உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போலீஸ் பாதுகாப்பு கேட்டு அஜித்குமார் வழக்கறிஞர் மனு

போலீஸ் பாதுகாப்பு கேட்டு அஜித்குமார் வழக்கறிஞர் மனு

சிவகங்கை; தனிப்படை போலீசாரால் அடித்துக்கொலை செய்யப்பட்ட அஜித்குமாரின் வழக்கறிஞர் கார்த்திக்ராஜா தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கக்கோரி நீதிமன்றத்தில் மனு தந்துள்ளார். சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரை , திருப்புவனம் தனிப்படை போலீசார் நகை திருட்டு வழக்கு தொடர்பாக விசாரிக்க அழைத்துச் சென்று தாக்கியதில் அவர் ஜூன் மாதம் 28 இறந்தார். இது தொடர்பாக போலீசார் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. முக்கிய சாட்சிகளாக கோயில் ஊழியர் சக்தீஸ்வரன், அஜித்தின் சகோதரரான நவீன்குமார், நண்பரான ஆட்டோ டிரைவர் அருண்குமார், சக காவலாளியான பிரவீன்குமார் ஆகியோர் ஏற்கனவே தங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக்கோரி சிவகங்கையில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு கொடுத்திருந்தனர். அதன்படி அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த வழக்கில் அஜித்குமார் தரப்பு வழக்கறிஞர் கார்த்திக் ராஜா நேற்று தனக்கும் அச்சுறுத்தல் இருப்பதாகவும் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறி இதே நீதிமன்றத்தில் மனு கொடுத்தார். கார்த்திக் ராஜா கூறும்போது ''மாவட்ட நீதிபதி மற்றும் மாவட்ட எஸ்.பி., இது குறித்து விசாரித்து பாதுகாப்பு வழங்குவதாக தெரிவித்துள்ளனர்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை