உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஏ.கே.டி., மாணவர்களுக்கு பாராட்டு மாவட்ட அளவில் அபார சாதனை

ஏ.கே.டி., மாணவர்களுக்கு பாராட்டு மாவட்ட அளவில் அபார சாதனை

கள்ளக்குறிச்சி: பிளஸ் 2 தேர்வில் மாவட்ட அளவில் சாதனை புரிந்த கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அரசு பொதுத்தேர்வுகளில் கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., மெட்ரிக் பள்ளி மாணவ, மாணவியர் மாவட்ட அளவில் தொடர்ந்து சாதனை புரிந்து அசத்தி வருகின்றனர். பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் உயிரியல் பிரிவில் மாணவன் ஞானசூரியா 600க்கு 593 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் சாதனை புரிந்துள்ளார். தொடர்ந்து மாணவி சிந்துஜா 592 மதிப்பெண்களும், மாணவர்கள் சந்தோஷ், மணிமாறன், மாணவி தேவதர்ஷினி ஆகியோர் 590 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். மேலும் பள்ளியில், 590க்கு மேல் 5 மாணவர்கள், 580க்கு மேல் 21 பேர், 570க்கு மேல் 34 பேர், 550க்கு மேல் 94 பேர், 500க்கு மேல் 250 பேர், 450க்கு மேல் 416 பேர், 400க்கு மேல் 554 பேர் உயர் மதிப்பெண் பெற்றுள்ளனர். இதில் கணித பாடத்தில் 17; இயற்பியல் 2; வேதியியல் 8; உயிரியல் 2; கணினி அறிவியல் 28; கணக்கு பதிவியல் 1; என மொத்தம் 58 பேர் 'சென்டம்' மதிப்பெண் பெற்றுள்ளனர். மாவட்ட அளவில் சாதனை புரிந்த மாணவ, மாணவியர்களுக்கான பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. விழாவிற்கு ஏ.கே.டி., பள்ளி தாளாளர் மகேந்திரன் தலைமை தாங்கினார். செயலாளர் லட்சுமிபிரியா, நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன், நிர்வாக இணை இயக்குனர் டாக்டர் அபிநயா ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் வெங்கட்ரமணன் வரவேற்றார். விழாவில் சாதனை மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி