உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டாஸ்மாக்கை நடத்த ஸ்டாலினுக்கு விருப்பமில்லை

டாஸ்மாக்கை நடத்த ஸ்டாலினுக்கு விருப்பமில்லை

சென்னை : ''மதுக்கடைகள் நடத்துவதில், முதல்வர் ஸ்டாலினுக்கு விருப்பமே இல்லை; என்றாவது ஒரு நாள் அவை மூடப்படும்,'' என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார். 'டாஸ்மாக்' நிறுவனத்தின் 4,829 கடைகளில், தினசரி 150 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகிறது. ஆண்டுக்கு 46,000 கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைக்கிறது. எனினும், மதுவால் நேரும் சமூக, பொருளாதார இழப்புகள் குறித்த விழிப்புணர்வு பெண்களிடம் அதிகரித்தது. அதனால், போராட்டங்கள் வெடித்தன. இதையடுத்து, 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுக்கடைகள் மூடப்படும்' என, சட்டசபை தேர்தலின் போது தி.மு.க., வாக்குறுதி அளித்தது.ஆனால், தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், 500 மதுக் கடைகள் மட்டுமே மூடப்பட்டன. கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து ஏராளமானவர்கள் மரணம் அடைந்ததை அடுத்து, மதுவிலக்கு கோரிக்கை புத்துயிர் பெற்றுள்ளது. அந்த ஊரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, மது ஒழிப்பு மாநாடு நடத்துகிறது. காந்தி ஜெயந்தி நாளான அக்., 2ல் நடக்க உள்ள மாநாட்டில் பங்கேற்குமாறு, அ.தி.மு.க.,வுக்கும் அழைப்பு விடுத்துள்ளார் வி.சி., தலைவர் திருமாவளவன். கூட்டணி கட்சியின் இந்த நடவடிக்கையால், தி.மு.க.,வுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், டாஸ்மாக் நிறுவனத்துக்கு பொறுப்பான அமைச்சர் முத்துசாமி நேற்று ஈரோட்டில் பேட்டி அளித்தார். 'தி.மு.க., கொடுத்த தேர்தல் வாக்குறுதி எப்போது நிறைவேற்றப்படும்; மது விலக்கு எப்போது அமல்படுத்தப்படும்?' என, நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த அமைச்சர் கூறியதாவது:டாஸ்மாக் கடைகள் நடத்துவதில், முதல்வருக்கு துளி கூட விருப்பம் கிடையாது. டாஸ்மாக் கடைகளை முழுமையாக மூட வேண்டும்; முழு மது விலக்கை கொண்டு வர வேண்டும் என்பது தான் அவருடைய விருப்பம். என் விருப்பமும் அது தான். ஆனால், உடனடியாக மதுக்கடைகளை மூட முடியாது. அப்படி செய்தால், என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்பது எல்லாருக்கும் தெரியும். மது குடிப்பவர்களை படிப்படியாக அந்த பழக்கத்தில் இருந்து மீட்டு வெளியே கொண்டு வர வேண்டும். அப்புறம் தான் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். அதற்கான முயற்சிகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. ஆகவே, என்றாவது ஒரு நாள் டாஸ்மாக் கடைகள் நிச்சயமாக மூடப்படும்; அதில் யாருக்கும் சந்தேகமே வேண்டாம். வி.சி., சார்பில் மது ஒழிப்பு மாநாடு நடத்துவதால், எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. அது, அவர்களுடைய கட்சியின் கொள்கை. அந்த அடிப்படையில் முடிவு எடுத்து மாநாடு நடத்துகின்றனர். அதை தவறு என்று சொல்ல முடியாது. மது ஒழிப்பு மாநாடு என்பது, தமிழக அரசுக்கு எதிரான மாநாடு அல்ல. மாநாட்டுக்கு அ.தி.மு.க.,வை அழைத்துள்ளனர். அதனால், கூட்டணியில் மாற்றம் ஏற்படும் என்று சிலர் கூறுகின்றனர். அப்படி எதுவும் நடக்காது. இவ்வாறு முத்துசாமி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 40 )

panneer selvaN
செப் 17, 2024 11:51

டாஸ்மாக்அமைச்சர் சொல்வதை நோட்டீஸ் பாயிண்ட் நோட் பண்ணுக்கப்பா நோட்பண்ணுக்கப்பா மிகவும் அரிது


Matt P
செப் 13, 2024 22:00

மது ஒழிப்பு மாநாடு அறிவிப்பு நல்லாவே வேலை செய்யுது. ..அவரு தான் மூடிடுவோம்னு .சொல்லியாச்சே .அப்புறம் எதுக்கு மாநாடு? எல்லாம் செட் up தானோ என்னவோ.


Matt P
செப் 13, 2024 21:54

அது என்றாவது மூடப்படும் ...நாள் பார்க்காமல் திடீர்னு மூடி குடிகாரனுக்கு அதிர்ச்சி கொடுத்து அவனுகளையும் கொன்று விடுவார்கள் போல. ...எல்லோரிடமும் ஸ்டாலினுக்கு டாஸ்மாக் நடத்த விருப்பமில்லை என்று கிளி பிள்ளை போல சொல்ல அறிக்கை வந்திருக்கு போலிருக்கு...இதை அவரே சொல்லலாமே சொல்ல வெக்கமா இருக்கலாம். . பெருமையை விரும்பாதவர்.


Murugesan
செப் 13, 2024 19:08

தமிழகத்தை சீரழித்த நயவஞ்சக திராவிட அரசியல்வாதிங்க அழிந்தால் தான் தமிழகம் உருப்படும் .


Anand
செப் 13, 2024 14:56

அடாடடா விடியல் இவ்வளவு நல்லவர்னு இத்தனை நாட்களாக நமக்கு தெரியாம போச்சே...


subramanian
செப் 13, 2024 14:25

டாஸ்மாக்கை இப்படி நடத்த விருப்பம் இல்லை. இன்னும் கில்மா வேண்டும் என்று படிக்க வேண்டும்.


ஆரூர் ரங்
செப் 13, 2024 12:37

கைநடுக்கத்தை குறைக்க மது பயன்படுமா?


nv
செப் 13, 2024 12:16

திராவிட மாடல் காமெடியன்


enkeyem
செப் 13, 2024 12:02

தமிழக அரசு சட்ட சபை தேர்தல் நெருங்க நெருங்க இதுபோல காமெடிகள் நிறைய வரும். என்ஜாய் தமிழக பெருங்குடி மக்களே


Shekar
செப் 13, 2024 10:53

அஹா, கொஞ்சங்கூட சிரிக்காம எவ்வளவு சிறப்பா இந்த காமடி வசனத்தை டெலிவரி செய்கிறார். தமிழ் பட இயக்குனர்களே, ஒரு அற்புதமான நகைச்சுவை நடிகர் உங்களுக்கு கிடைத்துள்ளார், பயன்படுத்திகொள்ளுங்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை