மன் கோவில் தனியார் நிறுவன காவலாளி அஜித்குமார் குடும்பத்திற்கு, வழங்கப்பட்ட ஏனாதி இடத்தை, மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி, நேற்று ஆய்வு செய்தார்.அஜித்குமார் தாய் மாலதிக்கு, ஜூலை, 2ல் ஆறுதல் தெரிவிக்க வந்த அமைச்சர் பெரியகருப்பன், ஏனாதியில் மூன்று சென்ட் நிலமும், சகோதரர் நவீன்குமாருக்கு காரைக்குடி ஆவின் நிறுவனத்தில் அரசு பணி ஆணையும் வழங்கினார்.நேற்று மதுரை ஐகோர்ட்டில் அஜித்குமார் தம்பி நவீன்குமார், ''வீட்டுமனை வீட்டில் இருந்து ஆறு கி.மீ., தள்ளி கருவேல மர காட்டினுள் இருப்பதாகவும், 80 கி.மீ., துாரமுள்ள காரைக்குடியில் பணி வழங்கி இருக்கிறது,'' என, அதிருப்தி தெரிவித்தார்.இதையடுத்து ஏனாதி இடத்தை, மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி நேற்று ஆய்வு செய்தார். தாசில்தார் விஜயகுமார், வருவாய் அதிகாரிகள் உடன் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

shreya
ஜூலை 13, 2025 15:50

அவங்க குடும்பத்தில யாரையாவது மிளகாய் தூளை தடவி கொடூரமா கொன்னுருந்தா அவங்களுக்கு அந்த வலி தெரியும். அவன் என்ன கள்ள சாராயம் குடிச்சா செத்தான் அவனுக்கு 10 லக்ஷம் கொடுக்கறதுக்கு. கருவேல காட்டுக்குள்ள வீடா கேட்டான். முதல்ல் அந்த பொய் புகார் கொடுத்த அந்த நிகிதா நாயை கைது பண்ண சொல்லுங்க.


Pascal
ஜூலை 09, 2025 17:27

சென்னை அண்ணா சாலையில் 3 சென்ட் இடமும் சென்னை தலைமை செயலகத்தில் ஐஏஎஸ் பதவிக்கு நிகரான பதவியும் கொடுத்திடலாமா


mermos
ஜூலை 09, 2025 14:02

இவனுக்கு சீப் செக்ரடரி போஸ்ட் குடுங்க.


Tamilarasan Chandrasekar
ஜூலை 09, 2025 13:51

அண்ணன் இறப்பிற்கு நியாயம் தேடமால் அதில் ஆதாயம் தேடும் இந்த தம்பியை நினைத்தால் நெஞ்சு பொறுக்குதில்லையே


jayaraj nagarajan
ஜூலை 09, 2025 11:29

தம்பி நீங்க ஆளும் கட்சியின் ஜால்ரா வா இருந்தால் 10 லட்சம், கிரேடு 3 பணி அருகில் கிடைக்கும், ஆதனால் உடனே சென்னை சென்று கலைஞர் சமாதியில் ஃபோட்டோ எடுத்து போட்டால்தான் நல்ல வேலை கிடைக்கும்


ஜூலை 09, 2025 11:17

நவீன் குமார் அவர்களுக்கு ..சென்னை அண்ணாநகரில் பங்களா வீடு கொடுங்கள்... வீட்டருகே அலுவலகத்தை கட்டி அங்கு அவருக்கு வேலை கொடுங்கள் ..ஆவின் பால் வேலை வேண்டாம் ..மாவட்ட ஆட்சி தலைவர் வேலையாவது அவருக்கு கொடுங்கள் .. அமைச்சர் வேலைகூட கொடுக்கலாம் ...


சமீபத்திய செய்தி