உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  சாராயமும், போதைப்பொருளும் தாராளம்: கஸ்துாரி குற்றச்சாட்டு

 சாராயமும், போதைப்பொருளும் தாராளம்: கஸ்துாரி குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பரங்குன்றம்: ''தமிழகத்தில் மூலைக்கு மூலை சாராயமும், போதைப்பொருட்களும் தாராளமாக கிடைக்கின்றன,'' என, திருப்பரங்குன்றத்தில் பா.ஜ., கலை, கலாசார பிரிவு மாநில செயலாளர் நடிகை கஸ்துாரி குற்றம் சாட்டினார். அவர் கூறியதாவது : விடியல் தரப்போகிறார் என ஒருவரை சொன்னார்கள். ஐந்தாண்டுகளாகி விட்டது. விடியல் தான் வரவில்லை. புலம்பெயர் தொழிலாளரை கத்தியால் தாக்கிய அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் திருத்தணியில் ஜமால் என்பவர் மீதும் தாக்குதல் நடந்துள்ளது. தமிழகத்தில் போதை மட்டுமே உள்ளது. திராவிட இயக்கத்தை தொடங்கும் போது பிராமண சமூகத்தை வந்தேறி என்றார்கள். பிறகு வட இந்தியர்களை கூறினர். அதன் பின்பு பா.ஜ., தமிழகத்திற்குள் வந்துவிடும் என பூச்சாண்டி காண்பித்தார்கள். தற்போது வடக்கிலிருந்து வயிற்று பிழைப்பிற்காக வருபவர்களை வடக்கன், பீடா வாயன் என அமைச்சர்களே பேசுகிறார்கள். அவன் நம்ம ஆள் இல்லை என்ற விஷத்தை பரப்பி விட்டார்கள். வந்தாரை வாழவைக்கும் தமிழகத்தில் வெளிமாநிலங்களில் இருந்து வருவதற்கு தற்போது பயப்படுகிறார்கள். தமிழகத்தில் வசிப்பவர்களே நிம்மதியாக வாழ முடியவில்லை. தமிழகத்தில் மூலைக்கு மூலை சாராயமும், போதைப்பொருட்களும் கிடைக்கின்றன. கேட்டால் இரும்பு கரம் கொண்டு அடக்குகிறோம். எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாது எனக் கூறுகிறார்கள். ஒரு காலத்தில் தமிழகத்தை கடவுளாலும் காப்பாற்ற முடியாது என்று சொன்ன ரஜினி, இன்று என்ன சொல்கிறார். தமிழகத்தில் ஜீரோ சதவீதம் தான் கஞ்சா உள்ளது என அமைச்சர் சுப்பிரமணியன் கூறுகிறார். ஆனால் உயர்வகை கஞ்சா கிலோ கிலோவாக புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பிடித்திருக்கிறார்கள். 'யார் அந்த சார்' என்று கேள்விக்கு 'யாருமே இல்லை' என்று சொன்னார்கள். இப்போது 'எங்கே அந்த கஞ்சா' என்று கேட்டால், 'எங்கேயும் இல்லை' என்று தான் சொல்வார்கள் என்றார். ஹிந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சோலை கண்ணன், அகில பாரத அனுமன் சேனா மாநில அமைப்பு செயலாளர் ராமலிங்கம், மாவட்ட செயலாளர் சக்திவேல், பா.ஜ., மாவட்ட தலைவர் சிவலிங்கம் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

GMM
ஜன 02, 2026 08:05

கருணா திமுக, மாநில போலீஸ் துறையை ஆளும் கட்சி கீழ் கொண்டுவந்து விட்டது. கருணாநிதி உள்துறை செயலாளராக இருக்கும் போது அரும்பியது. தற்போது மரம். போலீஸ் மட்டும் தேசிய கட்டுபாட்டில் இருக்க வேண்டும். மாநிலம் விட்டு மாநிலம் பணி மாற்றம் செய்ய வேண்டும். அல்லது சட்ட சபை உறுப்பினர்கள் ஒழுக்க சீலர் என்று தேர்தல் ஆணையம் சான்று வழங்க வேண்டும்.


Durai Kuppusami
ஜன 02, 2026 07:48

மிகவும் சரியான கருத்து ....


தியாகு
ஜன 02, 2026 07:34

என்னது காந்தி செத்துட்டாரா?


raja
ஜன 02, 2026 07:18

திராவிட மாடல் ஆட்சியில் அண்ணா பல்கலைக்கழக சார்கள் கூட தமிழகம் முழுக்க உடன் பிறப்புகளாக தாராளமா இருக்காங்க... பார்த்துங்க..


Svs Yaadum oore
ஜன 02, 2026 07:15

வடமாநில இளைஞரை திருத்தணி தொடர்வண்டி நிலையத்தில் கஞ்சா போதையில் இருந்த 4 சிறுவர்கள் சரமாரியாக வெட்டி ரீல்ஸ் எடுத்து வெளியிட்டார்கள். படுகாயமடைந்த அந்த வட மாநிலத்தவர் ஒரே நாளில் ஆஸ்பத்திரியிலிருந்து அவராகவே டிஸ்சார்ஜ் ஆகி சென்றுவிட்டாராம். இப்படி அறிவித்தது தமிழ் நாடு போலீஸ்.. இப்படி ஒரு படுகேவலமான அட்டுழியும் அராஜகத்தை இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் காண முடியாது ....படு காயம் உடலெங்கும் வெட்டுப்பட்ட அந்த வட மாநிலத்தவருக்கு என்ன ஆனது எங்கு சென்றார் என்ற கேள்விக்கு விடியல் பதில் என்ன ??.....


Svs Yaadum oore
ஜன 02, 2026 07:09

இங்குள்ள மாணவர்கள் மற்றும் அதற்கும் மேல் பள்ளி மாணவிகள் கஞ்சாவிற்கு டாஸ்மாக் ஆட்பட்டு சீரழிந்து கிடக்கிறார்கள், அரசு நிர்வாகத்தின் அத்தனை செயலர்களும், ஆசிரியர்களும் செவிலியர்களும் போராட்டத்தில் இருக்கிறார்கள்.. ஐந்து வருடத்தில் அஞ்சரை லட்சம் கோடி கடன் வாங்கி இருக்கிறார்கள். 40,000 மாணவர்கள் தமிழ் தேர்வில் தோல்வி. இப்படி ஒரு கேவல விடியல் அரசாங்கம் ....இதை சரி செய்ய விடியலுக்கு துப்பில்லை ...


Svs Yaadum oore
ஜன 02, 2026 07:07

தமிழகத்தில் வெளிமாநிலங்களில் இருந்து வருவதற்கு தற்போது பயப்படுகிறார்களாம். பிழைப்பு தேடி பெங்களூரில் மட்டும் 20 லட்சம் தமிழர்கள் .. டெல்லியில் 20 லட்சம் ...குஜராத்தில் பல லட்சங்கள் ...அகமதாபாத் பரோடாவில் தமிழ் சங்கம் தமிழ் பள்ளிகள் உள்ளது ...மும்பை தாராவி மாதுங்கா செம்பூரில் பல லட்சம் ....இப்போதே வட நாடு சென்றால் இங்குள்ள நிலைமை பற்றி பல கேள்விகள் எழுப்புகிறார்கள். இப்படியே போனால் நிலைமை மேலும் மேலும் மோசமாகும் ...


T.sthivinayagam
ஜன 02, 2026 06:45

வரும் சட்டம் மன்ற தேர்தலில் டாஸ்மாக் கடைகளை மூடுவோம் என்று கட்சிகள் வாக்குறுதி அளிக்க வேண்டும் என்று மக்கள் கூறுகின்றனர்.


vivek
ஜன 02, 2026 08:01

திமுக சொல்லுமா என்று உன்னிடம் கேட்கிறோம்..


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ