உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகம் முழுதும் அரசு டாக்டர்கள்... போராட்டம்

தமிழகம் முழுதும் அரசு டாக்டர்கள்... போராட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் அரசு மருத்துவமனையில் டாக்டர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்து, தமிழகம் முழுதும் அரசு டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவசர சிகிச்சையை தவிர்த்து, மற்ற சேவைகளை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.சென்னை கிண்டி அரசு பல்நோக்கு மருத்துவமனையில், புற்றுநோய் துறை தலைவர் பாலாஜியை, ஒரு நோயாளியின் மகன் கத்தியால் சரமாரியாக குத்தினார். காயமடைந்த டாக்டர் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=rdjheccp&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

ஆர்ப்பாட்டம்

சம்பவத்தை கண்டித்து, அரசு டாக்டர்களுக்கான அனைத்து சங்கங்களும் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்தன. மருத்துமவனை வளாகங்களில் டாக்டர்கள் கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். போராட்டம் அறிவித்த சங்க நிர்வாகிகளுடன், நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் பேச்சு நடத்தினார். அவர்கள் தனித்தனியாக கோரிக்கைகளை கூறினர். அவற்றை நிறைவேற்றுவதாக, அமைச்சர் உறுதி அளித்தார். அதையடுத்து, அரசு டாக்டர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு சங்கம், போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தது. ஆனால், அரசு டாக்டர்கள் சங்கத்தினர், போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர். இதுகுறித்து, தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க தலைவர் செந்தில் கூறியதாவது:மருத்துவமனை பாதுகாப்பு சட்டம் மற்றும் பி.என்.எஸ்., எனும் புதிய குற்றவியல் சட்டத்தின் கீழ், குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அரசு மருத்துவமனைகளில், புறக்காவல் நிலையங்கள் எண்ணிக்கை அதிகரிப்பதுடன், பணியாளர்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டும்.நோயாளியுடன் வருவோருக்கு, 'உதவியாளர் பாஸ்' வழங்கி, வார்டுக்குள் வருபவர்களை கட்டுப்படுத்த வேண்டும்.இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுதும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் அவசரகால சேவை மற்றும் உயிர் காக்கும் நடைமுறைகள் தவிர, அனைத்து புறநோயாளிகள், திட்டமிடப்பட்ட அறுவை சிகிச்சைகள், கூட்டங்கள், மாணவர்களின் வகுப்புகள் ஆகியவை புறக்கணிக்கப்படும்.

போராட்டம் தொடரும்

கோரிக்கைகளை ஏற்பதாக அமைச்சர் கூறினார். ஆனால், ஒவ்வொரு முறையும் அப்படி சொல்லி விட்டு, கிடப்பில் போடுவதே வாடிக்கை. எனவே, இம்முறை கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்.இவ்வாறு செந்தில் கூறினார்.அரசு டாக்டர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு டாக்டர்கள் சங்க செயலர் ராமலிங்கம் கூறியதாவது:கோரிக்கையை ஏற்பதாக அமைச்சர் உறுதி அளித்துள்ளார். எனவே, மக்கள் பாதிக்கப்படாதவாறு சேவையை தொடர்கிறோம். அடையாள தர்ணா மற்றும் ஒத்துழையாமை போராட்டத்தில் ஈடுபடுவோம். மருத்துவ சேவையை தவிர, வகுப்புகள், கூட்டங்கள் போன்றவற்றை, அடுத்த மூன்று நாட்களுக்கு புறக்கணிக்கிறோம். இவ்வாறு ராமலிங்கம் கூறினார்.இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழக கிளை தலைவர் அபுல் ஹசன் கூறுகையில், ''இன்று மாலை 6:00 மணி வரை, எங்கள் சங்கத்தின், 45,000 டாக்டர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவர். அவசர சிகிச்சையை தவிர, மற்ற சேவைகளான தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகள் புறக்கணிக்கப்படும்,'' என்றார்.

பேச்சில் சுமுக தீர்வு

டாக்டர் பாலாஜி, நலமுடன் உள்ளார். டாக்டர்களுடனான பேச்சில், சுமுக தீர்வு ஏற்பட்டுள்ளது. கிண்டி மருத்துவமனையில், புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து மருத்துவமனைகளிலும் நோயாளிகளின் உறவினருக்கான, உதவியாளர் பாஸ் நடைமுறைப்படுத்தப்படும். மருத்துவ கல்லுாரிகள், மாவட்ட, வட்டார மருத்துவமனைகளில், 'சிசிடிவி கேமரா' பொருத்தப்பட்டுள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கேமரா பொருத்தும் பணி நடக்கிறது. விக்னேஷ் தாய்க்கு தேவைப்பட்டால், சிகிச்சை அளிக்கப்படும். - அமைச்சர் சுப்பிரமணியன்.

அவசர நடவடிக்கை அவசியம்!

டாக்டர் பாலாஜி ஜெகநாதன் மீதான தாக்குதல் அதிர்ச்சி அளிப்பதுடன், வன்மையாக கண்டிக்கத்தக்கது. டாக்டர்களுக்கு எதிரான எந்தவொரு வன்முறையும் முற்றிலும் ஏற்க முடியாதது. டாக்டர்கள் மற்றும் சுகாதாரத் துறையினரின் பாதுகாப்பை, குறிப்பாக மருத்துவமனைகளில் உறுதிப்படுத்த, அவசர மற்றும் உடனடி நடவடிக்கைகள் அவசியம். டாக்டர் பாலாஜி விரைவாக உடல் நலம் பெற வேண்டிக் கொள்கிறேன்.- கவர்னர் ரவி

கொடுமையிலும் கொடுமை

கடலுார் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சமூக முன்னேற்ற சங்க மாநில தலைவர் சிவப்பிரகாசத்தின் தந்தையை, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது அவர் கூறியதாவது:சென்னை மருத்துவமனையில் அரசு டாக்டர் தாக்கப்பட்டது கொடுமையிலும் கொடுமை. இதுபோன்ற நிகழ்வு நடக்கக் கூடாது. டாக்டர்களுக்கு பணி பாதுகாப்பு இல்லை என்பது இதன் மூலம் தெரிகிறது. டிஜிட்டல் கிராப் சர்வே பணிகளுக்கு மாணவ - மாணவியரை ஈடுபடுத்தக் கூடாது.இவ்வாறு அவர் கூறினார்.

முதல்வர் நலம் விசாரிப்பு

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் டாக்டர் பாலாஜியை மொபைல் போனில் தொடர்பு கொண்டு, முதல்வர் ஸ்டாலின் நலம் விசாரித்தார்.

சர்வதேச தரத்தில் சிகிச்சை

பிரேமா புற்றுநோய் முற்றிய நிலையில் தான் மருத்துமவனைக்கு வந்தார். சர்வதேச தரத்திலான சிகிச்சை அளித்தோம். புற்றுநோயின் ஐந்தாவது கட்டம் என்பதால், அவரை காப்பாற்றுவது கடினம். இருக்கும் வரை, வலி இல்லாமல் வாழ தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. கேன்சர் பரவி இருந்ததால் நுரையீரல் பகுதி அகற்றப்பட்டது. சிகிச்சையில் தவறும் இல்லை; தாமதமும் இல்லை.--பார்த்தசாரதிகிண்டி மருத்துவமனை இயக்குனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 35 )

தாமரை மலர்கிறது
நவ 15, 2024 02:02

ஊருக்கு மூன்று அரசு மருத்துவமனைகள் கட்டப்படவேண்டும். வளர்ந்துள்ள மக்கள்தொகைக்கு ஏற்ற போதுமான மருத்துவமனைகள், டாக்டர்கள் இல்லை. இலவச பணம் அல்லது இலவச மகளிர் பேருந்து தேவை இல்லை. திருட்டு திராவிடம் செய்ய வேண்டியதை செய்யாமல், இலவசங்களை கொடுத்து கொண்டிருக்கிறது.


T.sthivinayagam
நவ 14, 2024 21:47

கோவில் நீதிமன்றம் மருத்துவம் எல்லாம் நல்லவங்க கிட்ட தான் இருக்கனும்


Barakat Ali
நவ 14, 2024 17:19

குத்திய இளைஞர் நீதிமன்றத் காவலில் உள்ளார் ..... இதுவரை அவர் மட்டுமே தனது தாயைக் கவனித்து வந்ததாகத் தெரிகிறது .... இனி அவரது தாயைக் கவனிக்கப்போவது யார் ????


Bahurudeen Ali Ahamed
நவ 14, 2024 13:51

அரசு மருத்துவர்களே , நீங்கள் ஒன்றை கவனித்தீர்களா, உங்களுக்கு ஆதரவாக எந்த ஒரு பொதுமக்களும் திரளவில்லையே , ஏன் ? உங்கள் தனியார் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் பரிவாக பேசும் நீங்கள், அதில் பாதி அளவாவது பரிவாக அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் பேசினால் நன்றாக இருக்கும், அதிலேயே பாதி குணமடைந்து விடுவார்கள், நோயைப்பற்றி விரிவாக கேள்வி கேட்டால் எரிந்து விழுந்து துரத்தி அடிக்கிறீர்கள் அது ஏன்?, அரசிடம் என்றைக்காவது மருத்துவமனையின் தரத்தை உயர்த்த, கழிப்பிட வசதியை அதிகரிக்க சொல்லி போராட்டம் செய்திருக்கிறீர்களா?, மக்கள் இலவசமாக சிகிச்சை பெறுவது என்பது பிச்சை அல்ல அது அவர்களின் உரிமை, நமது அரசாங்கத்தின் கடமை


கத்தரிக்காய் வியாபாரி
நவ 14, 2024 14:30

மிக சரியான கருத்து. ஏழை மக்கள் வரும் போது எத்தனை மருத்துவர்கள் முகம் சுளித்துக்கொண்டு எடுத்தெறிந்து பேசுபவர்களை நான் பார்த்துள்ளேன். உங்களை வந்து தொல்லை படுத்துவது அவர்கள் நோக்கம் அல்ல.


N.Purushothaman
நவ 14, 2024 14:58

இவிங்க தொடர் போராட்டம் நடத்தினால் இவர்களுக்கு எதிராக மக்களே திரண்டு போராட ஆரம்பித்து விடுவார்கள் ...


SUBRAMANIAN P
நவ 14, 2024 13:37

அரசாங்கம் தாக்கப்பட்ட மருத்துவருக்கே சப்போர்ட் செய்யும். மருத்துவருக்கு சங்கம் பின்புலம் இருக்கிறது. சங்கங்களை கண்டு பயப்படாத அரசு இல்லை. ஆனால் கத்தியால் தாக்கிய பையனின் பக்கம் என்ன பிரச்சனை என்பதை யாரும் கவனிப்பதில்லை. அரசும் கண்டுகொள்ளாது. ஏனென்றால் மக்களிடம் ஒற்றுமை இல்லை/ . அவர்களுக்கு ஞாயத்தை பற்றி கவலை இல்லை. இதே நிலைமை சாமானிய மக்கள் எவருக்கும் அடிக்கடி வரலாம். சகித்துக்கொண்டு போகவேண்டும். அவ்வளவுதான்.


Indian
நவ 14, 2024 13:25

ஒரு ஆளு அரசு மருத்துவருக்கு ஆதரவாக கருத்து எழுதுகிறார்களா ??? இதில் இருந்தே அவர்கள் லச்சனத்தை தெரிந்து கொள்ளலாம் ..


surya krishna
நவ 14, 2024 12:43

tamilnadu government doctors are thieves.


வைகுண்டேஸ்வரன்
நவ 14, 2024 12:38

கோவை அரசு மருத்துவமனை சூப்பரா இருக்கிறது. நல்ல பெரிய இடம். சுத்தமா இருக்கு. நல்ல டாக்டர்கள், நர்ஸ்கள், வார்டுபாய்கள். எங்கேயும் பணம் கொடுக்க வேண்டாம்.


Barakat Ali
நவ 14, 2024 14:15

அது சரி ..... இந்த நிலை இந்த ஆட்சியில் மட்டும்தான் ஏற்பட்டதா ????


Indian
நவ 14, 2024 12:10

தமிழ் நாட்டை விட கேரளா அரசு மருத்துவமனை எவ்வளவோ மேல் ..


Indian
நவ 14, 2024 12:08

அரசு மருத்துவமனையில் பெரும்பாலான மருத்துவர்களின் செயல்பாடுகள் மகா மட்டம் என்பது அனைவரும் அறிந்தஒன்று. அரசு மருத்துவமனைகளில் எல்லா வசதிகள் இருந்தும் தனியார் மருத்துவமனைகளை மக்கள் நாடுவதற்கு முக்கிய காரணம் அரசு மருத்துவர்களின் மோசமான அணுகுமுறைதான்.


புதிய வீடியோ