உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எதிர்பார்க்கும் மழை அளவு, ஏரி நீர் இருப்பு எல்லாம் தெரிஞ்சிருக்கணும்: அதிகாரிகளுக்கு ஸ்டாலின் உத்தரவு!

எதிர்பார்க்கும் மழை அளவு, ஏரி நீர் இருப்பு எல்லாம் தெரிஞ்சிருக்கணும்: அதிகாரிகளுக்கு ஸ்டாலின் உத்தரவு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'அனைத்து துறை அதிகாரிகளும் இணைந்து செயல்பட வேண்டும்' என முதல்வர் ஸ்டாலின் அறிவுரை வழங்கி உள்ளார்.சென்னை தலைமை செயலகத்தில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக, அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் பேசியதாவது: பருவமழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. முன்னெச்சரிக்கை இருந்தால் எந்த பாதிப்பையும் தடுத்து விடலாம். காலநிலை மாற்றத்தால் ஏற்படும், குறைந்த நேரத்தில் அதீத மழையை எதிர்கொள்வது முக்கியம்

TN ALERT செயலி

கடந்த ஆண்டு வெள்ள பாதிப்பை தமிழக அரசு சிறப்பாக கையாண்டது. காலநிலை மாற்றப் பாதிப்பை எதிர்கொள்வது அவசியம். முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தால் நம்மால் பாதிப்புகளை தடுக்க முடியும். வானிலை முன்னறிவிப்புகளை அறிந்து கொள்ள, தமிழக அரசு TN ALERT செயலியை உருவாக்கியுள்ளது. எதிர்பார்க்கப்படும் மழை அளவு, ஏரிகளின் நீர் இருப்பு, நிலவரத்தை அந்த செயலியின் மூலம் மக்கள் அறிய முடியும். ஒரு உயிரிழப்பு கூட ஏற்படக் கூடாது என்பதில் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் வெள்ள தடுப்பு, மின்கம்பிகளை சரி செய்தல் உள்ளிட்ட பணிகளை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். அனைத்து துறை அலுவலர்களும் இணைந்து பணியாற்றினால் பேரிடர்களை தடுக்க முடியும். பருவமழை ஏற்படும் இடர்பாடுகளை எதிர்கொள்ள அனைவரும் ஓரணியாக நிற்க வேண்டும். பேரிடர்களை எதிர்கொள்ள தேவையான உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. வெள்ள தடுப்பு பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்து துரிதப்படுத்த வேண்டும்.

ஒற்றுமையாக செயல்படுங்கள்!

அனைத்து துறை அதிகாரிகளும் இணைந்து செயல்பட வேண்டும். பால், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு இன்றி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். வெள்ளத்திற்கு முன்பாகவே பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அரசுத்துறை ஒருமித்த கருத்தோடு, ஒற்றுமையோடு செயல்பட்டால் வெற்றி நிச்சயம். வெள்ளம் ஏற்பட்டதும் எவ்வளவு விரைவாக செயல்பட முடியுமோ அவ்வளவு விரைவாக செயல்பட வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

ram
அக் 01, 2024 04:42

அட... அக்கரையா பேசுறாப்ளே...


ஆரூர் ரங்
செப் 30, 2024 21:18

மழை வெள்ள பேக்கேஜ் எவ்வளவு ஆட்டையை போடலாம்ன்னு முன்கூட்டியே எஸ்டிமேட் போடத்தானே?


அயிராவதம்
செப் 30, 2024 15:56

எங்கேயெல்லாம் அடைப்பு வரும்னு தெரிஞ்சிருக்கணும். எப்போ மழை வரணும்னு தெரியணும். அப்பப்போ துண்டு சீட்டில் எழுதிக் குடுக்கணும். புது பொறுப்பு அமைச்சருக்கும் சொல்லிக் குடுக்கணும்.


Kumar Kumzi
செப் 30, 2024 15:45

பார்ர்ரா அமெரிக்கா போயி சைக்கிள் சாகசம் செய்துட்டு வந்த பிறகு விடியலுக்கு அறிவு வளர்ந்துருச்சி ஹீஹீஹீ


sridhar
செப் 30, 2024 14:20

Stalin tolded that officials should knowed the levelled of watered in the lakesed .


hari
செப் 30, 2024 13:51

எதிர்பார்த்த மழை வரலைனா மேகத்தை பிழிஞ்சி மழை எடுக்கோணும்.... நீங்க சொல்லுங்க தலைவரே


theruvasagan
செப் 30, 2024 14:44

இல்லை. இல்லை. மேகத்துல ஓட்டை போட்டுட்டா தன்பாட்டுக்கு தண்ணி கீழ ஊத்திக்கும். நாம் எதிர்பார்க்கற அளவு வந்ததும் ஓட்டையை அடைச்சுடலாம்.


krishna
செப் 30, 2024 13:50

DRAVIDA MODEL KUMBALAI SOLLI KUTTRAM ILLAI.


RAMAKRISHNAN NATESAN
செப் 30, 2024 13:22

புதிய சட்டமன்றக்கட்டிடம் - இன்று அது மருத்துவமனை - கட்டும்போது கருணாநிதி கூட இன்ஜினியர்களுக்கு ஆலோசனை சொன்னதுண்டு ........திராவிடத் தலைவர்கள் ஈடு இணையற்ற அறிவுத்திறம் படைத்தவர்கள் .....


sundarsvpr
செப் 30, 2024 13:11

என்ன தான் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்தாலும் நேர்மை இருக்கவேண்டும். அரசியல்வாதிகளை விட மற்ற எல்லோரும் நேர்மையானவர்கள் அரசு அலுவலர்கள் உட்பட. நீர் தேங்காமல் வழித்தடங்களில் தடங்கல் இல்லாமல் நீர் சென்றிட என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று பொதுப்பணித்துறை வேளாண்மை துறை அதிகாரிகள் இப்போதே சொல்வது நல்லது. இதனால் பொதுமக்கள் தைரியமாய் இருப்பார்கள்.


ஆரூர் ரங்
செப் 30, 2024 13:09

அதை விட முக்கியம். நீர்நிலைகளிலுள்ள மணல் நிலவரம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை